வரலாற்றில் இன்று கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் #ஜனவரி_22, 1999. ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் தொண்டுகள் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கதற கதற உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. #life #lifes
#லெனின்
#ஜனவரி_21
#நினைவு_தினம்
விளாதிமிர் இலீச் லெனின்
(Vladimir Ilyich Lenin, ஏப்ரல் 22 1870 – ஜனவரி 21, 1924), ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, உள் நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது ஏதேனுமொன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் #life #lifes
#ஆந்த்ரே_மரி_ஆம்பியர்
#பிறந்த_தினம்
#ஐனவரி_20
இயற்பியலாளரும், மின்காந்தவியல் பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் பிறந்த தினம் - சனவரி 20:
ஈஃபில் கோபுரத்தில் பொறிக்கப்பட்டுள்ள 72 பெயர்களில் ஒருவரான இவர் பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது.
ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது. பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார்.
அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார். சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் தந்தை.
கணித நூல்களைத் தவிர இயற்பியல் தொடர்பான நூல்களையும் ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினார். இவற்றைத் தவிர வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்
தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் முறைசாராக் கல்வி கற்றுவந்த இவர், தந்தையின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஓராண்டு காலம் படிப்பை நிறுத்திவிட்டார். 22-வது வயதில் தனிப்பட்ட முறை யில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்
கணிதம் தவிர வேதியியல், மொழிகள், தத்துவம், வானியல் மற்றும் இயற்பியலும் கற்றுத் தந்தார். 1804-ல் பாரீஸ் சென்ற இவர், அங்கு பல்கலைக்கழகத்துக்கு இணையான கணிதப் பாடங்களை எகோலே பாலிடெக்னிக் நிறுவனத்தில் கற்றுத் தந்தார். 1809-ல் அங்கு பேராசிரியர் பதவி கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் மின்சார பாட்டரி தயாரிக்கப்பட்டது. காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என்பதும் கண்டறியப்பட்டது.
மின்சாரம் ஏன் காந்த விளைவை உண்டாக்குகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, அதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒரே மாதிரியான மின்மங்கள் (electric charge) ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்மங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.
மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டினார். இவை இரண்டும் இணைக்கப்பட்டு, மின்காந்தவியல் அல்லது மின்னியக்கவியல் (electrodynamics) என்ற புதிய துறை பிறந்தது. இவர் கண்டறிந்த மின்னோட்டத்த #life #lifes
1982 ஆம் ஆண்டு #ஜனவரி_19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் , ராஜஸ்தான், மத்தியப்
பிரதேசம், ஹரியானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களிலும் காவல் துரையின் அடக்குமுறை தடியடி நடவடிக்கைகள் நடைபெற்றன
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் பொதுப்பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் தொழிலாளிவர்க்கத்தின் வலிமையை எதிரி வர்க்கத்திற்கு எடுத்து காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லையற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவி செய்தது.
இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம். #lifes #life
#ஜீவானந்தம்
#நினைவு_நாள்
#ஜனவரி_18
ஜீவா என்கிற தோழர் ப. ஜீவானந்தம் நினைவு நாள் - ஜனவரி 18, 1963. பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க பற்றாளராக, பொதுவுடமை இயக்க தலைவராக செயலாற்றியவர். பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.
எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.
இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி' நாளிதழையும் தொடங்கினார்.
ஜீவா கலாச்சார அரசியலை பரவலாகப் பிரச்சாரம் செய்தார். தமிழிலக்கியத்தின் அறிஞராக இருந்தார். நல்ல சொற்பொழிவாளராக இருந்தார். அவர் பொதுமக்களுக்காக கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பெரிய எண்ணிக்கையில் எழுதி இருக்கிறார். ஜீவா கலை இலக்கியப் பெருமன்றத்தினைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பை முற்போக்கு இலக்கியவாதிகளின் மேடை ஆக்கினார்.
ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி காமராஜர் உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார். மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. #life #lifes
ரோகித்து சக்கரவர்த்தி வேமுலா (Rohith Chakravarti Vemula, ஐனவரி 30, 1989 – #ஜனவரி_17 , 2016) ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்த மாணவர் ஆவார். சனவரி 17, 2016 அன்று அவர் மேற்கொண்ட தற்கொலை நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது; மீயுயர் கல்வி நிறுவனங்களில் தலித்களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக்கொணருமாறு ஊடகங்களில் பரவலாக பதியப்படுகின்றது. அவரது தற்கொலைக் கடிதத்தின்படி, கல்லூரி தங்குவிடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் தங்கியிருந்த உம்மா அண்ணா என்பவரின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #life #lifes
#ஜனவரி_16, 1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 இரண்டு விண்கலன்களும் விண்வெளியில் ஒன்றோடு ஒன்று இணைந்தன.. இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இதுவே முதல்தடவை. இந்த இணைப்பு நான்கு மணி முப்பது நிமிடங்கள் நேரம் நீடித்தது. அதன் பின்னர் இரு விண்கலங்களை வெற்றிகரமாக பிரிந்து தத்தமது பாதையில் சென்றன. #life #lifes
#மார்ட்டின்_லூதர்_கிங்
#பிறந்த_நாள்
#ஜனவரி_15
இன்று மார்ட்டின் லூதர் கிங் (Jr) பிறந்த நாள் - ஜனவரி 15, 1929). மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க நாட்டில் இனப்பாகுபாடுகளை எதிர்த்து வெற்றிகரமாக போராடியவர் . ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் காந்தியவழியில் வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் பிறந்த தினம் அமெரிக்காவில் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. #life #lifes
#ஜனவரி_14, வரலாற்றில் இன்று.
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் இன்று.
தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள், தி.மு.க நிறுவனர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரின் உயர்ந்த நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31ல் உயிர்நீத்தார்.
1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் எனக் காரணம் தெரிவித்த,அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை. 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகுதான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரத்துச் சொல்லும் வகையில்தான் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயரைக் காப்பாற்றியதுபோலவே மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழகம் என சுருக்கமாகக் குறிப்பிடுவதை இயன்றவரையில் தவிர்த்து, தமிழ்நாடு எனப் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
தோழர் jp jayaraman பதிவு #lifes #life
இன்று - கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் மறைந்த அச்சுத மேனன் பிறந்த நாள் #ஜனவரி_13, 1913 அச்சுத மேனன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகஸ்ட் 1970 வரை முதல்தடவையாகவும் 4--10--1970 to 25--03--1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இந்தியாவில் முதன் முதலில் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பிற முற்போக்கு ஜனநாயகக் கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்தது கேரளாவில்தான்! அந்த ஆட்சி எனும் கப்பலை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனைகளைக் குவித்த காப்டன், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் முதல்வருமான தோழர் சி.அச்சுத மேனன். தூய, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகம்; மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்த அமலாக்கம்; ஏழை எளியோருக்கான பெரும் சீர்திருத்தத் திட்டங்களை நிறைவேற்றுதல்; அடிப்படையான ஆய்வு நிலையங்களை நிறுவுதல் போன்ற இன்னபிற நடவடிக்கைகளிலிருந்து பிரிக்கவொண்ணா வகையில் இரண்டறக் கலந்தது அவரது பெயர். நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இலக்கணமாகத் திகழ்ந்த அவர், அரசியலில் புதிய, உயர்ந்த நெறிகளை வகுத்தளித்தார். அவர் தலைமையில் இயங்கிய அரசு. இதன் விளைவாக, எவரும் சாதிக்காத வகையில், கேரளாவில் விவசாயத் தொழிலாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போயிற்று. ஏறத்தாழ 25 லட்சம் உழவர்கள், நிலத்தின்மீதான உரிமைகளைப் பெற்றனர்; லட்சக்கணக்கான ஏக்கர் வன நிலங்களையும், பிர்லா வசமிருந்த 30,000 ஏக்கர் நிலம் உட்பட மற்றபிற நிலங்களையும் மறுவிநியோகத்துக்காக அரசு எடுத்துக் கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்பு மனையும் அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட்டது.
கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் மட்டுமின்றி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆச்சார்ய நரேந்திர தேவ், ஸ்ரீ நாராயண குரு, அரவிந்த கோஷ், இன்ன பிறரின் சிந்தனைகளைக் கம்யூனிஸ்டுகள் கற்றறிய வேண்டும் எனவும், காந்திஜியின் அகிம்சைப் பாதையை நாம் தீவிரமாகப் பரிசீலித்தல் அவசியமெனவும் அவர் கருதினார்.கேரள சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது உள்ளிட்ட விருதுகள் அவரைத் தேடி வந்தன.
1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் நாள் திருவனந்தபுரத்தில் அவர் மரணமுற்றார் #life #lifes










![life - $024&5 00[{84[[]5 $024&5 00[{84[[]5 - ShareChat life - $024&5 00[{84[[]5 $024&5 00[{84[[]5 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_675434_1c33f8b0_1768583672964_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=964_sc.jpg)


