ஃபாலோவ்
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
@kalaiselvan6196
53,785
போஸ்ட்
39,035
பின்தொடர்பவர்கள்
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
628 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 28 உலகளாவிய பசி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு பசியிலிருந்து சுதந்திரத்தை மேம்படுத்தவும் செப்டம்பர் 28, 2006 அன்று பசியிலிருந்து சுதந்திர தினம் நடத்தப்பட்ட நாள் இந்தியா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பசியிலிருந்து சுதந்திரம் செயல்படும் பகுதிகளின் நடைப்பயணக் கண்காட்சிகள் இந்த நிகழ்வில் அடங்கும். கூடுதலாக, பசியிலிருந்து சுதந்திரம் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட்களை வழங்கியது, அதில் ஒவ்வொரு பிராந்தியத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார தகவல்களும் ஒவ்வொரு கண்காட்சியிலும் முத்திரையிடப்பட்டன. நிகழ்வின் வெற்றியின் விளைவாக, யோலோ கவுண்டி செப்டம்பர் 28 ஆம் தேதியை "பசியிலிருந்து விடுதலை நாள்" என்று உறுதிசெய்தது, கலிபோர்னியா மாநிலம் அந்தத் தேதியை அதிகாரப்பூர்வ விழிப்புணர்வு நாளாக அறிவித்தது மற்றும் சாக்ரமெண்டோ பகுதியில், இந்த நிகழ்வு தங்கப் பொதுமக்களை வென்றது. உறவுகளுக்கான விருது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
655 காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 28 1961 - சிரியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு, ஐக்கிய அரபுக் குடியரசை முடிவுக்குக்கொண்டுவந்து, மீண்டும் சிரியக் குடியரசை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபுக் குடியரசு என்பது, எகிப்தும், சிரியாவும் இணைந்து 1958இல் உருவான நாடாகும். அனைத்து அரபு நாடுகளையும் ஒன்றிணைக்கவேண்டுமென்ற முயற்சியின் தொடக்கமாக இது உருவாக்கப்பட்டது. எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்தெல் நாசர், 1956இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து, அதன்மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடுத்த சூயஸ் போருக்குப்பின்(இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர்), அரபு நாடுகளிடையே நாசர்மீதான மதிப்பை மிகஅதிகமாக உயர்த்தியிருந்தது. ஒருங்கிணைந்த அரபு நாடு என்ற உணர்வு வழமையாகவே நிறைந்திருந்த சிரியாவில், நாசரின் தலைமைமீது பரவலான ஈர்ப்பு இருந்தது. சமூகவுடைமைச் சிந்தனைகொண்ட முற்போக்காளரான நாசர், பல்வேறு நவீனமய நடவடிக்கைகளை எகிப்தில் மேற்கொண்டிருந்தார். சிரியாவில் பலம்வாய்ந்த பொதுவுடைமைக் கட்சி இருந்ததுடன், புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதியும் பொதுவுடைமைச் சிந்தனைகொண்டவராக இருந்தார். அமெரிக்க சோவியத் பனிப்போர்க் காலமென்பதால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடும் என்று அச்சமுற்ற அமெரிக்காவின் தூண்டுதலில், சிரிய எல்லையில் துருக்கி படைகளைக் குவித்த 1957இன் நெருக்கடிக்குப்பின், சிரியா எகிப்துடன் இணைந்துகொள்ள விரும்பியது. இரு நாடுகளையும் இணைத்துவிடுவதைவிட, ஓர் ஒன்றியமாகச் செயல்படலாம் என்பதே நாசரின் கருத்தாக இருந்தது. ஆனால், பொதுவுடைமைக் கட்சியின் பலத்தால், சிரியா பொதுவுடைமை நாடாகிவிடுமென்ற அச்சம், சிரியாவின் பாத் கட்சிக்கும் இருந்ததால், அதன் வற்புறுத்தலாலேயே, ஒரே நாடாக இணைக்க நாசர் ஒப்புக்கொண்டார். 1958 ஃபிப்ரவரி 22இல் ஐக்கிய அரபுக் குடியரசு உருவானது. எகிப்தின் தலைமையில், தாங்கள் ஆட்சி நடத்தலாம் என்ற பாத் கட்சியினர், பெருமுதலாளிகளின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஒற்றைப் பாராளுமன்றத்தை அமைத்த நாசர், பாத் உட்பட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்துவிட்டார். பாராளுமன்றத்தில் மூன்றிலொரு பங்கு சிரியாவுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பாத் கட்சி எதிர்பார்த்தபடி அதிகாரம் கிடைக்கவில்லை. மறுபுறம், ஏற்கெனவே எகிப்தில் செய்ததுபோல, முக்கியத்துறைகளை தேசவுடைமையாக்கினார் நாசர். பாத் கட்சியினர், பெருமுதலாளிகள் ஆகிய இருதரப்புமே நாசருக்கு எதிராக மாறியதைத் தொடர்ந்து, 1961 செப்டம்பர் 28இல் ஒரு ராணுவக் கலகத்தின்மூலம் சிரியாவின் ஆட்சியைக் கைப்பற்றி, சிரியா தனி நாடானதாக அறிவித்தனர். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
568 காட்சிகள்
17 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு *டணால் கே. ஏ. தங்கவேலு (K. A. Thangavelu) (இறப்பு: 28 செப்டம்பர், 1994)* வரலாற்றில் இன்று ஜனவரி 15,1917 நடிகர் கே. ஏ. தங்கவேலு (K. A. Thangavelu) பிறந்ததினம். 1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். டணால் தங்கவேலு என்று பரவலாக அழைக்கப்படுபவர். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் புகழ்பெற்றது. இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் , இவரை மேலும் புகழ் பெறச் செய்தது. இல்வாழ்க்கை நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் இணையராக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர். நினைவுகளின் சிறகுகள்: கே.ஏ. தங்கவேலு - அண்ணே என்னைச் சுடப்போறாங்க! சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது. ‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்! “தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி! ‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’ ‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு. சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார். ‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம். எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம். தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன். ‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’ சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி. பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர். 1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர். 2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார். 3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு. 4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார். 5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார். 6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது. 7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார். 8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர். 9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. 10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
410 காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
#🤔தெரிந்து கொள்வோம் #🤔 Unknown Facts திரைப்படம் காட்டும் கருவி (Projector) பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: வரலாற்றுச் சுருக்கங்கள் * முதல் முன்னோடி (Magic Lantern): திரைப்படம் காட்டும் கருவியின் முதல் முன்னோடியாகக் கருதப்படுவது மேஜிக் லேன்டர்ன் (Magic Lantern) ஆகும். இது 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு எளிய கருவி ஆகும். இது ஒளியின் மூலத்தைப் பயன்படுத்திக் கண்ணாடி ஸ்லைடுகளைச் சுவற்றில் காட்டியது. * நிழற்கூத்து (Shadow Puppetry): இதற்கும் முன்பு, நிழல்களைக் கொண்டு சுவற்றில் கதைகள் சொல்லும் நிழற்கூத்து என்பது படங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆரம்ப வடிவமாக இருந்தது. * முதன்முதலில் நகரும் படங்கள்: 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரும் படங்களைக் காட்டும் கருவிகள் (Kinetoscope, Chronophotographic device) கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு இந்தக் கருவித் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்தது. நவீன அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் * கண்களுக்குக் குறைவான சோர்வு: தொலைக்காட்சிகள் ஒளியை நேரடியாக வெளியிடுகின்றன, ஆனால் திரைப்படம் காட்டும் கருவிகள் ஒளியை எதிரொளிப்பதன் மூலம் செயல்படுகின்றன. இந்த எதிரொளிக்கப்பட்ட ஒளி கண்களுக்குக் குறைவான சோர்வைத் தருகிறது. * திரையின் அளவைக் கட்டுப்படுத்துதல்: உங்கள் இடத்தில் உள்ள இடைவெளி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, திரையின் அளவை (Screen Size) சுலபமாக மாற்றிக்கொள்ளும் (Adjust) தனித்துவமான வசதி இந்தக் கருவியில் உள்ளது. நீங்கள் 300 அங்குலம் அல்லது அதற்கும் மேலான பெரிய படங்களைக் கூடக் காட்ட முடியும். * பல்வேறு இடங்களுக்கான பயன்பாடு: இது வீடுகளில் ஹோம் தியேட்டர் (Home Theater) அமைப்பது முதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களைச் சொல்லித் தருவது, வணிகக் கூட்டங்களில் PowerPoint Presentations காட்டுவது, மற்றும் வீடியோ கேம்ஸ் (Video Games) விளையாடுவது வரை பலவகையான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. * ஊடாடும் கருவிகள் (Interactive Projectors): இன்றைய அதிநவீன கருவிகள் வெறுமனே படங்களைக் காட்டுவதுடன் நிற்காமல், திரையில் காட்டப்படும் உள்ளடக்கத்துடன் பயனர்கள் ஊடாடவும் (Interact) உதவுகின்றன. இவை திரைப்படம் காட்டும் கருவி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்! *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
563 காட்சிகள்
19 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.செப்டம்பர். 28 எழுத்தாளர் மகரிஷி நினைவு தினம் இன்று (2019). மகரிஷி என்ற புனைபெயரைக் கொண்ட பாலசுப்பிரமணி ஐயர் தமிழக எழுத்தாளர் ஆவர். மகரிஷியின் பிறந்த ஊர் தஞ்சாவூர். சேலத்தில் வசித்தவர். இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனத்தில் பணியாற்றினார். மகரிஷி என்ற பெயரில் இவர் கிட்டத்தட்ட 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும். இதன் கதை 1965 இல் "என்னதான் முடிவு" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது ஏனைய கதைகள் பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
569 காட்சிகள்
20 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 28 1889 – நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது. இவற்றிற்கான மூல முன்மாதிரிகள் (ப்ரோட்டோடைப்), பிளாட்டினம்-இரிடியத்தால் உருவாக்கப்பட்டதுடன், அவற்றின் நகல்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1668இலேயே ஜான் வில்க்கின்ஸ் என்ற ஆங்கிலேயே மெய்யிலாளர், பதின்ம அடிப்படையிலான நீள அளவையை முன்மொழிந்திருந்தார். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், அறிவியல் முன்னேற்றங்களின் கணக்கீடுகளுக்கு உதவியாக இல்லாத பழைய அளவீடுகளை மாறற விரும்பிய ஃப்ரெஞ்சு அறிவியல் கழகம் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையமே 1791இல் பதின்ம அடிப்படையிலான நீள அளவையையும், மீட்டர் என்ற சொல்லையும் கொண்டுவந்தது. கிரேக்க மொழியில் அளவிடுதல், எண்ணுதல், ஒப்பிடுதல் என்ற பொருள்தரும் வினைச் சொல்லான மீட்ரியோ, அளவீடு என்ற பொருள்தரும் பெயர்ச்சொல்லான மீட்ரான் ஆகியவற்றிலிருந்து இந்த மீட்டர் வந்தது. இதற்கான அளவு பலவாறு நிர்ணயிக்கப்பட்டு, பொதுத்தன்மை இல்லாமலிருந்த நிலையில்தான், 1875 மே 20 அன்று 17 நாடுகள் கையெழுத்திட்ட மீட்டர் ஒப்பந்தத்தின்படி, இந்த முதல் மாநாடு இவற்றுக்கான பொது அளவை நிர்ணயித்தது. இந்த மாநாடு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கூடி பல்வேறு அளவைகளையும் நிர்ணயம் செய்கிறது. எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பன்னாட்டு அமைப்பு, இதற்கான குழுவின்மூலம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது (1901) மாநாட்டில் லிட்டர், நான்காவது (1907) மாநாட்டில் காரட், ஒன்பதாவது (1948) மாநாட்டில் ஆம்பியர், வாட் முதலான அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1948 மாநாட்டில்தான் வெப்ப அளவைக்கு பாகை செல்சியஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீட்டர், கிலோகிராம், நொடி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இது எம்கேஎஸ் முறை என்றழைக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, 1960இல் நடைபெற்ற 11ஆவது மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளுக்கான பன்னாட்டு (எஸ்ஐ) முறையை, அமெரிக்கா, லைபீரியா, மியான்மர் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றன. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
583 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று.செப்டம்பர். 28 ஷீரடி சாய் பாபா பிறந்த தினம் இன்று(1838). ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மீக மகான் ஷிர்டி சாய் பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிறந்தார். ஷீரடியில் பழைய மசூதி அருகே வேப்பமரத்தின் அடியில் 8 வயதில் தியானம் செய்தார். பின்னர், ஊரைவிட்டுச் சென்றார், 16 வயதில் ஒளிபொருந்திய தோற்றத்துடன் ஷீரடி திரும்பினார். அவரைப் பார்த்த பூசாரி, 'ஸ்வாமி" என்று பொருள்படும் வகையில் 'சாய்" என்று அழைத்தார். 'அப்பா" என்று பொருள்படும் வகையில் 'பாபா" என்றும் அழைக்கப்பட்டார். எண்ணிலடங்கா பக்தர்களால் போற்றி வழிபடப்பட்டு வரும் ஷீரடி சாய் பாபா 82ஆவது வயதில் மறைந்தார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
795 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
#🌎பொது அறிவு *செப்டம்பர் 28,* *பசுமை நுகர்வோர் தினம்* (Green Consumer Day) பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
See other profiles for amazing content