
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ கொப்பரை தயார்..
திருவண்ணாமலை
அண்ணாமலையார் மலை
உச்சியில்,
மஹா தீபம் ஏற்ற
பயன்படுத்தப்படும் ராட்சத
கொப்பரை,
கோவிலின் ஆயிரம் கால்
மண்டபத்தில் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது.🕉️🕉️🕉️
#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 கருப்பு கயிறு கட்டுபவரா ... உங்களுக்கே தெரியாத உண்மை, என்ன என்று தெரிந்து கொள்வோம்* ...
தற்காலத்திய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது புதிய பேஷனாகி வருகிறது. வெறும் கருப்பு கயிறு மட்டுமல்ல, அதனுடன் கிறிஸ்டைன், யானை, இதயம், முத்து போன்ற சிறிய லாக்கெட்டுகளையும் சேர்த்து அணிவதால், இது ஒரு ஸ்டைலிஷ் அணிகலனாக மாறியுள்ளது. ஆனால், இந்த பழக்கம் எப்போதும் புதியது அல்ல; இது நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.
பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டிக்கான ரீதியில் செய்கிறார்கள். திருஷ்டியைத் தவிர்க்கும் பழக்கம், சுத்தி போடுவது போன்ற மரபு முறைகளை போலவே, முன்னோர்கள் கடைபிடித்திருந்தனர். இதில் ஆண்கள் பொதுவாக வலது காலில், பெண்கள் இடது காலில் கருப்பு கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கான ஆன்மிக காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன.
பாரம்பரிய நம்பிக்கைகள்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவதால் சனி தோஷம் நீங்கும், ராகு-கேது பாதிப்புகள் வராது என்று கூறப்படுகிறது. முன்பு, வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்து வந்தால் அல்லது விபத்துகள் ஏற்பட்டால், பாட்டிகள் காலில் கருப்பு கயிறைக் கட்டி அவர்களை காக்க முனைந்திருப்பார்கள். குறிப்பாக, யானையின் முடி கொண்டு மோதிரம் போல் வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்து கைகளில் அணிவிப்பார்கள். இதன் நோக்கம் கண் திருஷ்டியைத் தவிர்க்கும் என்பதாகும். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமையான பழமொழி இதனை ஒட்டி வருகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பார்வை சக்தி அதிகம் கொண்டதாகும். இதனால் கண் படாமல் இருக்க குழந்தைகளாக இருந்தால், கன்னத்தில் கருப்பு மை வைத்து புள்ளி வைப்பதும், காலில் கருப்பு கயிறு கட்டுவதும் பின்பற்றப்படுகிறது. இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறும் கண் திருஷ்டியை நீங்கவும், நோய் நொடி இல்லாமல் இருக்கவும் பயன்படுகிறது.
கருப்பு கயிறு உடலில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உடலுக்கு உறிஞ்சும் தன்மை அதற்கு உண்டு. இதன் மூலம் உடல்நலக்கோடு, மனநிலை சீராகவும், எண்ணங்கள் அமைதியாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கணுக்கால் பகுதியில் கருப்பு கயிறு கட்டினால் நாடியின் இயக்கமும், மனச்செயல்பாடுகளும் சீராகும் என்பது நம்பிக்கை.
ஜோதிடர்களின் கருத்துப்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலையை பலப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களைத் துறவார். எனவே, கருப்பு கயிறு கட்டும் முன் சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறை ஒன்பது முடிச்சுகள் வைத்து அணிவதால் பண வரவு அதிகரிக்கும் என்றும், ஆபத்துகள் இல்லாமல் பாதுகாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
கடைசியாக, பெண்கள் காலில் கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலை, பாரம்பரிய நம்பிக்கைகளையும், நவீன ட்ரெண்டையும் ஒருங்கிணைக்கிறது.
😯😟😯😟😯 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 கால பைரவர் வாரணாசி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
ஓம் நமச்சிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#ஓம்_நமோ_நாராயணா
மெய் சிலிர்க்க வைக்கும் திருப்பதி 33 அரிய தகவல்கள் தெரிந்துகொள்வோமா.
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:
🌹 விருஷபாத்ரி – எருதுமலை
🌹 நீலாத்ரி – கருமலை
🌹 அஞ்சனாத்ரி – மைமலை
🌹 சேஷாத்ரி – பாம்பு மலை
🌹 கருடாத்ரி – கருடமலை
🌹 நாராயணாத்ரி – நாராயண மலை !!
#வேங்கடாத்ரி_வேங்கடமலை
#திருப்பதி_அரிய_தகவல்
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன. திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
5. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
6. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
7. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
8. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
9. பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
10. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
11. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
12. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80 ரூபாய்.
13. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.
14. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
15. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
16. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
17. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.
18. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
19. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
20. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
21. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
22. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
23. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி.* அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
24. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
25. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
26. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
27. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.
28. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
29. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
30. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
31. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
32. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.
33. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன.
இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.
169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை.
229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை.
251 அச்சுதராயர் காலத்தவை.
147 சதாசிவராயர் காலத்தவை.
135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.
கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன.
மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன. #ஓம் நமோ நாராயணா #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்* 🌹
கிரகங்களே தெய்வங்களாக
கோசெங்கண்ணன் என்ற மன்னனுக்கு குன்ம நோய் (அல்சர்) ஏற்படுகிறது. மிகுந்த அவதியுற்றான். மூன்று விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் உன்னுடைய நோய் தீரும் என்ற அசரீரி கேட்கிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டுகிறான். ஆக்கூர் என்னும் இத்தலத்திற்கு வரும் கொன்றை, வில்வம், பாக்கு விருட்சங்களை மன்னன் பார்க்கிறார். உடனே, அந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான் மன்னன். அவ்வாறு கோயில் கட்டும் இடத்தில் ஒரு சுவர் கிழே விழுந்துவிடுகிறது. அவ்வாறு விழுந்த இடத்தில் ஏன் விழுந்தது என சிவபெருமானிடம் கேட்டு மன்றாடுகிறான் மன்னன். சிவபெருமான் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைகள் நீங்கி சிறப்பாக கோயில் கட்டலாம் என்ற அசரீரி கேட்கிறது. அதன்படி, 48 நாட்கள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இலைகள் போட்டால் 999 பேர்தான் சாப்பிடுகிறார்கள். இதில் ஒரு இலை மீதமாகவே மன்னன் மிகுந்த வருத்தம் அடைந்தான். இறைவனிடம் சென்று மன்றாடுகிறான் மன்னன், “ஏன்? இந்த சோதனை'' என்று கேட்கிறான். மன்னனின் குரலுக்கு செவி சாய்த்த இறைவன், 48வது நாள் ஆயிரம் இலைகள் போடப்படுகிறது. ஆயிரம் இலைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருவராக வயதான அந்தணர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவராக அமர்ந்த அந்தணரிடம் தாங்கள் எந்த ஊர்? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்த அந்தணர் “யாருக்கு ஊர்'' எனக் கேள்வி கேட்கிறார். (இதனால் இவ்வூருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி “ஆக்கூர்'' ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் மிரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் அங்கிருந்த புற்றுக்குள் விழுந்துவிட்டார். புற்றை கடப்பாரையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்'' காட்சி தருகிறார். கடப்பாரையால் புற்றை குத்தியபோது கடப்பாரை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாரை பட்டதின் அடையாளமாக இன்று லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருக்கிறது. அங்கிருந்த லிங்கத்தின் மீது ஆலயத்தை கட்டி மன்னன் குடமுழுக்கு நடத்தினான். அதற்குபிறகு அவன் நோய் தீர்ந்து விட்டது. இத்தலம் பாடல் பெற்ற தலமாக உள்ளது சிறப்பாகும். இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு நாமாகரணம் செய்துள்ளது.
பௌர்ணமி நாளில் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து இங்கு தரிசனம் செய்து யாருக்காவது அன்னதானம் செய்தால் தீராத பிணியும் தீரும் என்பது ஐதீகமாகும்.
அனுஷம் நட்சத்திர நாளில் சுயம்பு மூர்த்திக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்து செண்பகப்பூ மாலை கொடுத்தால் கடன் பிரச்னை தீரும்.
ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் சூரியன் உள்ளவர்கள் இங்கு தேனும் தினை மாவும் கொடுத்து நைவேத்தியம் செய்து வெள்ளைப்பசுவிற்கு உணவாக கொடுத்தால் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
புனர்பூசம் நட்சத்திர நாளில் மூன்று புனித நீர் எடுத்து தல விருட்சமான சரக்கொன்றை விருட்சத்திற்கு ஊற்றி சாமி தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும். குபேர சம்பத்து உண்டாகும்.
மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 16 கி.மீ தூரத்தில் ஆக்கூர் அமைந்துள்ளது.🌹
#🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 24 சோமவார சதுர்த்தி: அங்காரக தோஷம் நீங்க ஆனைமுகத்தான் வழிபாடு!*
சோமவார சதுர்த்தி என்பது திங்கட் கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் ஒரு விசேஷ தினமாகும்.
விநாயகர்
வரும் நவம்பர் 24-ம்தேதி, திங்கட்கிழமை, விநாயகருக்கு உகந்த சோமவார சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் ஆனைமுகத்தோனை வழிபட்ட பின்னரே தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நமது கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அருள்வார் ஆனைமுகத்தான். சங்கடங்களை மட்டும் அல்லாமல் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கும் தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடிய தெய்வமாகவும் விநாயகர் பெருமான் திகழ்கிறார்.
வரும் திங்கட்கிழமையில் மறக்காமல் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் வேழமுகத்தான். மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை விரதம் இருந்து தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. சாபத்தால் நோய்வாய்ப்பட்ட சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். திருமாந்திரை ஊரில் உள்ள அட்சயநாததை தரிசித்தார். அதன் பலனாக சாபம் நீங்கி சிவபெருமான் தனது சடையில் சந்திரனை சூடிக்கொண்டார்.
சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டும் நெருப்பு கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணைவதை அங்காரக யோகம் அல்லது அங்காரக தோஷம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் மேஷம் மற்றும் விருச்சிகம். அந்த வகையில் வரும் நவம்பர் 24-ம்தேதி வரும் திங்கட்கிழமை சோமவார சதுர்த்தி அன்று அங்காரக தோஷம் ஏற்படுவதால் இந்த இரண்டு ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அன்றைய தினம் (திங்கட் கிழமை) நீங்கள் விரதம் இருந்து விநாயகரை தரித்தால் தோஷத்தின் தாக்கம் குறையும். அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலையும், வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி, பிரார்த்தனை செய்யுங்கள்.
சந்திரனுக்கும், விநாயகருக்கும் சாபம் போக்கிய ஸ்தலம் திருமாந்திரையில் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் உங்களுக்கான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மூட்டு வலிக்கும், கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும் இந்த கோவிலில் மருந்து தரப்படுகிறது. தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளலாம்.
எளிமையான கடவுளாக கருதக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் நாம் முழுமனதோடு வழிபாடு செய்ய அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மிகவும் சாந்நித்தியம் நிறைந்த கார்த்திகை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில், தூய மனதுடன் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!🌹
*நரசிம்மர் ஆலயங்கள்*
*பஞ்ச நரசிம்ம தலங்கள்* *02-மங்கைமடம் வீர* *நரசிம்மர்*
கார்த்திகை மாதம் சிவபெருமனை போல நரசிம்மருக்கும் முக்கியமானது, அவ்வகையில் ஒரே நாளில் தரிசித்துவிடும் ஐந்து நரசிம்ம தலங்களில் இரண்டாம் தலமான மங்கைமடம் வீரநரசிம்மர் ஆலயம் முக்கியமானது
இது சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் முதல் தலமான திருக்குறையலூருக்கு அடுத்து அமைந்துள்ளது, இதன் வரலாறும் சிவபெருமானோடு சம்பந்தபட்டது
இரண்யன்கசிபு என்பவன் சிவனிடமிருந்தும் யமனிடமிருந்தும் சில வரங்களை வாங்கியிருந்தான், அந்த கொடியவனுக்கு வரம் அருளிய பாவத்தில் இவர்களுக்கும் பங்கு இருந்தது, அந்த பாவம் தீர அவர்கள் நரசிமம்ரை வழிபட்ட இடமே இந்த மங்கை மடம், அப்படி எழுந்தவ்ர் இந்த வீர நரசிம்மர்
இந்த வீர நரசிம்ம கோலம் என்பது பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் இரண்டாம் நிலை தத்துவம், முதல் ஆலயமான திருகுறையலூர் பர தத்துவம் எனும் வைகுண்டத்தை சொல்வது இது பாற்கடலை சொல்லும் தத்துவம்
அதாவது பகவான் மன்னிப்பு அருள்பவராக இருக்கின்றார், உலக இயக்கத்தை காக்க தர்மத்தை காக்க பாற்கடலில் எல்லாம் அறிந்த அறிதுயிலில் இருக்கின்றார் என்பதை சொல்லும் தாத்பரியம்
சிவனும் யமனும் மயனும் இரண்யகசிபுவுக்கு துணை செய்ததை வரம் கொடுத்ததை உதவியதை பகவான் அறிந்தே இருந்தார் ஆனலும் அதை வெளிகாட்டாமல் அவர்கள் செய்த தவறை உணரும்போது அதனை மன்னிதார் , பகவான் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார் அவரிடம் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பதை சொல்லும் தலம் இது
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களினால் வந்த கர்மவினைகள் இங்கு கழியும், எவ்வித பழியோ குற்றமோ இருந்தால் அது உடனே நீங்குமிடம் இது
இது வாய்தலமுமாகும், பொதுவாக வாயுதங்களில் அறியாமையால் அல்லது அன்பால் செய்யபடும் எல்லா குற்றங்களும் மன்னிக்கபடும் தன்மை உண்டு, கண்ணப்பநாயனாரின் திருக்காளகஸ்தி அதற்கான தலம், இந்த கோவிலுக்கும் அதே சக்தி உண்டு
இங்கு நர்சிம்மராக பகவான் வீரகோலம் காட்டினாலும் அதன் தத்துவம் பாற்கடல் தத்துவம் அதாவது பாம்பணையில் பரமன் படுத்திருக்கும் தத்துவம் என்பதால் நாகதோஷங்களை விலக்கும் இடமும் இதுதான்
இந்த இடம் மங்கைமடம் என பெயர் வர காரணமானவர் திருமங்கை ஆழ்வார், அவரின் மனமாற்றம் குமுதவல்லி நாச்சியாரிடம் இருந்து தொடங்கும், நாச்சியார்தான் அவரிடம் தினமும் 1008 அந்தணர்க்கு ஒருவருடம் உணவிட சொல்லி கேட்பார்
அப்படி இங்கு மடம் அமைத்து திருமங்கை ஆழ்வார் தினமும் 1008 பேர்க்கு உணவளித்தார், அதற்காக பெரிய தோட்டத்தை அமைத்திருந்தார், அந்த இடம் இன்றும் "பெருந்தோட்டம்" என்ற அடையாளமாக உண்டு
இந்த தலத்தின் ஸ்ரீசெங்கமல புஷ்கரணி விஷேஷமானது
பகவான் இங்கு வீர நரசிம்மராக அருள்பாலிக்கின்றார் என்பது வீரம் எனும் ஒரு வார்த்தையில் கடந்து செல்லுதல் அல்ல, வீரம் என்பது வெறும் பராக்கிரமம் அல்ல வெறும் உடல்பலம் அல்ல, மனதால் ஒருவிஷயத்தை செய்துவிடலாம் என மட்டும் நம்புவதும் வீரம் அல்ல
வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம், எவன் தன்னை கட்டுபடுத்தி தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டு காட்டியது
ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகபட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றி கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை
வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது தன் ஆசைகளையும் மாய மயக்கங்களையும் வெல்வது, தான் எனும் அகந்தையினை வெல்வது, தன் மனதில் விடாபிடியாக இருந்து தன்னை ஆட்டுவிக்கும் ஆசைகளை வெல்வது
அது அல்லாது ஒருவன் ஞானம் பெற முடியாது
எல்லாம் தன்னால் நடப்பது என்றும், "நான்" எனும் அகந்தையும் ஆங்காரமும் கொண்டவனுக்கு ஒரு காலமும் முக்தியுமில்லை நிம்மதியுமில்லை. எவன் இந்த உடல் வெறும் கூடு இதில் ஆன்மா அமர்ந்து இறைஉத்தரவால் கர்மாவினை மட்டும் செய்கின்றது என கருதுவானோ அவனிடம் அகங்காரம் இராது ஞானம் பெருகும்
இந்த சிந்தை உள்ளவன் வெற்றியில் மகிழ்வதில்லை, தோல்வியில் கதறுவதுமில்லை, பெரும் இழப்புகளில் கதறுவதுமில்லை, உலகமே காலடியில் கிடந்தாலும் ஏறெடுத்து பார்ப்பதுமில்லை
அதில் தர்ம ஞானத்தை கலந்தவன் காலத்துக்கும் நிலைக்கின்றான்
தன்னை வெல்லுதல் தன் மனதை வெல்லுதல் ரஜோ குணத்தை வெல்லுதல் என அந்த பலத்தை தரும் ஆலயம் இது, தன்னை தன் குறையினை ஒப்புகொள்வது பெரும் வீரம், அதற்கு தனி தைரியமும் மனபலமும் வேண்டும் அதை தரும் ஆலயம் இது
இந்த ஆலயம் எடுத்த காரியத்தை முடிக்கும் வைராக்கியம் தரும் பெரும் நல்ல முடிவினை அருளை பெற்றும் தரும்
திருமங்கை ஆழ்வார் இங்கு பெரும்பணி செய்துதான் அன்னதானம் செய்துதான் அடுத்தகட்டத்து உயர்ந்தார், அவரைபோல் மனதிடம் மிகுந்த ஒருவரை மிகுந்த மனபலமு தவபலமும் கொண்ட இன்னொருவர் இல்லை, அந்த அளவு அவருக்கும் மனதைரியம் பலம் என எல்லாமும் கொடுத்த ஆலயம் இது
கார்த்திகை மாதம் என்பது கர்மா செய்ய பலம் வேண்டும் மாதம், கர்மத்தை செய்ய அதை மனவலிமையுடன் செய்ய வரம்வேண்டும் மாதம், கார்த்திகை மாத நோன்புகளெல்லாம் அப்படியானவை வழிபாடும் அப்படியானது
அந்த கார்த்திகையில் கர்மத்தை செய்ய வரம்தரும் ஆலயங்களில் இது முக்கியாமானது, திருமங்கை ஆழ்வாரின் கர்மபலன் அப்படித்தான் மிக தீவிரமானது
இந்த ஆலயத்தில்வழிபட்டால் மணவாழ்வு இனிதாகும், நல்வாழ்வு வாய்க்கும், திருமண வாழ்வும் ஒரு கர்மமே, அந்த கர்மத்தை சரியாக செய்ய இவ்வாலயம் அருள்தரும்
மணவாழ்வு என்றல்ல எல்லா கர்மமும் செய்ய மனதிடமும் வைராக்கியமும் தன்னை வென்று தன் ஆசைகளை வென்று கர்மம் செய்யும் மனபலமும் அவசியம் அதனை இந்த ஆலயம் தரும்
இங்கு சென்று அந்த செங்கமல குள்த்தில் குளித்து தயிசாதம் அன்னதானம் நைவேத்யம் செய்து வணங்குவது சிறப்பு, அங்கு திருமங்கை ஆழ்வார் போல் அடியார்களுக்கு அன்னதானமிட்டால் எல்லோருக்கும் அன்னமிட்டால் இன்னும் இன்னும் சிறப்பு
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது சாதாரணம் அல்ல, அன்னதானம் ஒன்றில்தான் மானிடன் நிறைவு கொள்வான் வேறு எந்த தானம் கொடுத்தாலும் அவனுக்கு நிறைவு வராது, இந்த உடல் கர்மம் செய்ய வந்தது, ஒவ்வொருவரும் அன்னத்தோடு சக்திபெற்று தொடர்ந்து கர்மம் செய்ய வழிவகை செய்வது பெரும் புண்ணியம் , அந்த புண்ணியத்தை இங்கு செய்தால் இறையருள் நிரம்ப நிரம்ப வந்து சேரும், நரசிம்மரின் திருவருளில் எல்லா பாவகர்மாவும் தீர்ந்து புண்ணிய கர்மா அதிகரிக்கும் , எல்லா தோஷமும் நீங்கி ஷேமம் ஒன்றே பெருகி நிற்கும்.
மங்கைமடம் வீர நரசிம்மர்
படம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏
முருகப்பெருமான் ஆலயங்கள் :
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
பக்தனுக்காக, பொட்டு வைத்துக் கொள்ள சிரம் தாழ்த்திய சென்னி ஆண்டவர்
பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். 1749 அடி உயரம் உடைய இந்த மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது . அதனால் இந்த மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. (சிரகிரி - சிரம் - சென்னி, கிரி-மலை).அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய 'கந்த சஷ்டி கவசம்' அரங்கேற்றிய தலம்.
இங்கு முருகன் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம்.
இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கத்துறையான் என்னும் குடியானவன், இங்கு பண்ணையாரிடம் மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முருக பக்தனான அவரை தடுத்தாட் கொண்ட முருகன், அவர் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்தார். அவனுக்கு முருகன், நிலத்தம்பிரான் என்று நாமக்கரணம் சூட்டினார்.
ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால், சென்னியாண்டவருக்கு நிலத்தம்பிரானே பூஜை செய்தார். நிலத்தம்பிரான் பூஜையின் போது முருகனின் நெற்றியில் பொட்டு வைக்க முயற்சித்தபோது, அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், சென்னி ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறது
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி படம்
கீழே!👇👇 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏











