||श्री:||ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
அடியேனின் மனமே ! எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் உன்னால் எண்ணிப் பார்ப்பதற்கும் அரியவன் என்ற நிலையில் இருப்பவனேயாயினும்,
அவனுடைய இத்தகைய பெருமிதச் செயல்களை எண்ணிக்கொண்டிருக்காமல், அவனுடைய எளிமையை எண்ணிப் பார்த்தவாறு நீ ஒருநிலைப்பட்டு அவனிடம் பேசுவாயாக ! அந்த எம்பெருமான் திருமாலைப் பற்றி ஒருமுறை எண்ணிப் பார்க்கினும் அவன் நெஞ்சை விட்டு அகலாமல் நிலைத்திருப்பான்.
அத்தகைய எம்பெருமானை உணர்வுடன் நெஞ்சம் நினைக்காமல் வாளா இருப்பது என்பது எதற்காகவோ !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏