A Mohan Raj
ShareChat
click to see wallet page
@19106433
19106433
A Mohan Raj
@19106433
SM Money Flow (Money Makes Money) MF Distributor
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம்* - *சித்த ஆகமம் - 9. ஏரொளிச் சக்கரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. *ஏரொளிச் சக்கரம் என்பது மூலாதாரத்தில் தோன்றி, மேல்நோக்கி எழும் ஒளி வடிவான சக்கரம் ஆகும். இந்த சக்கரம், சாதகரின் உடல் மற்றும் உள் உணர்வுகளில் உள்ள நெருப்பை ஒடுக்கிக் கொண்டு, ஒளி வடிவமாக எல்லாவற்றையும் தன்னுடன் ஒன்றிணைக்க உதவுகிறது. இதன் மூலம், சாதகர்கள் இறைவனின் பேரொளியுடன் இணைந்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது*. அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் - 9. ஏரொளிச் சக்கரம்* 1255 ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே. 1 1256 வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம் வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே. 2 1257 சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே. 3 1258 மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின் மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே. 4 1259 ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்தது எழுத்தே. 5 1260 விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. 6 1261 அப்பஅது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ அப்பினில அப்புறம் ஆகாச மாமே. 7 1262 ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. 8 1263 அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே. 9 1264 அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம். 10 1265 எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே. 11 1266 அந்தமும் ஈறு முதலா னவையற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. 12 1267 ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும் ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும் ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும் ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே. 13 1268 வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும் வந்திடு நாளது முந்நூற் றறுபதும் வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே. 14 1269 அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும் எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம் சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வின மூன்றும் இராகிகள் எல்லாம். 15 1270 இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே. 16 1271 நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே. 17 1272 தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே. 18 1273 கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின் கண்டிரும் அப்புறம் காரொளி யானதே. 19 1274 காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. 20 1275 நின்றது அண்டமும் நீளும் புலியெலாம் நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும் நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே. 21 1276 விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திfடில் விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம் விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 22 1277 வீசம் இரண்டுள நாதத்து எழுவன வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. 23 1278 விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில் விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில் விரிந்தது விந்து விரையது வாமே. 24 1279 விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம் விரையது விந்து விளைந்தவன் தானே. 25 1280 விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்தது சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே. 26 1281 மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம் தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே. 27 1282 உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. 28 1283 பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே. 29 1284 அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. 30 1285 கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. 31 1286 மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும் மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில் கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே. 32 1287 கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடியல் பாக அமைந்து செறிந்திடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடியுள் ளாகத் தௌiந்துகொள் வார்க்கே. 33 1288 தௌiந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து வளிந்தவை அங்கெழு நாடிய காலே. 34 1289 கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப் பாலித்து எழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே. 35 1290 கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டையுள் நாவில் பகையற விண்டபின் மன்று நிறைந்த மணிவிளக் காயிடும் இன்றும் இதயத்து எழுந்து நமஎனே. 36 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:30
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 Life is a linear equation in which you can't cross multiply! If you think you can do it, you can do it. If you think you can't do it, you can't do it. It's a simple formula. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A` _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - Flow Money S9M Mo neY Mak es Money னிய காலை வணக்கம் கூட்டன் ததவு திறந்த பினீ தில ஸறவைதஸ் mுதி இாரம் 9 ஸதி்த தெரிறாமலி் தன்னால் 09 ஸறக்கமுடிாம் என்பதை மறந்ததால் சில மனிதர்களூம் தன்னால் முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள் Flow Money S9M Mo neY Mak es Money னிய காலை வணக்கம் கூட்டன் ததவு திறந்த பினீ தில ஸறவைதஸ் mுதி இாரம் 9 ஸதி்த தெரிறாமலி் தன்னால் 09 ஸறக்கமுடிாம் என்பதை மறந்ததால் சில மனிதர்களூம் தன்னால் முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள் - ShareChat
#💪 தன்னம்பிக்கை Good Morning 🌞🙏 Confidence is something you acquire in yourself by believing in self ability with courage and conviction. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - இனியகாலை வணக்கம் உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்! கீழே உனக்கு உளளவலை ஏளனமாய்ப் பார்க்காதே தலைக்கனம் வரும்! யாரோடும் ஒப்பிடாமல் உனலை நீ நீயாக இரு தன்னம்பிக்கை 00! SM Money Flow Make s Money Money இனியகாலை வணக்கம் உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்! கீழே உனக்கு உளளவலை ஏளனமாய்ப் பார்க்காதே தலைக்கனம் வரும்! யாரோடும் ஒப்பிடாமல் உனலை நீ நீயாக இரு தன்னம்பிக்கை 00! SM Money Flow Make s Money Money - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம்* - *சித்த ஆகமம் - 7 பூரண சக்தி* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. *பூரண சக்தி என்பது முழுமையான சக்தி, அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் சக்தி ஆகும்* *மேலும் அதன் பொருள் "சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை" அல்லது "முழுமையான சக்தி" ஆகும். இந்தப் பகுதி முழுமையான, அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் சக்தியைக் குறிக்கிறது*. அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் - 7. பூரண சக்தி* 1125 அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1 1126 உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 2 1127 கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிதுறை தையலும் அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 3 1128 இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 4 1129 என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 5 1130 தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்பதொரு நூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 6 1131 ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தானதனன் தானே. 7 1132 தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. 8 1133 அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவான மங்கை அருளது சேரில் பிரியா அறிவறி வார்உளம் பேணும் நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 9 1134 இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 10 1135 பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 11 1136 நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும் நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12 1137 மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின போது திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13 1138 சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14 1139 ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 15 1140 உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடையது வாகிய சாதகர் தாமே. 16 1141 தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 17 1142 பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்தது உலகே. 18 1143 நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 19 1144 அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 20 1145 முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 21 1146 இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறும் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 22 1147 அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே. 23 1148 நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுடை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும் புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 24 1149 புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள் வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25 1150 போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 26 1151 தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 27 1152 மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 28 1153 தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 29 1154 அதுஇது என்பர் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:30
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 In everything we do, our own thoughts can help us succeed, or they can help us fail. Maintain a positive attitude. Have a Great Day👍💐 Mohan Raj A SM Money Flow
💪 தன்னம்பிக்கை - இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான். நினைக்கிறதோ  அது என்ன அதை நோக்கியே உன் வாழ்க்கை அமைகிறது பயணம் Flow Money SM MoneY Mak es MoneY இனியகாலை வணக்கடி இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான். நினைக்கிறதோ  அது என்ன அதை நோக்கியே உன் வாழ்க்கை அமைகிறது பயணம் Flow Money SM MoneY Mak es MoneY இனியகாலை வணக்கடி - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம் - சித்த ஆகமம் - 6. வயிரவி மந்திரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. வயிரவி மந்திரம் என்பது பைரவரின் சக்தி மற்றும் தெய்வீக வடிவமான வயிரவியைப் போற்றி, அவளது மந்திரங்கள் மற்றும் சக்திகளைப் பற்றிய ஒரு விளக்கமாகும். இந்தக் குறிப்பிட்ட பாடல், பன்னிரண்டு கலைகளாக இருக்கும் வயிரவி, அகாரக் கலை (படைத்தல்) மற்றும் மாயைக் கலையை (மறைத்தல்) சேர்த்து பதினான்கு கலைகளாகவும், அதனுடன் ஆதி மற்றும் அந்தம் சேரும்போது பதினாறு கலைகளாகவும் மாறுவதைக் குறிப்பிடுகிறது. அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் - 6. வயிரவி மந்திரம்* 1075 பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1 1076 அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 2 1077 ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 3 1078 புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 4 1079 தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 5 1080 ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 6 1081 சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் லயனறி யாத வடிவுக்கு மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 7 1082 மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 8 1083 பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 9 1084 பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர் ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 10 1085 கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசக்தி அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11 1086 பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம்இ லாத மணிமந் திரயோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. 12 1087 காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவிநற் காரணி காணே. 13 1088 காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 14 1089 அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரை செய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. 15 1090 உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே. 16 1091 தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத்து இருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை மேவித்து அழுதொடு மீண்டது காணே. 17 1092 காணும் இருதய மந்திர முங்கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணு நடுஎன்ற அந்தம் சிகையே. 18 1093 சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப் பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19 1094 வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப் பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 20 1095 பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக் கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 21 1096 கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22 1097 நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23. 1098 சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24 1099 ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 25 1100 கோலக் குழவி குலாய புருவத்துள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே . 26 1101 வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத் தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 27 1102 கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 28 1103 தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29 1104 வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய கடைமுடிச் சூலினி சுந்தரி ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30 1105 இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 31 1106 நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக் கூடி யிருந்த குமரி குலக்கன்னி பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே. 32 1107 உறங்கும் அளவில் மனோன்மணி வந்து கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 33 1108 உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 34 1109 அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35 1110 ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையுள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 36 1111 குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத்தலை யாளே. 37 1112 கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 38 1113 இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்fறி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 39 1114 ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 40 1115 இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 41 1116 பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முற்றி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42 1117 உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43 1118 கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி துன்னியங fகைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே. 44 1119 இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 45 1120 ஆதி அனாதியும் ஆய பராசக்தி பாதிபராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 46 1121 ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன் ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 47 1122 ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 48 1123 வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித் தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. 49 1124 ஆதி அனாதி அகாரணி காரணி வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:03
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 A fake person will make a mistake and act like it never happened, a REAL person will make a mistake, admit it and apologize regardless of the outcome! Have a Great Day👍💐 _*“Ⓜ️ohan Raj A” “SM Money Flow”
💪 தன்னம்பிக்கை - இனியகாலை வணக்கம் தப்பே செய்யாமல் ஒருவர் உன்னை தவறாகப் புர்ந்து அவர்களிடம் கொண்டால் உன்னைப் பற்றி நியாயப்படுத்தாதே. நீ ஏனென்றால் BoDlo ஒவ்வொரு உண்மைக்கும் அவர்களே 80 கதைபை உருவாக்குவார்கள் SM Money Flow Money Makes Money இனியகாலை வணக்கம் தப்பே செய்யாமல் ஒருவர் உன்னை தவறாகப் புர்ந்து அவர்களிடம் கொண்டால் உன்னைப் பற்றி நியாயப்படுத்தாதே. நீ ஏனென்றால் BoDlo ஒவ்வொரு உண்மைக்கும் அவர்களே 80 கதைபை உருவாக்குவார்கள் SM Money Flow Money Makes Money - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம் - சித்த ஆகமம் - 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம் என்பது சக்தியின் பல்வேறு வடிவங்களையும், அவளிடமிருந்து உருவாகும் மந்திரங்களையும் விவரிக்கிறது. சக்தி என்பது மாயையின் உச்ச நிலையிலிருந்து உருவாகும் மந்திரங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, பல்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாக இந்தப் பகுதி கூறுகிறது. "சக்தியின் வடிவம்* : மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறு மாயைகளின் உச்சத்தில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவங்களே. *திரிபுரை சக்கரம்*: இந்தப் பகுதி திரிபுரை சக்கரம் என்பதையும் குறிப்பிடுகிறது, இது சக்தி வழிபாட்டின் ஒரு பகுதியாக கூறப்படுகிறது. *பல்வேறு பெயர்கள்* : திரிபுரை சக்தி பல பெயர்களிலும் வடிவங்களிலும் தன்னை வெளிப்படுத்துகிறாள். எடுத்துக்காட்டாக, திரிபுரை சுந்தரி, அந்தரி, சிந்துரப் பரிபுரை, நாரணி, ஈசி, மனோன்மனி என பல வடிவங்களில் உள்ளாள். அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் - 5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்* 1045 மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1 1046 திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே. 2 1047 தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையுள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே. 3 1048 நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரைஅபி ராமி அகோசரி புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. 4 1049 தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. 5 1050 குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறமன்று கேலாத்தின் கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றானே. 6 1051 நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. 7 1052 தத்துவம் பாரத் தனத்தி சுகோதயள் வத்துவம் ஆய்ஆ ளும் மாசத்தி மாபரை அத்தகை யாவும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. 8 1053 அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. 9 1054 அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவா ரருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. 10 1055 தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன் வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. 11 1056 பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனே பராசத்தி புண்ணிய மாகிய போகமே. 12 1057 போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 13 1058 கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 14. 1059 வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. 15 1060 தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. 16 1061 நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. 17 1062 ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. 18 1063 உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. 19 1064 அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டானே. 20 1065 உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல முன்றுற மன்னிநின் றாளே. 21 1066 நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச் சென்றான் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. 22 1067 ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. 23 1068 தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. 24 1069 ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல் சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. 25 1070 மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆயந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே. 26 1071 அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே. 27 1072 ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. 28 1073 ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29 1074 தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயிர்வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. 30 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
01:02
#💪 தன்னம்பிக்கை Good Morning🌞🙏 You must have anger, as rightful wrath is what makes you create your own ethical standards. Have a Great Day👍💐 _*`Ⓜ️ohan Raj A`*_ _*`SM Money Flow`*_
💪 தன்னம்பிக்கை - SM Moneu Ttou Mak es Monev கோபத்தை MO neY உப்பு போல பயன்படுத்த வேண்டும் குறைத்தால் மரியாதை போய்விடும் கூடினால் மதிப்பு இல்லாமல் போய்விடும் இனியகாலை வணக்கம் SM Moneu Ttou Mak es Monev கோபத்தை MO neY உப்பு போல பயன்படுத்த வேண்டும் குறைத்தால் மரியாதை போய்விடும் கூடினால் மதிப்பு இல்லாமல் போய்விடும் இனியகாலை வணக்கம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*நான்காம் தந்திரம் - சித்த ஆகமம் - 4. நவகுண்டம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் நான்காம் தந்திரம், ஆகமம், யோகப் பயிற்சிகளான "சக்கரம்" போன்ற நுட்பமான விஷயங்களைப் பற்றியும், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மிக நடைமுறைகளைப் பற்றி விவரிக்கிறது*. நவகுண்டம் என்பது மந்திர சித்தி பெற்றவர்கள் தங்கள் தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யப் பயன்படுத்தும் ஒன்பது வகையான ஓம குண்டங்கள் ஆகும். இந்த ஒன்பது குண்டங்கள் சதுரம், யோனி, பிறை, முக்கோணம், வட்டம், அறுகோணம், பத்மம், அட்டகோணம் மற்றும் வர்த்துவம் ஆகியவை ஆகும். அமைவிடம் : பொது பாடல் வரிகள் : *சித்த ஆகமம் -4. நவகுண்டம் 1015 நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின் நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும் நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. 1 1016 உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 2 1017 மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 3 1018 கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 4 1019 எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே. 5 1020 கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. 6 1021 நற்சுட ராகும் சிரமுக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும் நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 7 1022 நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே. 8 1023 வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 9 1024 இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. 10 1025 முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன் அக்கணன் தானே அகிலமும் உண்டவன் திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன் எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 11 1026 எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12 1027 மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 13 1028 நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே. 14 1029 நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே. 15 1030 எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப் படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே. 16 1031 அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 17 1032 பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 18 1033 பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. 19 1034 அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. 20 1035 முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச் செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 21 1036 சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 22 1037 மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. 23 1038 கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தார் யிமூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 24 1039 உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே. 25 1040 கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே. 26 1041 மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்று போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே. 27 1042 பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 28 1043 உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 29 1044 சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே. 30 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:35