ஃபாலோவ்
Ayisha💞
@ayishaislam
22,772
போஸ்ட்
77,015
பின்தொடர்பவர்கள்
Ayisha💞
4.3K காட்சிகள்
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சிய நலன்கள்! யா அல்லாஹ்! கோரிக்கைகளில் சிறந்ததை!, துஆக்களில் சிறந்ததை! உயர்ந்த வெற்றியை! நேர்த்தியான அமலை! மேலான நற் கூலியை! நல்வாழ்வை, நல்மரணத்தை உன்னிடம் வேண்டுகிறேன்! என்னை உறுதியோடு நிற்கச் செய்வாயாக! எனது நன்மையின் தட்டையைக் கனமாக்குவாயாக! எனது ஈமானை வலுவாக்குவாயாக! எனது பதவியை உயர்த்துவாயாக! எனது தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக! என் பிழையைப் பொறுத்தருள்வாயாக! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் நல்லதொடக்கத்தையும், அதனுடைய நல்ல முடிவுகளையும், அவற்றை ஒன்று திரட்டி தருபவைகளையும் அவற்றில் ஆரம்பமானதையும், அவற்றின் இறுதியையும், புறத்துள்ளவற்றையும், அகத்தில் உள்ளவற்றையும் கேட்கிறேன்! உன்னிடம் சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உறுப்புகளால் புரியும் காரியங்களின் நலன்களையும்! இதயத்தால் எண்ணும் செயல்களின் நலன்களையும்! நான் செய்யும் மற்ற அமல்களின் நலன்களையும்! என் செயல்களின் நலன்களையும்! அகத்திலுள்ளவற்றின் நலன்களையும்! புறத்திலுள்ளவற்றின் நலன்களையும்! சுவனத்தின் உயர்பதவிகளையும் கேட்கிறேன்! யா அல்லாஹ்! உன்னிடம் என் பெயரை உயர்த்தும் படியும், என் பாவச்சுமைகளை என் முதுகிலிருந்து இறக்கிவிடுவதையும், என் விவகாரங்களை சீர்படுத்துவதையும், என் இதயத்தைத் தூய்மையாக்குவதையும், என் கற்பொழுக்கத்தை பாதுகாப்பதையும், என் கப்ரை ஒளியாக்குவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்! யா அல்லாஹ்! நான் உன்னிடம் என் செவி, என் பார்வை, என் உயிர், என் உடல், என் குணம், என் குடும்பம், என் செல்வம், என் வாழ்வு, என் மரணம், என் செயல் இவையனைத்திலும் நீ பரக்கத் செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்! மேலும், சுவனத்தின் உயர்பதவிகளைக் கேட்கிறேன்.(ஹாகிம்) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹபிஹி அஜ்மயீன். வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஆமீன். #🕋யா அல்லாஹ்
Ayisha💞
1.7K காட்சிகள்
💞யா அல்லாஹ்! எங்களுடைய இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக! தொழுகையில் ஸஜ்தாவில், குர்ஆன் ஓதிய நிலையில் உன்னை திக்ரு செய்யும் நிலையில் நீ பொருந்திக் கொள்ளக்கூடிய நிலையிலே எங்களுக்கு இறுதி முடிவை வழங்குவாயாக! யா ரஹ்மானே! #🕋யா அல்லாஹ்
Ayisha💞
2K காட்சிகள்
💞 எங்கள் இறைவா! எங்களின் காலை நேரத்தை நல்லோர்களின் காலை நேரமாகவும்! எங்களின் மாலை நேரத்தை உன்னை திக்ரு செய்பவர்களின் மாலை நேரமாகவும்! எங்களின் உள்ளங்களை உன்னை பயப்படுவோரின் உள்ளங்களாகவும்! எங்களின் சரீரங்களை உனக்கு வழிபடுவோரின் சரீரங்களாகவும்! எங்களின் அமல்களை முத்தகீன்களுடையா அமல்களாகவும்! எங்களுடைய நாவுகளை திக்ரு செய்பவர்களின் நாவுகளாகவும், ஆக்கியருள்வாயாக! மேலும் மறதியாளர்களின் தூக்கத்தை விட்டு எங்களை விழிப்படையச் செய்வாயாக! நல்லோர்களின் துஆவில் எங்களை இணைத்தருள்வாயாகா! அகிலத்தார்களை இரட்சித்துக் காப்பாற்றுபவனே! சொர்க்கத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! எங்களின் தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர், தோழர்கள் அனைவரின் மீதும் எங்களின் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்திடுவானாகா! அகில உலகங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானவையாகும். ஆமீன்! ஆமீன்! ஆமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள்
Ayisha💞
2.8K காட்சிகள்
💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! யா அல்லாஹ்! உன்னுடைய பாதுகாப்புவளையத்தைக் கொண்டு மனிதர்கள், ஜின்களின் தீங்கிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எங்கள் மீது உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! எங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வாயாக! பொறாமைக்காரர்கள், வன்நெஞ்சம் கொண்டவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ்! பொறாமைக்காரர்கள்! குழப்பவாதிகள்! பிரிவினைவாதிகள்! நயவஞ்சகர்கள்! மடையர்கள்! ஜின் மனித சைத்தான்கள்! ஆகியவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்! யா அல்லாஹ்! முடிச்சுப் போட்டு ஊதும் சூதுக்கார ஆண், பெண்களின் தீங்கைவிட்டும், தீயவர்களின் கண்ணேறு தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக! اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கிலிருந்தும் وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கிலிருந்தும், وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கிலிருந்தும், وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏ பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கிலிருந்தும் பாதுகாக்கக் கோருகின்றேன் (அல்குர்ஆன் : 113:1,2,3,4,5) ஆமீன் #🕋யா அல்லாஹ்
Ayisha💞
4.4K காட்சிகள்
💞 நபிமொழி! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்! ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது ஒருவர் அல்லாஹ்விடம் மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி திர்மிதி 2572 💞யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! !யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! 💞யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்! ! #🕋யா அல்லாஹ்
See other profiles for amazing content