ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
ஒரு புதிய அரசியல் கட்சிக்கு இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு ஆரம்பத்திலேயே நிகழ்ந்திருப்பது, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. பொதுவாக, இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவரின் மீது மக்களின் கோபமும் விமர்சனமும் திரும்பும். ஆனால், கரூரில் நடந்த துயர சம்பவத்தில், 41 பேர் பலியான கோபம் விஜய் மீது திரும்பாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பொதுவெளியில், மக்களில் ஒருவர் கூட விஜய்யை குறை சொல்லவில்லை; மாறாக, தங்கள் தலைவருக்கு ஆதரவாகவே திரண்டு நிற்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? சமூக வலைத்தளங்களில் காசுக்கு மாரடிக்கும் கூட்டம்’ மட்டுமே புலம்புகிறது என்றும், இதுதான் மக்களின் சக்தி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பொதுவாக, ஒரு அரசியல் தலைவரின் பொதுக்கூட்டத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டால், மக்கள் அந்த தலைவரின் மீது கடும் விமர்சனங்களை வைப்பார்கள். நீயெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வருகிறாய் என்று நேரடியாக விமர்சனம் வைப்பார்கள். ஆனால், கரூரில் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. விபத்து நடந்ததால் பெரும் சோகத்திற்கு உள்ளான விஜய், பலியானவர்களுக்கு ரூ.20 அளிக்கவிருப்பதாக வாக்குறுதி அளித்தார். விரைவில் கரூருக்கு நேரடியாக சென்று அந்த பணத்தை கொடுக்க தான் போகிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் இந்த சோக நிகழ்வால் அவர் எந்த அளவுக்கு மனவேதனை அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த கூட்ட நெரிசல் விபத்துக்கு என்ன காரணம் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும். இந்த விபத்துக்கு விஜய் காரணமில்லை என கரூர் மக்கள் நம்புவதுபோல் விசாரணையின் முடிவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்று தவெகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், களத்தில் மக்கள் மத்தியில் இந்த விமர்சனங்கள் எதிரொலிக்கவில்லை என்று த.வெ.க. ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விஜய்யை ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கும் நிலையில், விஜய் மீதும், அவரது கட்சியினர் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. இவ்வளவு பெரிய சோதனை காலத்திலும் மக்கள் விஜய் மீது தங்கள் ஆதரவை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், அதுவே மக்களின் உண்மையான சக்தியையும், மாற்றத்திற்கான தேடலையும் காட்டுகிறது. மக்கள் தங்கள் கருத்தை தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்; அதுவரை மௌனம் காப்பார்கள். இந்தச் சோதனைகள் அனைத்தையும் தாண்டி, “உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும்” என்ற பாடல் வரிகளை போலவே, இந்த நெருக்கடிகள் விஜய்யின் அரசியல் வாழ்வை இன்னும் வலுப்படுத்தவே வாய்ப்புள்ளது. இத்தகைய சோதனைகள் தான் விஜய்யை ஒரு சிறந்த அரசியல் தலைவராக மாற்றும். நிர்வாக தவறுகளை களையவும், தொண்டர்களை கட்டுக்கோப்புடன் நடத்தவும், அரசியல் எதிர்ப்புகளை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் இது அவருக்கு ஒரு பெரிய பாடம். ஒரு புதிய தலைவர், தனது தொண்டர்களின் வலிமையுடன் இந்த கஷ்டமான காலகட்டத்தை கடந்து வந்தால், மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே, கரூர் சம்பவத்தின் துயரம் மறக்கப்பட முடியாதது என்றாலும், அதற்கு பிந்தைய மக்களின் பிரதிபலிப்பு, விஜய் மீது அவர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையையும், ஒரு நல்ல தலைமைக்கான எதிர்பார்ப்பையும் தெளிவாக உணர்த்துகிறது. இதுதான் உண்மையான மக்களின் சக்தி #🔴இன்றைய முக்கிய செய்திகள் #கரூர் சம்பவம் 😰 #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
🔴இன்றைய முக்கிய செய்திகள் - ருநாள் வெல்லும் . ண்மை ஒ ೨ இந்த உலகம் உன்பேர் சொல்லும் அன்று . விஜய்க்கு குறையாத ஆதரவு இது எப்படி சாத்தியம்? ருநாள் வெல்லும் . ண்மை ஒ ೨ இந்த உலகம் உன்பேர் சொல்லும் அன்று . விஜய்க்கு குறையாத ஆதரவு இது எப்படி சாத்தியம்? - ShareChat
ஒரு புதிய அரசியல் கட்சிக்கு இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு ஆரம்பத்திலேயே நிகழ்ந்திருப்பது, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. பொதுவாக, இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவரின் மீது மக்களின் கோபமும் விமர்சனமும் திரும்பும். ஆனால், கரூரில் நடந்த துயர சம்பவத்தில், 41 பேர் பலியான கோபம் விஜய் மீது திரும்பாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பொதுவெளியில், மக்களில் ஒருவர் கூட விஜய்யை குறை சொல்லவில்லை; மாறாக, தங்கள் தலைவருக்கு ஆதரவாகவே திரண்டு நிற்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? சமூக வலைத்தளங்களில் காசுக்கு மாரடிக்கும் கூட்டம்’ மட்டுமே புலம்புகிறது என்றும், இதுதான் மக்களின் சக்தி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பொதுவாக, ஒரு அரசியல் தலைவரின் பொதுக்கூட்டத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டால், மக்கள் அந்த தலைவரின் மீது கடும் விமர்சனங்களை வைப்பார்கள். நீயெல்லாம் எதுக்கு அரசியலுக்கு வருகிறாய் என்று நேரடியாக விமர்சனம் வைப்பார்கள். ஆனால், கரூரில் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. விபத்து நடந்ததால் பெரும் சோகத்திற்கு உள்ளான விஜய், பலியானவர்களுக்கு ரூ.20 அளிக்கவிருப்பதாக வாக்குறுதி அளித்தார். விரைவில் கரூருக்கு நேரடியாக சென்று அந்த பணத்தை கொடுக்க தான் போகிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் இந்த சோக நிகழ்வால் அவர் எந்த அளவுக்கு மனவேதனை அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த கூட்ட நெரிசல் விபத்துக்கு என்ன காரணம் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும். இந்த விபத்துக்கு விஜய் காரணமில்லை என கரூர் மக்கள் நம்புவதுபோல் விசாரணையின் முடிவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள் என்று தவெகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், களத்தில் மக்கள் மத்தியில் இந்த விமர்சனங்கள் எதிரொலிக்கவில்லை என்று த.வெ.க. ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விஜய்யை ஒரு மாற்று சக்தியாகப் பார்க்கும் நிலையில், விஜய் மீதும், அவரது கட்சியினர் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. இவ்வளவு பெரிய சோதனை காலத்திலும் மக்கள் விஜய் மீது தங்கள் ஆதரவை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், அதுவே மக்களின் உண்மையான சக்தியையும், மாற்றத்திற்கான தேடலையும் காட்டுகிறது. மக்கள் தங்கள் கருத்தை தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்; அதுவரை மௌனம் காப்பார்கள். இந்தச் சோதனைகள் அனைத்தையும் தாண்டி, “உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும்” என்ற பாடல் வரிகளை போலவே, இந்த நெருக்கடிகள் விஜய்யின் அரசியல் வாழ்வை இன்னும் வலுப்படுத்தவே வாய்ப்புள்ளது. இத்தகைய சோதனைகள் தான் விஜய்யை ஒரு சிறந்த அரசியல் தலைவராக மாற்றும். நிர்வாக தவறுகளை களையவும், தொண்டர்களை கட்டுக்கோப்புடன் நடத்தவும், அரசியல் எதிர்ப்புகளை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் இது அவருக்கு ஒரு பெரிய பாடம். ஒரு புதிய தலைவர், தனது தொண்டர்களின் வலிமையுடன் இந்த கஷ்டமான காலகட்டத்தை கடந்து வந்தால், மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே, கரூர் சம்பவத்தின் துயரம் மறக்கப்பட முடியாதது என்றாலும், அதற்கு பிந்தைய மக்களின் பிரதிபலிப்பு, விஜய் மீது அவர்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையையும், ஒரு நல்ல தலைமைக்கான எதிர்பார்ப்பையும் தெளிவாக உணர்த்துகிறது. இதுதான் உண்மையான மக்களின் சக்தி #🔴இன்றைய முக்கிய செய்திகள் #கரூர் சம்பவம் 😰 #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ #தவெக(TVK)
🔴இன்றைய முக்கிய செய்திகள் - ருநாள் வெல்லும் . ண்மை ஒ ೨ இந்த உலகம் உன்பேர் சொல்லும் அன்று . விஜய்க்கு குறையாத ஆதரவு இது எப்படி சாத்தியம்? ருநாள் வெல்லும் . ண்மை ஒ ೨ இந்த உலகம் உன்பேர் சொல்லும் அன்று . விஜய்க்கு குறையாத ஆதரவு இது எப்படி சாத்தியம்? - ShareChat
110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் செபடம்பர் 30 மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலியைப் பகிர்ந்தார். அதில் அந்த கொடிய மரணங்கள் குறித்த எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி விஜய் பேசியிருப்பதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள். இதுகுறித்து நீட் தேர்வு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தன் உயிரையே கொடுத்த அனிதாவின் அண்ணன் மணிரத்னம் வெளியிட்டுள்ள பதிவில்…. அனைவருக்கும் வணக்கம், எனது உடன் பிறந்த தங்கை அனிதா மறைந்தபோது, நடிகர் விஜய் அவர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறியது எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. அனிதாவின் விருப்பமான நடிகர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர், ஏற்கனவே தன்னுடன் பிறந்த தங்கையை இழந்தவர் என்பதால், அந்த வலியை உணர்ந்து எங்களுடன் ஆறுதலாய் நின்றார் என்பது மறக்கமுடியாத நிகழ்வு. அந்த நேரத்தில் ஜனநாயக அமைப்புகள் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள், ஜாதியவாத மற்றும் இந்துத்துவ மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்புகள்/கட்சிகள் உட்பட அனைவரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். ஆறுதல் தெரிவிக்காமல் இருந்தவர்கள் பாமக தலைவர்களும் (அவர்களின் தொண்டர்கள் வந்திருந்தார்கள்) டாக்டர் கிருஷ்ணசாமியும் மட்டுமே. ஆறுதலாய் நின்ற அனைவரிடமும் நான் நன்றியுள்ளவனாக இருந்தாலும், அதற்காக அவர்களின் ஜாதியவாத/மதவாத அரசியலையும், இன்று விஜய் செய்வதைப்போன்ற கேடுகெட்ட அரசியலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை. என் தங்கையின் இறப்பிற்கு முன்பே, பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளால் அரசியல் விழிப்புணர்வைப் பெற்றவன் நான். TVK Gen Z …..க்களுக்கு பாடம் எடுங்கள், எனக்கு வேண்டாம். அண்ணன் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது, இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, சமீபத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 தொண்டர்களை நினைத்து வருந்தும் தலைவனுக்குரிய மனநிலையிலேயே அவர் இருப்பார் என எண்ணினேன். ஆனால் இன்று அவர் வெளியிட்ட காணொளி என்னை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணங்களில் ஒன்றாக அவரது பரப்புரைப் பயணமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதையோ, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோருவதையோ செய்யவில்லை. மாறாக, தம்முடைய தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாகவே அந்தக் காணொளி அமைந்துள்ளது. தங்களின் கரூர் பரப்புரைப் பயணத்திற்கு முன்பே இப்படிப்பட்ட பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன என்பதே உண்மை. கரூரில் நடந்தது என்பது மக்கள் விரோத பாஜகவை தவிர யாராலும் எதிர்பார்க்கப்படாதது. ஒரு தலைவருக்குரிய பொறுப்பு, தகுதி, மக்களுக்கான கரிசனை எதுவும் அந்த உரையில் இல்லை. அனிதாவின் இறப்பின் போது, எந்த ஆதாரமும் இன்றி திமுக மீதும்/ மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்கள் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போலவே, இன்று நீங்களும் அதே வழியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள். விஜய் அவர்கள் கூறியதுபோல், அனைத்துப் பரப்புரைக் கூட்டங்களின் நிகழ்வுகளும் மக்களிடம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உண்மை மறைக்கப்பட முடியாது. மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்தால், இறுதியில் மக்கள் முன்னிலையில் விஜய்தான் சிக்குவார். அண்ணா கூறியபடி: "மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள்." இந்தக் கொள்கைகள் விஜய்க்கு பொருந்தாது என்பதும் வெளிப்படுகிறது. எனவே, விஜய் அவர்கள் இனி அரசியல் பேசாமல், தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தொடர்வது சிறந்தது. இல்லையெனில், அவர் சொல்வதுபோல், அவருடைய அரசியல் பயணம் கொள்கை எதிரிகளுடனே இணைய வேண்டிய சூழ்நிலையே உருவாகும் என்பது கசப்பான உண்மை. விஜய் அவர்கள் பாஜகவிற்கு கிடைக்கப்போகும் மிக வலிமையான மற்றும் ஆபத்தான ஆயுதம். #கரூர் சம்பவம் 😰 #🔴இன்றைய முக்கிய செய்திகள் #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
கரூர் சம்பவம் 😰 - கேடு கெட்ட அரசியல் நீட்அனிதா செய்யும் விஜய் 2 அண்ணன் காட்டம் கேடு கெட்ட அரசியல் நீட்அனிதா செய்யும் விஜய் 2 அண்ணன் காட்டம் - ShareChat
சீனா வரை இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல உலக அரசியல் தலைவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட இறந்த குடும்பங்களுக்கு அவர்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு: கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் விஜய் தன்னுடைய கட்சி சார்பாக நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலால் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் திமுகவின் சதி இருப்பதாக தவெக சார்பில் கூறிவருகின்றனர். இதுசம்பந்தமான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. வெள்ளிக்கிழமை இதன் நிலவரம் என்ன என்பது தெரியவரும். கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இரண்டு பேரை போலிசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை தனிப்படை அமைத்து பிடிக்கும் பணியில் போலிஸார் விரைந்துள்ளனர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அடுத்தடுத்து விசாரணை: கூடிய சீக்கிரம் இன்னும் விஜயை ஏன் கைது செய்யவில்லை என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தனிப்படைஅமைத்து விசாரணை செய்யவும் டெல்லியில் இருந்து 8 பேர் கொண்ட குழு கரூருக்கு விஜயம் செய்தனர். அவர்களும் கரூரில் நேரடியாக மக்களை சந்தித்து உண்மை நிலவரத்தை ஆராய்ந்தனர். 10000 பேர்தான் கூடுவார்கள் என்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததே ஏற்கமுடியாதது? அதெப்படி உங்களால் அதை கூற முடிந்தது என கரூர் நீதிமன்றம் தவெக கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு டாப் ஸ்டார் வருகிறார் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பார்க்க வருவார்கள். அதிலும் விஜய் மிகவும் காலதாமதமாகத்தான் வந்தார். அதனால் காலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் வெயிலேயே மக்கள் அந்த கூட்ட நெரிசலில் தவித்திருக்கின்றனர். அரசை விட அதிகமாக செய்யலாமே? இந்த நிலையில் விஜயை பற்றி பிரபல திரைப்பட இயக்குனர் ராஜகுமாரன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்திருப்பதாக கூறினார். ஆனால் அது இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் வாங்குகிற 200 கோடியில் அரசை விட அதிகமாக செய்யலாமே. வருடத்திற்கு இரண்டு படம் நடித்து 400 கோடியில் 100 கோடியை தனக்காக வைத்துக் கொண்டு மீதம் 300கோடியில் எவ்வளவோ நல்லது செய்யலாமே? rajakumaran ஆனால் அது அவருடைய நோக்கம் இல்லை. சினிமாவை அவர்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அதை போல நாட்டையும் நாம்தான் ஆட்சி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அது நடக்காது என ராஜகுமாரன் பேசியிருக்கிறார். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #கரூர் சம்பவம் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் அதிரடி கைது! #கரூர் சம்பவம் விசாரிக்க பாஜக குழு தலைவர்கள் கரூர் வருகை! #கரூர் சம்பவம் விஜய் கண்ணீர் மல்க இரங்கல் #கரூர் சம்பவம் 😰
🔴இன்றைய முக்கிய செய்திகள் - 8 jjay TVK: மக்களுக்கு நல்லது V செய்யணும்னு அரசியலுக்கு வரல! விஜயின்நோக்கமே இதான் எல்லா பக்கமும் செக்கா? 8 jjay TVK: மக்களுக்கு நல்லது V செய்யணும்னு அரசியலுக்கு வரல! விஜயின்நோக்கமே இதான் எல்லா பக்கமும் செக்கா? - ShareChat
ஜவுன்பூரின் கவுராபாத்ஷாபூர் காவல் நிலையப் பகுதியிலுள்ள குச்முச் கிராமத்தைச் சேர்ந்த சங்கரு ராம், மனைவி இறந்த பிறகு தனியாக விவசாயம் செய்து வந்தார். குழந்தைகள் இல்லாத அவர், குடும்பத்தினர் அறிவுறுத்தியும் மறுமணம் செய்ய முடிவெடுத்தார். கடந்த செப்டம்பர் 29, 2025 அன்று, ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த மன்பாவதியை நீதிமன்றத்தில் திருமணம் செய்து, பின்னர் கோவிலில் புரளிகள் எடுத்தார். "வீட்டைப் பார்த்துக்கொள், உன் குழந்தைகளை நான் பொறுப்பேற்பேன்," என்று அவர் உறுதியளித்ததாக மன்பாவதி கூறினார். ஆனால், திருமண இரவில் நெடுநேரம் பேசிய பிறகு, மறுநாள் காலை சங்கரு ராமின் உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மகிழ்ச்சியாக தொடங்கிய திருமணம் துக்கத்தில் முடிந்தது. சங்கரு ராமின் டெல்லி மருமகன்கள் இறுதிச் சடங்கை நிறுத்தி, பிரேதப் பரிசோதனை கோரியுள்ளனர், இது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔴இன்றைய முக்கிய செய்திகள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - "75 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த தாத்தா" . முதலிரவு முடிந்த மறுநாளே மணமகன்திடீர் மரணம் விதியா இல்ல சதியா ? ஊர் முழுக்க தே பேச்சு தான் பரபரப்பு சம்பவம்!! "75 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த தாத்தா" . முதலிரவு முடிந்த மறுநாளே மணமகன்திடீர் மரணம் விதியா இல்ல சதியா ? ஊர் முழுக்க தே பேச்சு தான் பரபரப்பு சம்பவம்!! - ShareChat
பெண் சக்தியை துணையாகக் கொண்டு நடந்த வதத்தின், இறுதிநாள் வெற்றியை விவரிக்கும் நிகழ்வே விஜயதசமி. கல்வி, கேள்வி, அறிவில் சிறந்து விளங்கவும், தொழில் சார்ந்த புது முயற்சிகளுக்கு பிள்ளையார் சுழி போடவும் ஏற்ற நாளாகும். விஜயதசமி திருநாளில் குழந்தைகளை முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்பவர்கள் இந்த நாளில் சேர்க்கலாம். அல்லது குழந்தைகளுக்கு முதன் முதலில் எழுத பழக்கும் போது, குழந்தைக்கு நல்ல குருவாக கிடைத்து அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றை மனதார முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்கள் மடியில் அமர வைத்து, ஒரு தட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையின் தந்தையின் மடியில் அமர வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கலாம். அல்லது பள்ளியில் வித்யாரம்பம் செய்கிறார்கள் என்றால் அங்கு குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்து வைக்கலாம். வித்யாரம்பம் கொண்டாட நினைக்கும் பொதுமக்கள் காலையில் 7:30 முதல் 12 மணி வரை கொண்டாடலாம். காலை நேரத்தில்தான் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்க வேண்டும். பிற்பகலில் இந்த நிகழ்ச்சியை கடைப்பிடித்தால் சிறப்பானதாக இருக்காது.இந்த நிகழ்ச்சியின் போது குழந்தையின் குரு, அம்மா, அப்பா கைபிடித்து எழுதுவது மிக சிறப்பு பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங் களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம். #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #விஜயதசமி வாழ்த்துக்கள் #சிறப்பு விஜயதசமி
🛕புரட்டாசி மாதம் வழிபாடு - இன்று விஜயதசமி.. [ வித்யாரம்பம் !608 17 செய்வதற்கான [6060 நேரம் ! [ இன்று விஜயதசமி.. [ வித்யாரம்பம் !608 17 செய்வதற்கான [6060 நேரம் ! [ - ShareChat
சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பிலும் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார். இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார். "ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். Getty Images 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்' "எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார். தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார். Getty Images அரசுத் தரப்பில் கூறுவது என்ன? இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா? ''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.'' கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை? ''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.'' Getty Images கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா? ''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.'' பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா? ''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.'' DIPRகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா? ''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.'' பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா? ''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.'' இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர். என்ன நடந்தது? Getty Images கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. 'கரூரில் மட்டும் ஏன் இப்படி? உண்மை வெளியே வரும்' - விஜய் பேசியது என்ன? tvk #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ - விஜய் மௌனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் என்ன ~  நடந்தது? விஜய் மௌனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் என்ன ~  நடந்தது? - ShareChat
நவராத்திரி பண்டிகையானது, ஒரு மனிதனுக்கு வீரம் (துர்கா), செல்வம் (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். புராணங்களின்படி, நவராத்திரியின் 9-வது நாளில், அன்னை பராசக்தி அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டதை குறிக்கும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் வகையில், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும், நம் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருக்கும் பொருட்கள் மற்றும் கருவிகளை வைத்து இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். ஆயுத பூஜைக்கான வழிபாட்டு முறைகள் : வீட்டை தூய்மைப்படுத்துதல் : பூஜை தொடங்கும் முன் வீடு முழுவதும் சுத்தமாக துடைத்து, நிலை, கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்டுவது விசேஷம். பூஜை அறை : பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு, வினை தீர்க்கும் விநாயகரை வணங்குவது அவசியம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமப் பொட்டு, அருகம்புல் வைத்து வழிபட்ட பின்னரே சரஸ்வதியை வணங்க வேண்டும். தொழிலுக்கு மரியாதை : ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப ஆயுத பூஜை அன்று நம்முடைய தொழில் கருவிகளை வணங்க வேண்டும். பூஜை அறையில் புத்தகங்கள், பேனாக்கள், வீட்டு உபயோக கருவிகளான சுத்தி, அரிவாள்மனை போன்றவற்றை சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழில் சார்ந்த இயந்திரங்களுக்குப் பொட்டு வைத்து அலங்கரித்து வணங்க வேண்டும். வாகனம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் சந்தனத்தை தெளித்து, பூ வைத்து வழிபடலாம். நைவேத்தியம் : நைவேத்தியத்துக்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை, பாயாசம் என பல வகையான பழங்களை வைத்துப் பூஜையை தொடங்க வேண்டும். பூஜை செய்த இடங்களில் மணியடித்து, நீரினால் 3 முறை சுற்றி நைவேத்தியம் செய்து, ஆயுதங்கள் மற்றும் புத்தகங்களுக்கும் நிவேதனம் செய்த பிறகு, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் விபூதி, குங்குமம் மற்றும் பொரிக்கடலை ஆகியவற்றை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரம் எது..? சரஸ்வதி பூஜை நேரம் (அக்டோபர் 1, புதன்கிழமை) : இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். அதேபோல், நவராத்திரி விழாவின் நிறைவாக 10-வது நாளில் அம்பிகை மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 2ஆம் தேதியான வியாழன் அன்று வருகிறது. #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #நவராத்திரி
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் - ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி ? வழிபட வேண்டிய வழிமுறை ! 0  உகந்தநேரம் எது. 2 ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி ? வழிபட வேண்டிய வழிமுறை ! 0  உகந்தநேரம் எது. 2 - ShareChat
தமிழக வெற்றிக் கழகம் 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோய் உள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27ந் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும். ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்தி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும். தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது. அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உன்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது. இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ - விஜய் பேச்சில் இவ்வளவு 9_6irGIূIBBLOIT..? கம்யூனிஸ்ட்கட்சி கண்டனம் 4 300 விஜய் பேச்சில் இவ்வளவு 9_6irGIূIBBLOIT..? கம்யூனிஸ்ட்கட்சி கண்டனம் 4 300 - ShareChat
புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியது. இதையொட்டி பலர் தங்கள் வீடுகளில் கொலு வைத்துள்ளனர். இந்த நவராத்திரி இன்று ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்று அவசியம் என்பதே இந்த மூன்று மூன்றாக பிரித்து வழிபடுவதன் நோக்கமாகும். 9 நாட்கள் அரக்கன் மகிஷாசுரனை அழிக்க அனைத்து தெய்வங்களிடம் இருந்து அன்னை பெற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ததாக ஐதீகம். இதனால்தான் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜை போடும் வழக்கம் வந்தது. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று அம்பிகை மகிஷனை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளாகும். என்ன செய்யலாம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளில் என்னென்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், வீடு, வாசல், நிலை கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை துடைத்து அவற்றிற்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். நிலை வாசலில் நிலை வாயிலிலும் சாமி அறையிலும் மாவிலை தோரணம் கட்டிவிட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை செய்யும் முன்பு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் குங்குமம் அதாவது மஞ்சளிலோ அல்லது மாட்டு சாணத்திலோ பிள்ளையார் பிடித்து வைத்து அதில் மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். கல்வியில் சிறந்த சரஸ்வதி தேவியை வணங்க புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். எதற்கெல்லாம் பூஜை அது போல் அரிவாள் மனை, கத்தி, சுத்தியல், கட்டிங் பிளையர், கத்தரிகோல், பூண்டு நசுங்கும் இடி கல், குழவி கல், சப்பாத்தி போடும் கட்டை என நாம் என்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும். அது போல் மோட்டார், லிப்ட் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். இயந்திரங்களுக்கு பூஜை வீட்டில் இருக்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் உங்கள் தொழிலுக்கு பிரதானமாக பயன்படுத்தும் பொருளை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். அது போல் பஸ், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம், சைக்கிள், கார் உள்ளிட்டவைகளையும் துடைத்து பூ, பூஜை செய்யலாம். வாகனங்கள், இயந்திரங்களுக்கு சந்தனத்தை கரைத்து தெளித்து அதில் பொட்டு வைக்க வேண்டும். வாழை கன்று தேவைப்பட்டால் வாழை கன்றை கட்டலாம். பின்னர் சுண்டல் செய்து, பொரி கடலை, பழங்கள் வைத்து தேங்காய் உடைத்து படைக்க வேண்டும். சுவாமிக்கு தனி பூஜையும் வாகனங்கள், மோட்டார், கடைகளுக்கு தனி பூஜையும் போட வேண்டும். சுண்டல் கடலை ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனியே பொரி கடலை, சுண்டல் வைக்க வேண்டும். வாகனங்களின் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை முடிந்ததும் ஓட்டி பார்க்க வேண்டும். அதுபோல் வாகனங்களுக்கு சுத்தி போட வேண்டும். உகந்த நேரம் இந்த ஆண்டு இன்றைய தினம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் பூஜை செய்யலாம். மாலையில் பூஜை போடும் வழக்கம் இருப்போர், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம். மேலும் காலை 9 டூ 10, மதியம் 1.30 டூ 3, மாலை 4 டூ 5, இரவு 6 டூ 10 ஆகிய நேரங்களிலும் பூஜை செய்யலாம். அவரவருக்கு எப்போது தோதுபடுகிறதோ அந்த நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம். #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏நமது கலாச்சாரம் #ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #சரஸ்வதி #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
🙏🏻புரட்டாசி மாதம்✨ - Ayudha Pooja 2025: gl6urgl ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்யஉகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி ? Ayudha Pooja 2025: gl6urgl ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்யஉகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி ? - ShareChat