காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக உடல் தளர்ச்சி பெற்ற நிலையில் ஒருநாள் மாலையில் தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார்.
குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன் மோட்சம் கிடைக்கும்.
இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம் பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர் என்ன ஆச்சரியம் மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர் மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம் தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து தலையில் வைத்துக் கொண்டார்.
குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது தேடி வந்த சிதம்பரம் படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ"
பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம்
அப்பழங்களை 'விஷு' புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள் கெடாமலும் ஒன்று கூட தாரில் இருந்து கீழே விழாமல் இருந்த அதிசய சம்பவம்.
சென்னையிலிருந்து ஒரு முக்கியஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் பெரியவாளின் திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார் வாழைப் பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளுக்கு வாழைத்தார்களை சமர்ப்பித்து விட்டு அவருக்கு நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
மடத்திலேயே கைங்கர்யம் செய்யும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து இந்த ஒவ்வொரு தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு என்றார் மகா பெரியவா.
கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்தார் பெரியவாளிடம் எண்ணிட்டேன் பெரியவா ஒரு தார்ல 275 பழம் இன்னொரு தார்ல 375 பழம் இருக்கு என்றார்.
சபாஷ் சரி என்று இழுத்த பெரியவா ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இது வரைக்கும் பார்த்திருக்கியோ என்று கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.
ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி இல்லே பெரியவா இதுவரை நான் கேள்விப்பட்டதில்லே பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன் என்றார்.
ஓ இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை பாத்துண்டிருக்கியா என்று புன்னகையுடன் கேட்ட பெரியவா இதுக்கு நா பதில் சொல்ல வேணாம்.
இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு அங்கே போ அந்த அம்மனை தரிசனம் பண்ணு உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும் என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.
1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு
மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே குடும்பத்தோடு இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்
அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர் வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர்.
சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ ஆச்சர்யப்பட்டு சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.
அவர்களிடம் ஐயா 1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி நல்ல வாழைத்தார் வேணும் இந்த ஊரில் எங்கே கிடைக்கும் என்று கேட்டார்.
ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை நீட்டி தோ தெக்கால போங்க ஒரு பெரிய கிணத்தைத் தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம் ஒண்ணு வரும் அங்கே இருக்கிறவர் கிட்ட கேட்டுப் பாருங்க என்று சொன்னார்.
தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு விசாரிக்க 1008 பழங்கள் அடங்கிய தார் ஒன்று வேண்டும் என்று சொன்னார்.
சற்று முன் வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார் அவர் இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு என்று இவர் முன்பாக வைத்தார்.
"1008" பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே போலிருக்கு என்று பெரியவா அதைப் பார்த்து புன்னகைத்தார் இடி இடியெனச் சிரித்தார்.
நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே
மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.
விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது இந்த தாரை ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு என்றார் பெரியவா தடாலென்று.
அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள் விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே அதுக்குள்ள இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார் குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டிட்டாருன்னா அது பதினாலு நாள் இல்லே பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.
அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா இருக்கும் பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு
சிஷ்யரிடம் சொன்னார்.
குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில் ஒரு பழம் கூட தாரில் இருந்து கீழே விழவில்லை முனையில் கருக்கவில்லை கொஞ்சமும் வீணாகாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம் தான்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
https://youtube.com/shorts/c8YXsjDG9bs?si=YJF9w-GN98uiUpvR #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
"பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள்"
பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர் என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம் கொள்ளை அன்பும் பாசமும் பரிவும். மறுபுறம்.பாசத்தோடு,
அக்கறையும் இணைந்து அதட்டி உருட்டத்தயங்க மாட்டாள், பாட்டி அது ஒரு சிறப்புச் சலுகை.
காஞ்சி காமகோடி பீடம் பரமாசார்யாளிடம் பரம பக்தியும் பிள்ளைப் பாசமும் ஒருங்கே பெற்ற பெருமை எசையனூர்ப் பாட்டிக்கு உண்டு.
எசையனூர்ப் பாட்டி என்ற கோகிலாம்பாள் அம்மாள் தென்னார்க்காடு மாவட்டத்தில் எசையனூர் என்றகிராமத்தில் செல்வம் நிறைந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு இளமையில் கணவரையும் குழந்தைகளையும் இழந்தவள்.
ஞானபக்தி வைராக்யங்கள் அவளிடம் அடங்கின
பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள் பரமாசார்யாள் ஞானி தெய்வ புருஷர் என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம் கொள்ளை அன்பும் பாசமும் பரிவும் மறு புறம்.
பாசத்தோடு அக்கறையும் இணைந்து அதட்டி உருட்டத் தயங்க மாட்டாள் பாட்டி அது ஒரு சிறப்புச் சலு
ஏண்டா ராமமூர்த்தி, பெரியவா இன்னிக்குச் சரியா பிட்சை பண்ணினாளோடா ஏன் தான் இந்த ஏகாதசி துவாதசி ப்ரதோஷம் சேர்ந்தாப் போல வரதோ சமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் பட்டினியா.
இப்படிக் காய்ஞ்சா அந்த உடம்பு என்னத்துக்கடா ஆகும்
மேலூர் மாமா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோளேன். நீங்க சொன்னாத்தான் பெரியவா கேட்பா இப்படிப் பாறை மாதிரி கபம் கட்டிண்டிருக்கே இருமக்கூட முடியாமல் தவிக்கிறாளே, வென்னீரில் ஸ்நானம் பண்ணச் சொல்லுங்களேன்.
ஏண்டா விச்வநாதா, பெரியவா கொஞ்ச நேரம் தூங்கட்டுமேடா.! எதற்கடா பேச்சுக் கொடுத்திண்டிருக்கேள்.
இல்லே பாட்டி பெரியவா பேசறா நாங்க கேட்டுண்டிருக்கோம்.
இப்படி எல்லோரிடமும் பேசுவதற்குத் தனி உரிமை பாட்டிக்கு..
ஏண்டாப்பா நைவேத்ய கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன் காலா காலத்திலே பூஜை செய்து பிட்சை பண்ணட்டுமே.
சவாரிக்காரர்களிடம் போவாள். நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள் நன்னா இருங்கோ இந்தாங்கோ கொஞ்சம் .பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது.
அதுதான் (டின் நிறைய பாட்டி நோக்கில்,கொஞ்சம்.
பெரியவா எப்ப கிளம்பறாளோ தயாரா இருக்கணும் வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ.
இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியில் படுத்துக்கறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா தீவட்டியை எடுத்துண்டு நாலு பக்கமும் சுத்திவரப் பாருங்கோ.
பாம்பு பல்லி இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு என்பாள்
புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு ஒரு அலாதித் தெம்பு.
அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி தான்படும் கவலையெல்லாம் மனம் விட்டுக்கொட்டுவாள் அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள்.
பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி சொல்லுவாள்.
நான் சொல்றதை நன்னாக் கேட்டுக்கோ ஒரு மானசிகக் காட்சியை விவரிக்கிறாள்.
பெரியவா அப்படியே தண்டத்தைத் தோளோடு அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா.
திடீர்னு சந்திரக் கலை தெரியறது கங்கை தெரியறாள் ஜடை தெரியறது பளபளன்னு நெத்தி சாந்தமாகச் சிரிச்ச முகம் அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாகக் கொண்டு வந்து தலைலே கொட்டறான்.
நான் கண்ணாலே பார்த்தேன் எல்லாரும் சொல்றா மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.
பழைய மானேஜர் விச்வநாத அய்யர் சொல்வார்
பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப் பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள் என்று.
நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என்கிட்ட சொல்லுங்கோ என்று பாட்டியைப் பணிவுடன் கேட்பார் மடத்து மானேஜர்.
மடத்துச் சிப்பந்திகள் அனைவரிடமும் பாட்டிக்குப் பிள்ளைப் பாசம் அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள்,பணத்தால்
ஆக முடியாதஸஊறுகாய் பட்சணம்என்று பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள்.
அந்தக் காலத்தில் இவைகள் விற்பனைக்கு வரவில்லை
எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா ஜாக்ரதையாக இருங்கோ என்று பரமாசார்யாளே தமக்குப் பணிவிடை செய்பவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே எச்சரிப்பார்களாம்.
பரமாசார்யாள் மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் இட்டிருந்தார்கள் அப்பொழுது எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி விட்டது காலமானாள் என்ற செய்தி வந்தது மகாஸ்வாமிகள் மூன்று நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்கள்.
எசையனூர்ப் பாட்டிக்கு இனி ஒரு போதும் இந்த மண்ணுலகில் வேலையில்லை ப்ரும்ம லோகத்திலும், மகாப்பெரியவாளையே ஸ்மரித்துக் கொண்டிருப்பாளோ.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #periyava mahaperiyava #🙏கோவில்
"பொண்டாட்டி குழந்தைகளோட தான் இருக்கேன் அவங்களைத் தெருவுல ஒரு மூலையில இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்க"
மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒரு நாள் பௌர்ணமி வந்தது.
சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும்.
ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..
ஆந்திராவில் சுற்று வட்டாரத்திலேயே மகாபெரியவா மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால் அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டுபெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார்.
ஆரம்பத்தில் மகா பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது யாரோ ஒரு சன்யாசிக்குத் தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல் தான் அவர் இருந்தார்.
ஆனால் நாளாக நாளாக எத்தனை எத்தனையோ ஜன்மாக்களில் செய்த பலனால் மகானைத் தொட்டுத் திருத்தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட
அவர் அதனால் பூரண பக்தியோடு வந்து மிகுந்த சிரத்தையோட பணி செய்தார்.
அப்படி வந்த சமயங்களில் எல்லாம் பக்தர்கள் பலரும் பரமாசார்யாளுக்கு பலப்பல காணிக்கைகளைத் தருவதைப் பார்த்தார். மகா பெரியவாளுக்கு தானும் ஏதாவது தரவேண்டும் என்ற ஆசை அவருக்குள் தோன்றி வேகமாக வளரத் தொடங்கியது.
மகா பெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்.
காவியேறிய துணியில் நிறைய புற்று மண்ணை மூட்டையாகக் கட்டி அதையும் மாங்குச்சியையும்
இவை இரண்டும் மகான் உபயோகிப்பவை ஒவ்வொரு முறையும் எடுத்துவருவார்.
ஆசார்யா முன் அதை சமர்ப்பித்துவிட்டு தன் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவார்.
பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் பழங்கள் பாதாம் முந்திரி பிஸ்தா போன்றவை விலை உயர்ந்த சால்வைகள் தங்க நாண்யங்கள் இத்யாதி இத்யாதியான பலப்பல கணிக்கைகளுக்கு இடையே நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையும் இருக்கும் .பக்தியோட அளித்த அதுவே மகாபெரியவாளுக்கு மகத்தான காணிக்கையாகத் தெரியும்.
ஆனால் நாவிதர் அதனை உணரவில்லை வழக்கம்போல் ஒரு பௌர்ணமியன்று வந்தவர் அன்று புற்றுமண் வைத்து தட்டில் விலை உயர்ந்த பழங்கள் தேங்காய், திராட்சை என பலப்பல காணிக்கைகளோடு கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்து எடுத்து வந்து சமர்ப்பித்தார்.
வழக்கம்போல்,மடத்து தொண்டர் ஒருவர் அந்த மூங்கில்தட்டை எடுத்துச் சென்று மகான் முன் சமர்ப்பித்தார் இருந்ததை இருந்தவாறே அறியும் மகானுக்கு அது யார் தந்தது என்று தெரியாதா என்ன இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இன்னிக்கு அந்த தெலுங்கர் வரலையோ என்று அறியாதவர் போல கேட்டார்.
அவர் தான் கொண்டு வந்து இதை சமர்ப்பித்தார் என்று தொண்டர்கள் சொல்ல கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த அந்த நாவிதரைப் பார்த்தார் மகான் உனக்கு ஏது இவ்வளவு பணம்.
தன்மேல் அவருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்டார்.
சாமி எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தர முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க
அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.
குடிசைன்ன அதுல நீ மட்டும்தான் இருந்தியோ மகானின் குரலில் கனிவு தெரிந்து.
இல்லீங்க,பொண்டாட்டி குழந்தைகளோடதான் இருக்கேன் அவங்களைத் தெருவுல ஒரு மூலையில இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்க.
அவர் சொல்லி முடிக்க அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு மகாபெரியவா மீது நாவிதர் வைத்திருந்த பரிபூரண பக்தி தெரியவந்தது.
அவரது திருப்பணிக்கு நிகராக தாங்கள் எதையுமே செய்ய முடியாது என்று புரிந்து கொண்ட அவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்தது.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு உடைமைகள் அத்தனையையும் தன் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக மகான் நடத்திய நாடகம் தான்.
தெலுங்கர் வரலையா என்று அவர் கேட்டது என்பதைப் புரிந்து கொண்ட எல்லோரும் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர என்று குரல் எழுப்பினார்கள்.
அடியார்க்கு வீடுபேறு தரவல்ல ஈசனின் அம்சமான மகாபெரியவா, தன்னிடம் பரிபூரண பக்தி கொண்டிருந்த அந்த நாவிதருக்கு நிரந்தரமானதொரு வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார்.
அது கடவுளின் குரலாகவே கேட்டது அந்த நாவிதருக்கு.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #periyava mahaperiyava #🙏கோவில்
https://youtube.com/shorts/33APPjSmM40?si=uCAMUCUUwDlrLZ3W #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம்
https://youtube.com/shorts/YXlVjxsbrS0?si=Guz_E1m50KmIBEum #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
https://youtube.com/shorts/uT7d4V-9n7I?si=ieJAAVUck6yrM9PB #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
https://youtube.com/shorts/zpu6BBGYWgE?si=F0V-gKeoP4VT5sd3 #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
https://youtube.com/shorts/ZDpBUssN9GQ?si=_gCzKexORdv2krjd #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்