ஃபாலோவ்
Motivation Tamil
@tmotivation
46
போஸ்ட்
148
பின்தொடர்பவர்கள்
Motivation Tamil
537 காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
💁‍♀️ சிந்தனைக்கு 🧠 பிடித்து வைத்தால் - பாரம் உன் மனதிற்கு ! விட்டுவிட்டால் - நிம்மதி வாழ்வில் அதுவே நல்லது நமக்கு! ஏனெனில், வாழ்க்கையில் சில விடயங்களை விட்டுப்போட பழகிக் கொள்ள வேண்டும்... ➤ கையில் பிடித்திருக்கும் கல்லை கீழே போட்டால் தான் கைகளுக்கு நிம்மதி. அதுபோலத்தான் சில கசப்பான நினைவுகளும், தேவையற்ற விவாதங்களும். அவற்றை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை மனப்பாரம் குறையப்போவதில்லை. ➤ எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும், எல்லோரையும் திருத்த வேண்டும் என்று நினைப்பதை விட, சிலவற்றை அப்படியே விட்டுவிட்டு கடந்து செல்வதுதான் மன அமைதிக்கு வழிவகுக்கும். எதை விட வேண்டுமோ அதை விட்டு விடுங்கள், அப்போதுதான் புதிய வாய்ப்புகளை உங்களால் பற்றிக் கொள்ள முடியும். > விட வேண்டியதை விட்டுவிடு; அப்போதுதான் அடைய வேண்டியதை அடைய முடியும்! 👊 🔥 மன நிம்மதியே உண்மையான செல்வம். தேவையற்றவற்றை உதறித் தள்ளிவிட்டு, மகிழ்ச்சியான பாதையை நோக்கிப் பயணம் செய்யுங்கள்! 📲 அனைவரும் பயனடைய அதிகமாக Share செய்வோம் #life #status #time #people #management
Motivation Tamil
561 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
💁‍♀️ சிந்தனைக்கு 🧠 __________________________ காலம் யாருக்காகவும் - ஒருபோதும் காத்திருப்பது இல்லை! நிர்வகிக்கத் தெரிந்தவனுக்கு - இங்கே நேரமில்லை என்ற பேச்சில்லை! ஏனெனில், நேரமில்லை என்பது வெறும் பொய், நேரத்தை நிர்வகிக்கத் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை... ➤ அனைவருக்கும் ஒரு நாளில் வழங்கப்படுவது அதே 24 மணிநேரம் தான். அதில் சிலர் சாதிக்கிறார்கள், பலர் புலம்புகிறார்கள். வித்தியாசம் நேரத்தின் அளவில் இல்லை, நாம் அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதில் தான் உள்ளது. ➤ "நேரமில்லை" என்று சொல்வது ஒரு தற்காப்பு வாதமே தவிர வேறில்லை. தேவையற்ற விஷயங்களுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்து, பயனுள்ள செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கினால், நம்மிடம் தாராளமாக நேரம் இருப்பதை உணரலாம். > நேரத்தை வீணாக்காதே; ஏனெனில் வாழ்க்கை அந்த நேரத்தால் தான் செதுக்கப்பட்டுள்ளது! 👊 🔥 கடந்து போன வினாடிகள் ஒருபோதும் திரும்பாது. நேரத்தைத் திட்டமிடுங்கள், உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்! 📲 அனைவரும் பயனடைய அதிகமாக Share செய்வோம் _______________________________ #time #management #life #status #success
Motivation Tamil
570 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
*🌍 பொது அறிவு 🌍* *__________________________* > *2016 - பொது அறிவு வினா, விடைகள்* 👩‍🎓ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தற்போதைய (80வது) தலைவரின் பெயர் என்ன? *(Annalena Baerbock)* 👩‍🎓18வது பிரிக்ஸ் நாடுகளின் அரச தலைகளின் உச்சி மாநாட்டினை (2026) நடத்தவுள்ள நாடு எது? *இந்தியா* 👩‍🎓அண்மையில் எந்த நாட்டில் உள்ள உலக வரலாற்று மிக்க பழமையான தேவாலம் கோபுரம் தீயினால் எரிந்து நாசமாகியது? *நெதர்லாந்து* 👩‍🎓உலகிலே 2026ம் ஆண்டினை வரவேற்ற முதல் பசுபிக் நாடு எது? *கிரிபாட்டி தீவு* 👩‍🎓அண்மையில், அமெரிக்கப் படைகளினால் கைதுசெய்யப்பட்ட வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியின் பெயர் என்ன? *நிகோலஸ் மதுரோ* 👩‍🎓2026 ம் ஆண்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நாடு எது? *இந்தியா* 👩‍🎓சமீபத்தில் People's Pinnacle Awards 2025' விருதினைப் பெற்று, ஆண்டின் மிகவும் பிரவலமான பத்திரிகை என்ற பெருமையைப் பெற்ற பத்திரிகை எது? *லங்காதீப* 👩‍🎓இரு-அரசு மோதல்களிற்கான தீர்வை முன்னெடுப்பதற்காக 80வது ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்தின் பெயர் என்ன? *நியூஜோர்க் பிரகடனம்* 👩‍🎓அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக, அரசாங்கத்தினை பதவி விலகக்கோரி பாரிய மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நாடு எது? *ஈரான்* 👩‍🎓வெனிசுலா நாட்டின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட துணை ஜனாதிபதியின் பெயர் என்ன? *(Delcy Rodríguez)* 👩‍🎓தற்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை எத்தனை? *10* 👩‍🎓அமெரிக்காவின் மிகப்பெரிய நகரான நியூஜோர்க் நகரின் மேயராக பதவியேற்று முதல் முஸ்ஸம் நபராகவும், தெற்காசியராகவும் பெருமையைப் பெற்றவரின் பெயர் என்ன? *ஜோஹ்கான் மம்தானி* 👩‍🎓இலங்கையின் தற்போதைய பிரதமர் திருமதி ஹருணி அமரசூரிய அவர்கள், சுதந்திர இலங்கையின் எத்தனையாவது பிரதமராக பதவி வகிக்கின்றார்? *17வது* #General knowledge #life #people #Indian #status
Motivation Tamil
1.6K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
_*உங்களுடைய சோதனைகளுக்கான தீர்வு அல்லாஹ்விற்காக காத்திருப்பதில் உண்டு*_ 🖤✨ #islam #muslim #alquran 📖📖 #life #status
Motivation Tamil
827 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
அல்லாஹ்வை முழுமையாக நம்புங்கள். உங்கள் துஆவை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் துஆக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புங்கள். கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் நமக்குள் விதைப்பதால்தான் நாம் துஆ செய்கிறோம். ஆகவே தயங்காமல் கேளுங்கள் 🤲 ஏற்கனவே எழுதப்படாத ஒன்றுக்காக அல்லாஹ் உங்களை துஆ செய்யத் தூண்டமாட்டான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு துஆவும், உயர்த்தும் ஒவ்வொரு கையும், அல்லாஹ் உங்களுக்காக எழுதிய திட்டத்தின் ஒரு பகுதிதான். அது உங்களுக்கான அவருடைய வழிகாட்டலும் அன்பான திட்டமும். உங்கள் துஆ, உங்கள் விதியின் ஒரு பகுதிதான் என்பதை நம்புங்கள் 🤍 #allah #islam #muslim #life #dua
Motivation Tamil
606 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
🌐 எதிர்காலமும் Artificial Intelligence (AI) யும் – மனித வாழ்வின் புதிய கட்டம் மனித வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டமும் ஒரு புதிய புரட்சியைக் கண்டுள்ளது. ➤ அச்சுப்பொறி அறிவைப் பரப்பியது, ➤ மின்சாரம் உலகை ஒளிரச் செய்தது, ➤ இணையம் மனிதர்களை இணைத்தது. > *இன்றைய உலகின் மிகப் பெரிய புரட்சி – Artificial Intelligence (AI)* 🤖 AI என்றால் என்ன? AI என்பது மனிதனின் சிந்தனை, கற்றல், முடிவு எடுக்கும் திறனை இயந்திரங்களுக்கு வழங்கும் நவீன தொழில்நுட்பம். இன்று நாம் பயன்படுத்தும் • Google Search • Voice Assistant • Face Recognition • Chatbots எல்லாவற்றிற்கும் பின்னால் AI உள்ளது. *📚 கல்வியில் AI* எதிர்கால கல்வி முறையில் “ஒரே பாடம் – எல்லோருக்கும்” என்ற நிலை மாறி, “ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட கற்றல்” என்ற நிலை உருவாகும். மாணவனின் திறனை புரிந்து, அவனுக்கேற்ற பாடத்தை சொல்லிக் கொடுக்கும் ஒரு Digital Teacher ஆக AI செயல்படும். 🏥 மருத்துவத்தில் AI AI இன்று • நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிகிறது • மருத்துவ பிழைகளை குறைக்கிறது • உயிர்களை காக்கும் முடிவுகளில் மருத்துவருக்கு உதவுகிறது எதிர்காலத்தில், AI மனித உயிர்களின் காவலனாக மாறும். 💼 வேலை வாய்ப்புகள் & தொழில் AI சில வேலைகளை மாற்றும்… ஆனால் அனைத்தையும் அழிக்காது. *💁‍♀️ அதே நேரத்தில்* • AI Engineer • Data Analyst • Digital Marketer • Automation Specialist போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 👉 மாற்றத்தை ஏற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம். *⚠️ AI யின் சவால்கள்* • வேலை இழப்பு பற்றிய பயம் • தனியுரிமை (Privacy) பிரச்சினைகள் • மனித கட்டுப்பாடு குறையுமா என்ற சந்தேகம் உள்ளன. 👉 ஆகவே AI யை கட்டுப்படுத்தும் அறிவும் ஒழுக்கமும் மனிதனிடமே இருக்க வேண்டும். AI மனிதனை மாற்ற வந்ததல்ல. மனிதனை மேம்படுத்த வந்தது. AI யை பயப்படாமல், அதை புரிந்து கொண்டு, அறிவுடன் பயன்படுத்தும் சமூகம் தான் எதிர்கால உலகின் முன்னணி சமூகம். > எதிர்காலம் தானாக வருவதில்லை… நாம் இன்று எடுக்கும் முடிவுகளால் தான் அது உருவாகிறது. அந்த பயணத்தில் AI – ஒரு சக பயணி. 🤖✨ அறிவுடன் சிந்திப்போம் | தொழில்நுட்பத்துடன் வளர்வோம் | எதிர்காலத்தை உருவாக்குவோம் ________________________________ #ai #AI photo Creator ...! #🤖ட்ரெண்டிங் AI வீடியோஸ்🎥 #Animation cartoons Ai #Ai Name
Motivation Tamil
726 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
நீங்கள் உங்கள் இளமைக் காலத்திலேயே இந்த உலகின் யதார்த்தத்தை (உண்மையை) அல்லாஹ் உங்களுக்குப் புரியவைப்பது அவனது மகத்தான அருட்கொடைகளில் ஒன்றாகும். இதனால், உங்கள் வாழ்நாள் வீணான அதன் அலங்காரத்தின் பின்னால் ஓடுவதில் கழிந்துபோகாது. # #islam #muslim #allah #life #time
See other profiles for amazing content