*முயற்சி* உடையவரின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. புதைத்தாலும் மரமாக எழுந்து நிற்பார்கள்.
*விடாமுயற்சியைக்* கடலிடம் கற்றுக் கொள்ளவும், சுறுசுறுப்பை எறும்பிடம் கற்றுக் கொள்ளவும்._
*புன்னகையைப்* பூக்களிடம் கற்றுக்கொள்ளவும், சேமிப்பைத் தேனீக்களிடமும்
*பொறுமையை* பூமியிடமும்,
கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்ளவும்
*துணிச்சலுடன்* எப்போது செயல்பட முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையின் பாதி கஷ்டங்களைத் தாண்டி விட்டோம் என்று அர்த்தம்
*படைத்தவனுக்கு* எல்லாம் தெரியும் என்று நீ நினைத்து விடாதே. நீ செய்யும் செயலில் தான் துணையிருப்பாரே தவிர, நீ எதுவும் செய்யாமல் இருந்தால் துணை இருக்க மாட்டார்
*முயற்சி செய்* உறுதுணையாய் நிற்பார். ஆகையால் முயற்சி செய்யுங்கள்
*வெற்றி நிச்சயம்*
#சிந்தனைக்கு #தெரிந்து கொள்வோம் #முயற்சி #முயற்சி
*இந்தியாவுக்கு ஜாக்பாட்*
அந்தமான் கடலுக்கு அடியில் இந்தியாவுக்கு கிடைத்த ஜாக்பாட்.
இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.
#தெரிந்து கொள்வோம்
*இன்று கனமழைக்கு வாய்ப்பு*
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு.
- சென்னை வானிலை ஆய்வு மையம்
#தெரிந்து கொள்வோம் #மழை முன் எச்சரிக்கை #மழை முன் எச்சரிக்கை
தெளிந்த நீரோடை...
*சிலரை* புரிஞ்சிக்க முடியாது
*சிலரை* புரிஞ்சிக்க கூடாது
*சிலரை* கண்டுக்க கூடாது
*சிலரை* கண்டுக்காம விடகூடாது
*சிலர்கிட்ட* உரிமை எடுத்துக்கக்கூடாது
*சிலர்கிட்ட* உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது
இதுல தெளிவிருந்தா,
வாழ்வே தெளிந்த நீரோடை...
#தெரிந்து கொள்வோம்
*வரலாற்றில் இன்று*
27 செப்டம்பர் 2025
1624 : பார்படோஸை சூறாவளித் தாக்கியதால் 27 பிரிட்டிஷ் கப்பல்கள் மூழ்கியதில் 3,000 பேர் உயிரிழந்தனர்.
1791 : யூதர்களுக்கு முழுமையான குடியுரிமை வழங்குவதற்கு பிரான்ஸின் நாடாளுமன்றம் வாக்களித்தது.
1825 : இங்கிலாந்தில் 43 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகம் செல்லும் நீராவி என்ஜின் மூலம் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
1854 : ஆர்க்டிக் என்ற நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 322 பேர் இறந்தனர்.
1922 : முதலாம் கான்ஸ்டன்டைன் கிரேக்க மன்னர் பதவியிலிருந்து முடி துறந்தார்.
அவரது மூத்த மகன் இரண்டாம் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.
1937 : கடைசி பாலினீஸ் இனப் புலி கொல்லப்பட்டது.
1938 : யூத வழக்கறிஞர்கள் ஜெர்மனியில் பயிற்சி செய்ய தடை விதிக்கப்பட்டன.
குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது .
1940 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1947 : தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்டது.
1949 : சேன் லியோன் சாங் சீனாவின் கொடியை
வடிவமைத்தார்.
1956 : திருவாங்கூர்- கொச்சி மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி பிரிக்கப்பட்டு தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய ம.பொ.சி. கைது செய்யப்பட்டார்.
1958 : ஜப்பானின் டோக்கியோ அருகே வீசிய கடும் புயலால் 600 பேர் உயிரிழந்தனர்.
1962 : ஏமன் அரபு குடியரசு அமைக்கப்பட்டது.
1975 : பீகார், தன்பாத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தால் 372 தொழிலாளர்கள் பலியானார்கள்.
1975 : ஸ்பெயினில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போராளிக் குழுவை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டனர். உலகெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1977 : ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மலேசியாவின் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 79 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.
1987 : கொலம்பியாவில் இடம்பெற்ற மழை வெள்ளத்தால் 680 பேர் உயிரிழந்தனர்.
1989 : இந்தியா பிரித்வி எனும் ஏவுகணையை ஏவியது.
1993 : அப்காசியா தலைநகரம் சுகுமியில் ஜார்ஜியப் பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
2001 : சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2008 : சீன விண்வெளி வீரர் சாய் சிகாங்க் விண்வெளியில் நடந்த முதலாவது சீனர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
2013 : மும்பையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர் உயிரிழந்தனர்.
2014 : சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு
செப்டம்பர் 27
உலக சுற்றுலா தினம்
(World Tourism Day)
உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ஆம் நாளில் 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
#தெரிந்து கொள்வோம்
சி. பா. ஆதித்தனார்
( 27 செப்டம்பர் 1905 - 24 மே 1981)
தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர்.
அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார்.
தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.
எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
#தெரிந்து கொள்வோம்
செப்டம்பர் 27, 2014
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா உடனடியாக கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
#தெரிந்து கொள்வோம் #அரசியல்
Promotions, Emotions மட்டும்தான்"*
“ரொட்டி, பால் மீது ஜிஎஸ்டி இருப்பதை உணர இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருப்பதைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இவர்கள், வெறும் Promotions மற்றும் Emotions மூலம் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள்”
- அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் #அரசியல் #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
நாமக்கல்லில் விஜய் வருகைக்காக அம்மாவுடன் காத்திருக்கும் சுட்டீஸ் #அரசியல் #விஜய்