கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் பேசியதாவது, ''விசில் எப்போது அடிப்பார்கள். போட்டியில் எதாவது தவறு நடக்கையில்தான் விசில் அடிப்பார்கள். இந்த ஆட்சியில் ஊழல் செய்வது யார்? தவறு செய்வது யார்? இங்கே முதல்வர் ஸ்டாலினே தவறு செய்யத்தான் செய்கிறார்? உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு பொறுப்பு டிஜிபியை கூட அவர் நியமிக்கவில்லையே. தமிழகத்தில் கஞ்சாவே இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களும் தவெகவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் 1000 ரூபாய் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மனதை வென்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி மக்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் அறிவு குறைவா? மக்கள் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். நம்முடைய செயல்பாடுகளை அவர்களிடம் சரியாக எடுத்துச் சென்றால் வென்றுவிடலாம்" என்றார். #😍தவெக கட்ச்சிக்கு விசில் சின்னம் 📢 #🔥 தளபதியின் 'விசில்' சின்னம் அறிவிப்பு! 😎 #தவெகாவுக்கு விசில் சின்னம் #தளபதியின் விசில் சின்னம் அறிவிப்பு #📢ஜனவரி 25 முக்கிய தகவல் 🫠


