துளசி பிறந்த கதை :🌿
துளசி திருக்கல்யாணம் செய்யும் முறை:
முதலில் துளசி பிறந்த கதை பார்ப்போம்.
சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர். தர்மத்துவஜன் என்ற அரசன் அவரது மனைவி மாதவி இவர்களுக்கு கார்த்திகை மாதம் பெளர்ணமி திதியில் சுக்கிரவாரம் கூடிய சுப தினத்தில் மஹாலஷ்மியே பெண்ணாக பிறந்தாள். துளசி தனக்கு நாராயணனே மணாளனாக கிடைக்க வேண்டும் என்று பத்ரி வனம் சென்று உக்கிரமான தவம் செய்தாள் ஒற்றை காலில் நின்றபடி மழை வெயில் என்று பாராமல் 20000 வருடம் தவம் இருந்தாள். பழம் நீர் முதலியவற்றை ஆகாரமாக 30000 வருடம் எடுத்து கொண்டார். அடுத்து இலைகளை மட்டும் புசித்து 40000 வருடம் தவம் புரிந்தாள். பிறகு காற்றை மட்டுமே கிரஹித்து 16 வருடம் தவம் செய்தாள். பிரம்மா அவள் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். துளசி அதற்கு பிரபோ நீங்கள் எல்லாம் அறிந்தவர் நான் பூலோகத்தில் கோபியராய் கிருஷ்ணனுக்கு ப்ரிய மனைவியாய் இருந்தேன். ஆனால் ராதைக்கு என் மீது கோபம் வந்து பூலோகத்தில் நீ மானிடராய் பிறப்பாய் என சாபம் அளித்தாள். நானும் நாராயணனையே பர்த்தாவக அடைய வேண்டும் என வேண்ட அவரும் அவள் மீது கருணை கொண்டு முதலில் ஜலந்திரனை திருமணம் செய்து நாராயணனை அடைவாய் என்றார். சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை மணந்தால சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது.
பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா இளவரசி மீது காதலில் விழுந்தார் ஜலந்தர். விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா. ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான். இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது. வ்ரிந்தாவை மணந்த பின், அனைவராலும் வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர்.
வ்ரிந்தாவின் தூய்மையும், கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கின. அவனின் சக்தியை பல மடங்கு அதிகரித்தது. சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை. அவனின் ஆணவம் அதிகரித்தது. சிவபெருமானை வீழ்த்தி, அண்டசராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது.
ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது. இது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அனைத்து தேவர்களும் உதவியை நாடி விஷ்ணு பகவானிடம் சென்றனர். வ்ரித்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று. அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால், விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார்.
அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான். முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்து விட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் வ்ரித்தா.
ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானார். தவறை உணர்ந்த அவள், தனது சுய ரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள். தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள்.
தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரித்தா அவரை சபித்தார். விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராம கல்லாக மாறினார். அதன்பின்னர், தனது மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான்.
மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடிவெடுத்தாள். அவள் இறக்கும் முன்பு, இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார். அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும். துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது. அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி. நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருள் பாலிக்கிறாள்.
. மாடி வீடாக இருந்தாலும் ஒரு சிறிய மாடத்தில் துளசி செடி வைத்து மஞ்சள் கலந்த நீர் ஊற்றி சந்தனம் குங்குமம் இட்டு, ஊதுபத்தி ஏற்றி, ஒரு சிறு பலகையில் கோலமிட்டு தினமும் ஒர் அகல் விளக்கு ஏற்றி 3 முறை சுற்றி வந்தால் சகல செளபாக்யம் அருளுவதோடு சுமங்கலிகளின் பொட்டுக்கும் பூவுக்கும் எந்தவித பங்கமும் ஏற்பாடாமல் பார்த்துக் கொள்வாள். அதோடு நாம் வெளியில எங்கு செல்ல நேர்ந்தாலும் அவளிடம் சொல்லி கொண்டு செல்ல நமக்கு பாதுகாப்பாய் துணைவருவாள். எங்கெல்லாம் விஷ்ணு பகவான் நாராயணன் ராமர் நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் மன மகிழ்ச்சியோடு வாசம் புரிவாள். துளசியை வளர்த்து போற்றி கொண்டாடும் வீடுகளில் துர் மரணம் நேராது. தீய சக்திகள் நெருங்காது. யார் வந்தாலும் அவளின் உத்தரவு மீறி வர முடியாது. பெண்கள் விலக்கு ஆன நாட்கள் மட்டும் அவள் அறுகில் செல்ல கூடாது. துளசியை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பறிக்க கூடாது.
🌿🌿🌿🌿
நாம் துளசிக்கு திருமணம் செய்வது எப்படி. இதனால் என்ன பலன் என்பதையும் பார்ப்போம்🌿
இம்முறை நவம்பர் 2025 2ம் தேதி துளசி திருமணம் ஆரம்பம். முதல் நாள் இரவே துளசிக்கு மஞ்சள் பூசி இழைக்கோலம் போட்டு வைத்து விட வேண்டும். திருமணத்தை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது மிகவும் நற்பலன் உண்டாக்கும். அதிகாலை 3.30 ல் இருந்து 6 மணிக்குள் நடத்தலாம். அப்படி இல்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் நடத்தலாம். ஒரு தாம்பாளத்தில் பிள்ளையார் மஞ்சளால் பிடித்து சந்தனம் குங்குமம் வைக்கவும். பூக்களால் இந்த அர்ச்சனை செய்யவும்.
ஓம் ஸுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாதிபாய நம
ஓம் தூம கேதுவே நம
ஓம் கணாத்யஷாய நம
ஓம் பால சந்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ர துண்டாய நம
ஓம் ஸூர்ப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம்ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் மகா கணபதி நாநாவித பரிமள புஷ்ப்பம் சமர்ப்பயாமி :
என்று அர்ச்சனை செய்து விநாயகர்களு தூபம் காட்ட வேண்டும்
ஒரு தாம்பாலத்தில்
பூ பழம் வெற்றிலை, தேங்காய் புடவை அல்லது ரவிக்கை பிட் கூட வைக்கலாம். பெருமாள் படம் அல்லது கிருஷ்ணர் சிலை அல்லது சாலகிரஹம் வைக்கவும். நெல்லி செடியின் ஒரு சிறு கிளை துளசி செடியில் நடவும். துளசிக்கு ஒரு சொம்பில் நீர் ஊற்றி அதில் மஞ்சள் குங்குமம் கலந்து செடிக்கு ஊற்றவும். மாலை சாற்றவும்.
பிரசாதமாக பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் வைக்கவும். அந்த தாம்பாளத்தில் தேங்காய் பழத்துடன் திருமாங்கல்ய சரடில் மஞ்சள் கட்டி வைக்கவும். 5 நெல்லிக்கனி ஒரு தட்டில் வைக்கவும் குத்துவிளக்கு ஏற்றி குங்குமத்தால் துளசி போற்றி அல்லது துளசி காயத்ரி சொல்லி துளசியில் நட்ட நெல்லி கிளைக்கும் துளசிக்கும் சேர்த்து மாங்கல்யம் கட்டவும். வெற்றிலை பாக்கு பழம் பிரசாதம் நைவேத்யம் செய்யவும். நாதஸ்வர கச்சேரி வீட்டில் தொலைகாட்சியில் ஓட விடலாம்.தீப தூப ஆராதனை காட்டி நமஸ்கரிக்ககவும்.
துளசி திருமணம் நடத்துவதால் ஏற்படும் பலன் :
வீட்டில் யாருக்கேனும் திருமண தடை இருந்தால் திருமணம் நடைபெறும்.
கார்ய சித்தி, கணவர் மனைவி ஒற்றுமை, துளசி மகலஷ்மி ஸ்வரூபம் என்பதால் செல்வ செழிப்பும் உண்டாகும். வீட்டில் தீய சக்தி விலகும். எதிர் மறை ஆற்றல் மறையும் சுப காரியம் ஏற்படும். பலவித பலன்கள் உண்டாகும்.
துளசி அர்ச்சனை
ஒம் துளசி தேவ்யை நம:
ஓம் ப்ருந்தாவன ஸ்தாயை நம:
ஓம் பத்ம பத்ர நிபேஷனாயை நம:
ஓம் பத்ம கோடி ஸமப் பிரபாயை நம:
ஓம் ஹரிப் பிரியாயை நம:
ஓம் குங்கு மங்கித காத்ராயை நம:
ஓம் ஸூர வந்திதாயை நம:
ஓம் லோகனுக்கிரஹ காரின்யை நம:
ஓம் த்ரைலோக்ய ஜனன்யை நம
ஓம் | பத்ம ப்ரியாயை நம:
ஓம் இந்திராக்யாயை நம் :
ஓம் கம்பு கண்ட்யை நம:
ஓம் கல் மஷக்ந்யை நம:
ஓம் வரப்பிரதாயை நம:
ஓம் ஆஸ்ரித ரஷகாயை நம: ஓம்
ஓம் அபீஷ்டதாயை நம்
ஓம் விஷ்ணு ப்ரியே நம .
ஓம் ஸ்ரீ மஹா விஷ்ணு துளசி தேவ்யை நம நாநாவித பரிமள புஷ்ப சமர்ப்ப யாமி என்று சொல்லி புஷ்பத்தை போட வேண்டும்.
பிறகு துளசி மாடத்தை 3 முறை வலம் வந்து நமஸ்கரித்து நமது பிராத்தனை எதுவானாலும் வேண்ட வேண்டும். எப்போதும் தெய்வங்களின் திருமணம் நடக்கும் போது நமது நியாயமான கோரிக்கை எதுவானாலும் நடக்கும் .
திருமண வயதில் இருக்கும் கன்னி பெண்கள் செய்தால் நல்ல கணவனை கொடுப்பாள். சுமங்கலிகள் பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அளித்து மஹா பிராமணர்களுக்கு தானம் செய்த பலன் அளிப்பாள். இப்படியே அன்புடன் பூஜை செய்தால் அற்புதமாய் வாழ்த்திடுவீர் ஶ்ரீ தேவி தன் அருளால்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
...... Savittri Raju #துளசி
கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி ஜானகி தேவி காயத்ரி🌺
ஓம் ஜகையாயை வித்மஹே
ராம ப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரசோதயாத்
ஓம் அயோ நிஜாயை வித்மஹே
ராம பத்ன்யைச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
ராம பத்தின்யை ச தீமஹி
தந்நோ சீதா ப்ரசோதயாத்.
ஜெய் சீதா ராம்
- Savittri Raju🌺
#ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்!! ஸ்ரீராம ஜெயம் ! எல்லாம் ஜெயமே...
அழியா ஓவியம்
☀️☀️☀️☀️☀️☀️☀️
யார் அங்கே ...... அருகில் நிற்பது போல ....
என் கண்களை நம்பவில்லை கண்ணே நீ தானா
சிவந்த உடையில் புன்னகையால் பூத்து தோன்றுகிறாய்........
அந்த ஒரு நொடி என் உயிரே நின்றது,
“ ஆம்… நீ தான்!” என இதயம் உணர்த்தியது ...
அடி எடுத்து சென்றேன் உன்னை அணைக்க ஆனால் எங்கே என் கண்மணி?
நிழலே! நீயா எனக் கேட்டேன்… ஆம் என
உள்ளம் பதில் சொன்னது ...
“அவள் நினைவு தான், அவள் அல்ல…” என்று .....
நான் கையை நீட்டினேன் — பாசத்தோடு,
ஆனால் காற்று மட்டும் என் விரல்களைத் தொட்டது
அந்த காற்றின் ஸ்பரிசம் கூட அவளது சுவாசம் போல தோன்றியது
கண்ணே… என் கண்ணீரில் நீ இன்னும் விளையாடுகிறாய்,
என் நெஞ்சுக்குள் நீ இன்னும் சிரிக்கிறாய்,
ஆனால் என் கைகளில் — வெறும் வெறுமைதான்.
தூரத்தில் நீ
பேசாமல் இருந்தாலும் என் இதயத்தின் ஒலி நீயே
என் வாழ்வின் ஒவ்வொரு மூச்சும்
உன் பெயரையே நிசப்தமாகச் சொல்கிறது…
அருகில் நீ இல்லை ஆனாலும் நிழற் படத்தில்
என் தூரத்தில் நிற்கும் நெருக்கம்
கூட சுகமானதுதான்...
காலம் கடக்கும்
துள்ளலோடு ஓடி வருவாய் என் கை பிடித்து நடக்க...
நிழல் கூட நிஜமாகும்
நம்புகிறேன் என் அன்பான பிடிவாதத்தை ....
நீ வளர்வதற்குள் வந்து விடு மழலையாய்...
பிஞ்சு விரல் பிடித்து
மத்தாப்பூ போல சிரித்து
உன் கை பிடித்து உன்னோடு துள்ளி விளையாட என்னையும் குழந்தையாய் மாற்றிவிடு...
என் சுவாச காற்றே
என் இதயத்துடிப்பே
ரவி வர்மாவின் ஓவியமாய் பதிந்துவிட்டாய் ...
உன் பெயரை உச்சரித்தால் கூட
கற்கண்டாய் இனிக்கிறது என் நாவில் ....
கண்ணே பாப்பா
கனி முத்தம் சிந்த வா.....
Savittri Raju🌹 #கவிதை













