இளையரசன்
ShareChat
click to see wallet page
@kongundr
kongundr
இளையரசன்
@kongundr
நாளை நமதே
ஒரு ஆண் வருமானம் இல்லாமல் (பணம் இல்லாமல்) இருப்பதற்காக எந்தப் பெண்ணும் அவனை விட்டு பிரிந்து செல்வதில்லை... #பெண்கள்_விலகிச்_செல்வது_எப்போது? தொடர்ச்சியாக மதிக்கப்படாதபோது... அவர்களின் உணர்வுகள் நிராகரிக்கப்பட்டு, அவர்களின் குரல் அலட்சியப்படுத்தப்படும்போது... முயற்சிகள் மறைந்து, அதற்குப் பதிலாக சாக்குப்போக்குகள் முன்வைக்கப்படும்போது... அவர்கள் குறைத்து மதிப்பிடப்படும்போது. அவர்கள் செய்யும் அனைத்தும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும்போது,கடமை என நினைக்கப்படும்போது... அவர்களிடம் விசுவாசம் எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்களுக்குக் காட்ட வேண்டிய பாராட்டு என்பது விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறும்போது.... அவர்கள் அதிகம் கொடுக்கத் தொடங்கி, பதில் ஈடாக மிகக் குறைவாகப் பெறும்போது... அன்பு மறுக்கப்படும்போது... அன்பும் பாசமும் அலட்சியமாக மாறும்போது... சொல்லும் வார்த்தைகளும் செய்யும் செயல்களும் ஒத்துப்போகாதபோது... பாதுகாப்பாக உணர வேண்டிய ஒரு உறவில், தனிமையை உணரத் தொடங்கும்போது... ஒரு ஆண் முன்னேறத் துடிக்கும்போதும், போராடும்போதும், வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போதும் ஒரு பெண் அவனுக்குப் பக்கபலமாக நிற்பாள்... ஆனால், தான் அலட்சியப்படுத்தப்படும் இடத்திலோ, மதிக்கப்படாத இடத்திலோ அல்லது தான் சிறுமையாகத் தோன்றும் இடத்திலோ அவள் இருக்கமாட்டாள்... இது ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல. அவள் உன்னுடன் இருந்தபோது நீ அவளை எப்படி உணரவைத்தாய் என்பதைப் பற்றியது மட்டுமே... ✍️ #💑கணவன் மனைவி காதல்💞 #💑கணவன் - மனைவி #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
💑கணவன் மனைவி காதல்💞 - ShareChat
லவ் பண்ணுவது எப்பிடி? காதலிப்பது என்பது ஒரு கலை. அது ஒருவரை ஈர்ப்பது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் மதிப்பளித்து அழகான ஒரு பிணைப்பை உருவாக்குவதுமாகும். நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால், அவர்களை எப்படிக் கவரலாம் மற்றும் ஒரு உறவைத் தொடங்கலாம் என்பதற்கான சில எளிய வழிமுறைகள் இங்கே: 1.❤️உங்களை முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள்: யாரையாவது நேசிக்கும் முன், நீங்கள் உங்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். * சுய வளர்ச்சி: உங்கள் தோற்றம், உடை மற்றும் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். * தன்னம்பிக்கை: உங்களைப் பற்றி நீங்கள் பெருமையாக உணர்ந்தால் மட்டுமே, மற்றவர்கள் உங்களை விரும்புவார்கள். 2.❤️நட்புடன் தொடங்குங்கள் : நேரடியாக காதலைச் சொல்வதை விட, ஒரு நல்ல நண்பராகப் பழகுவது உறவை வலுவாக்கும். * அடிக்கடி பேசுங்கள்: சாதாரண விஷயங்களைப் பற்றிப் பேசி பழகத் தொடங்குங்கள். * கவனித்துக் கேளுங்கள்: அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 3.❤️சின்னச் சின்ன விஷயங்களில் அக்கறை : காதல் என்பது பெரிய விஷயங்களில் மட்டுமல்ல, சிறிய அசைவுகளிலும் இருக்கிறது. * நேரம் ஒதுக்குங்கள்: அவர்கள் உதவி கேட்கும் முன்பே, நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருங்கள். * பாராட்டுங்கள்: அவர்களின் திறமை அல்லது அழகைப் உண்மையாகப் பாராட்டுங்கள். பொய் புகழ்ச்சியைத் தவிர்க்கவும். 4.❤️மரியாதையுடன் பழகுங்கள் எந்தவொரு காதலிலும் மரியாதை (Respect) மிக முக்கியம். * அவர்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். * அவர்கள் "இல்லை" என்று சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். 5.❤️உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் சரியான நேரம் வரும்போது, உங்கள் காதலை மென்மையாகத் தெரிவியுங்கள். * அதிக அழுத்தம் கொடுக்காமல், "எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, உன்கூட இருக்கப்ப சந்தோஷமா உணர்றேன்" என்பது போல ஆரம்பிக்கலாம். * அவர்களின் பதிலுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்கள் உங்களைக் காதலிக்கவில்லை என்றாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். > முக்கிய குறிப்பு: காதல் என்பது ஒருவரை அடக்குமுறை செய்வது அல்லது கட்டாயப்படுத்துவது அல்ல. இருவருக்கும் சமமான விருப்பமும் சந்தோஷமும் இருந்தால் மட்டுமே அது உண்மையான காதல். #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #💑கணவன் - மனைவி #💑கணவன் மனைவி காதல்💞
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - விவாகரத்துபெற்ற பெண்ணை பெரும்பாலானஆண்திருமணம் செய்யவிரும்பமாட்டான் ஆனால் கள்ளகாதல் என்று வரும்போது மூன்று குழந்தைகளுக்குத்தாயானவள்கூட அவனுக்கு ஒரு கதாநாயகியைப் போலவே தெரிகிறாள் ( ( விவாகரத்துபெற்ற பெண்ணை பெரும்பாலானஆண்திருமணம் செய்யவிரும்பமாட்டான் ஆனால் கள்ளகாதல் என்று வரும்போது மூன்று குழந்தைகளுக்குத்தாயானவள்கூட அவனுக்கு ஒரு கதாநாயகியைப் போலவே தெரிகிறாள் ( ( - ShareChat
பெண்களின் இடுப்புப் பகுதி உடல் அமைப்பை புரிந்துகொள்வோம் 🔴🟢🔴 பெண்களின் இடுப்புப் பகுதி (Pelvis) உடல் அமைப்பு பற்றி பேசலாம். இந்தப் படம், அந்தப் பகுதியில் உள்ள முக்கிய உறுப்புகளை தெளிவாக காட்டுகிறது. நம் உடலை நாமே புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட படங்கள் கற்றுக்கொள்ள உதவும் சிறந்த கருவிகள். இந்தப் படத்தில் நீங்கள் காண்பது: கருப்பை (Uterus): கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்கின்ற பேரிக்காய் வடிவ உறுப்பாகும். மூத்திரப்பை (Bladder): சிறுநீரை சேமித்து வைக்கும் உறுப்பு. மூத்திரக் குழாய் (Urethra): மூத்திரப்பையிலிருந்து சிறுநீர் வெளியே செல்லும் குழாய். யோனி (Vagina): கருப்பையிலிருந்து உடலின் வெளியே செல்லும் தசை நிறைந்த பாதை. மலக்குடல் (Rectum): பெரிய குடலின் கடைசி பகுதி. மலம் வெளியேறும் துவாரம் (Anus): மலத்தை வெளியேற்றும் இடம். சேக்ரம் & காக்ஸிக்ஸ் (Sacrum & Coccyx): முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ள எலும்புகள். இந்த உறுப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வது, கர்ப்ப ஆரோக்கியம், சிறுநீர்ப்பை செயல்பாடு, குடல் ஆரோக்கியம் மற்றும் மொத்த உடல் நலத்திற்கு மிகவும் அவசியம். இது உங்களுக்கு ஏன் முக்கியம்? ஆரோக்கிய அறிவு: உங்கள் உடல் அமைப்பை தெரிந்துகொண்டால், நோய்கள், சிகிச்சைகள் மற்றும் முன்னெச்சரிக்கை முறைகளை எளிதாக புரிந்துகொள்ள முடியும். தன்னம்பிக்கை: உங்கள் உடலைப் பற்றி தெரிந்திருந்தால், மருத்துவருடன் நம்பிக்கையுடன் பேச முடியும். தடை மனப்பான்மை உடைப்பு: பெண்களின் உடல் ஆரோக்கியம் பற்றி திறந்தவெளியில் பேசுவது இயல்பான விஷயமாக மாற உதவும். #💑கணவன் - மனைவி #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💑கணவன் - மனைவி - கருப்பை சிறுநீர்ப்பை சிறுநீர்க்குழாய் சிறுநீர்ப்பை OLIL எலும்பு மலக்குடல் త్ క్డీ மலவாய் கருப்பை சிறுநீர்ப்பை சிறுநீர்க்குழாய் சிறுநீர்ப்பை OLIL எலும்பு மலக்குடல் త్ క్డీ மலவாய் - ShareChat
ஒரு பெண்ணின் இடை தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால்.. நீ பிரசவ அறையில் இருந்து பார்... ஒரு பெண்ணின் மார்பு தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால்... அவள் குழந்தை பெற்று அவள் மார்பில் பால் கட்டி இருக்கும் போது அவள் படும் வேதனை பார்.. ஒரு பெண்ணின் வயிறு தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால் அவள் மாதத்தில் மூன்று நாள் வயிற்று வலியால் துடித்துக்கும் போது பார்.. அவள் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த தையலை பார்.. ஒரு பெண்ணின் இடுப்பை பார்த்து நீ ரசிக்கிறாய் உன் தாய் உன்னை இடுப்பில் தூக்கி சுமந்ததை நினைத்து பார்.. ஒரு பெண்ணின் பின்புறத்தை பார்த்து நீ ரசிக்கிறாய்.... உனக்கு ஒரு முள்ளு குத்தினாலே அய்யோ அம்மா என்று கத்துகிறாய் அவள் முதுகுத்தண்டில் ஊசி குத்தின பிறகுதான். அவளுக்கு பின்புறத்தில் சதை வளர்கிறது.. உனக்கு #ஆண் என்ற அங்கீகாரத்தை கொடுப்பதே ஒரு பெண்தான்.. பெண்களைப் பெண்களாக பார்க்க வேண்டாம் ஆனால் காமத்தை தரும் போதையாக பொருளாக பெண்களை பார்க்காதீர்கள்.... #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #💑கணவன் - மனைவி
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
ஒரு #பெண் இரவு நேரத்தில் #முகநூலில் ஆன்லைன் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யாருடனும் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. இப்போது எல்லா பெண்களுமே வேலைக்கு போகிறார்கள் வேலைக்கு போன இடத்தில் போனை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் வேலைக்கு போயிட்டு வந்து வீட்டில் வேலையெல்லாம் முடிந்த பிறகு அவர்கள் தூங்கும் நேரம் இரவு 11 மணி இல்லையென்றால் 12 மணி ஆகும் அந்த நேரத்தில் இன்றைய பதிவுகளையும் நிகழ்வுகளையும்படித்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இரவில் மட்டும் தான் வேலையில்லாமல் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் மொபைலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் அப்போது ஆன்லைனில் காண்பிக்கும் அதற்காக நீங்கள் யாரும் தவறாக எண்ணி விடாதீர்கள்... #💑கணவன் - மனைவி #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💑கணவன் - மனைவி - பெண் அன்றுதந்தைக்கு இளவரசி இன்றுகணவருக்கு இல்லத்தரசி ( என்றும் பூமிக்கு அரசி!! பெண் அன்றுதந்தைக்கு இளவரசி இன்றுகணவருக்கு இல்லத்தரசி ( என்றும் பூமிக்கு அரசி!! - ShareChat
#மாறிப்போன_உறவுகள்: முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனால்... "தம்பி.. வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?" "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் நல்லாருக்கிங்களா..?" "எல்லா நல்லா இருக்கோம் சாமீ... கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.. பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா". "அத்தை..! நா வரும்போதுதான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்.." "இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..? பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். " (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல). அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க. அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது... "ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமனை நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்.." "இல்ல அத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்.." "எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ. அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்... (போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...) நேத்து சந்தைக்குப் போனேனா... அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு. பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.." இப்பெல்லாம் ஒரு சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா... "ஹாய்... வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..???? (கேட்டுட்டு உடனே) எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.." (இதுக்கும் மேல, 'இல்லைங்க.. நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால்தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?) "ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க.." "அப்புறம்... என்ன விஷயம்..? (வந்த விஷயத்த சொன்னதும்) இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே..." "இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு... அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." "அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், FVல... போட்டோ அப்டேட் பண்றனே..." (கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். ) இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க... ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...) "ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?" (அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு..சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...) "நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும்... உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு... "அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல). "சரிங்க.. டைமாச்சு, நா கிளம்பறேன்.." "ஆமா.... வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும்.." "இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டுதான் வருவாங்க... இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் (😳) உள்ள வந்துடும்.." #மாறிய_உலகம்.. #மாறிப்போன_உறவுகள்..! #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #💑கணவன் - மனைவி #💪Motivational Quotes
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ShareChat
ஒரு எழை குடும்பத்து பையன் பல வருடங்களாக ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண்ணிற்கும் இவனை நன்றாக தெரியும். கல்லூரி பருவ நட்பு... ஒரு நாள் தன் காதலையும் அப்பெண்ணிடம் சொல்கிறான். காதல் ப்ரபோஸ்ஸை கேட்டுவிட்டு அந்த பணக்கார பெண் சொன்னால்: உன்னோட ஒரு மாச சம்பளம் நான் ஒரு நாள் செலவு செய்யுற பணம். என்ன காதலிக்கிறேன்னு சொல்றியே, உன்னோட தகுதி என்னன்னு உனக்கு முதல்ல தெரியுமா? உன்ன மாதிரியே எவளாவது ஏழை பொண்ணு கிடைப்பா அவளை போய் கல்யாணம் பண்ணி வாழ்ற வழியை பாரு. "வந்துட்டான் காதல் பிரபோஸ் பண்ண" என்று கத்தினாள். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் இவனை பார்க்க, அவமானத்தில் தலை குனிந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு சென்றான். காலங்கள் ஓடின..... 10 வருடங்கள் கழித்து இருவரும் ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்து கொண்டனர். இவள் தாமாக முன்வந்து அவனிடம் பேசினால்: ஹேய், எப்படி இருக்க? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா? என் கணவர் மாசம் 2 லட்சம் சம்பளம் வாங்கராரு. உன்னால நினச்சுகூட பார்க்க முடியலைல. அவர் செம டேலன்ட் ஆனா ஆளு தெரியுமா? என்றாள்!!! இதை கேட்ட இவன் கண்கள் கண்ணீரால் குளமாகின... ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் கணவர் அங்கு வந்து சேர்ந்தார். சார்!! நீங்களா? மீட் மை ஒய்ஃப்... என்று சொல்லிவிட்டு தன் மனைவியிடம் சொன்னார்: சாரோட ப்ராஜெக்ட்ல தான் நெக்ஸ்ட் வீக் அவருக்கு அசிஸ்டென்டா ஜாயின் பண்ண போறேன். 200 கோடி ரூபா ப்ராஜெக்ட். சார் ரொம்ப நல்ல மனுஷன். அவரு உயிருக்கு உயிரா உண்மையா காதலிச்ச ஒரு பொண்ணு அவர விட்டுட்டு போயிட்டா. அதனால இப்ப வரைக்கும் சார் கல்யாணம் பண்ணிக்கவே இல்ல. எவ்வளவு துரதிஷ்டமான பொண்ணு அவ... என்று தன் மனைவியிடம் சொன்னார். இதை கேட்டு உறைந்து போய் நின்றால் அந்த பணக்கார பெண்... நீதி: நம்மள ஒரு பொண்ணு வேண்டாம் புடிக்கலைன்னு உதறி தள்ளிட்டு போயிட்டா.... அவ மூஞ்சில ஆசிட் அடிக்கிறது.... சமூக வலைத்தளத்தில் அவளை பத்தி கேவலமா பதிவு போடறது... வாட்ஸ்அப்ல காதல் பிரிவு ஸ்டேட்டஸ் வைக்கிறது... இன்னும் ஒருபடி மேலே போய் உயிரை மாய்த்துக் கொள்வது... உண்மையான வீரமான ஆண் மகனுக்கு அழகில்லை. வேண்டாம் என்று சொன்ன அந்த பொண்ணு முன்னாடியே நல்லா வாழ்ந்து வாழ்க்கையில முன்னேறி காற்றவன்தான் உண்மையான ஆண்மகன். #💑கணவன் மனைவி காதல்💞 #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
💑கணவன் மனைவி காதல்💞 - 99 44 99 44 - ShareChat
#😊எனது முதல் பதிவு🤙🏼 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏மாத சிவராத்திரி🪔 #✨பிரதோஷம்🕉️
😊எனது முதல் பதிவு🤙🏼 - ShareChat