
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🌺 இனிய சிவபெருமான் அருள்மலர் 🌺
🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
🌹மழைத்துளி விழும் நேரம்,
மயக்கமாய் நின்ற சிவலிங்கம்,
மல்லிகை செம்பருத்தி மலரொளி,
மனங்களைத் தூய்மையாக்கும் சுபஒளி.
🙏தீப ஒளி திருவுருவம் சூழ,
திரிபுண்டரம் திகழும் மேனி,
சந்திரன் சூடிய சடைமுடி போல,
சகலமும் சூழ்ந்த சத்திய வடிவம்.
🌺பக்தி மலர் விழியென வீழ,
பரமன் அருள் நெஞ்சில் தேய,
அந்தமில்லா ஆனந்த கீதம்,
அருள்சிவமே எனக்குள் வாழ்க.
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #ஓம் நமசிவாய #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 🦜
🌹🙏ஓம் நமசிவாய...🙏🌹
🌹திருஅங்கமாலை.🌹
**************************
உடல் உறுப்புகளை எவ்வாறு நல்வழிப்படுத்தி இறை பணியில் ஈடுபடுத்துவது என்பதை கூறும் திரு அங்கமாலை என்ற பெயர் வந்தது.
🌷தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலிவிஜய
கைவனை தலையே நீ வணங்காய்.
◆விளக்கம்: தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் பிச்சை க்கு உலாவும், தலைவனைத் தலையே நீ வணங்குவாயாக.
🌷கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ.
◆விளக்கம்: கண்களே பாற்கடலில் எழுந்த நஞ்சி னை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.
🌷செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள
எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ.
◆விளக்கம்: செவிகளே, எமது தலைவனாகிய சிவபெருமான், செம்பவளம் போன்றும் தீயினை போன்றும் சிவந்த நிறம் கொண்டவர் பெருமைக்குரிய அவரது பண்புகளையும், செ யல்களையும் எப்போதும் நீங்கள் கேளுங்கள்.
🌷மூக்கே நீ முரலாய் - முதுகாடு உறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.
◆விளக்கம்: மூக்கே சுடுகாட்டில் உறைபவனும், வேதங்களின் பொருளை மிகவும் கவனமாக கேட்டு உணர்ந்த பார்வதி தேவியின் மணாள னும், ஆகிய முக்கண்ணனின் பெருமைகளை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.
🌷வாயே வாழ்த்துக் கண்டாய் - மதயானை உரி போர்த்து
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.
◆விளக்கம்: வாயே மதயானையின்தோலினை உரித்து அதன் பசுமையான தோலினை தனது உடலில் போர்த்துக் கொண்டவரும், பேய்கள் வாழும் காட்டில் விருப்பமுடன் நடமாடுபவரும் ஆனபெருமானை எப்போதும்வாழ்த்துவாயாக.
🌷நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.
◆விளக்கம்: நெஞ்சமே, மேல் நோக்கிய செஞ்சடை உடைய நின்மலனை, மேகங்கள் தவழும் இமயமலையின் மகளாகிய பார்வதி தேவியின் கணவனை, நீ எப்பொழுதும் நினைப்பாயாக.
🌷கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
◆விளக்கம்: கைகளே படமெடுக்கும்பாம்பினை தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்க ளை தூவி, கைகளை கூப்பி தொழுவீர்களாக.
🌷ஆக்கையால் பயன் என் - அரன் கோயில் வலம் வந்து.
பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என்.
◆விளக்கம்: சிவபெருமான் உறையும் கோயிலை வலம் வந்து, பூக்களைக் கையால் இறைவனின் திருமேனி மேல் தூவி அவனை வணங்காத உடம்பினால் நமக்கு பயன் ஏதும் இல்லை.
🌷கால்களால் பயன் என் - கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்.
◆விளக்கம்: அழகான கோபுரத்தை உடைய, நீல கண்டனாகிய எம்பெருமான் உறையும், கோக ர்ணம் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ள திருக்கோயிலை வலம் வராத கால்களா ல் என்ன பயன்.
🌷உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ.
◆விளக்கம்: நாம் இறக்கும் தருவாயில், நம்மை ச்சுற்றியுள்ள உறவினர்கள் எவரும் உதவ முடி யாத நிலையில் இருப்பதால், அவர்கள் எவரை யும் உற்றார்களாக கருதமுடியாது. அந்த சமய த்தில், குற்றாலத்தில் உறையும் கூத்தன் தவிர, வேறு எவரும் நமக்கு உதவி செய்யக் கூடிய உற்றார் இல்லை.
🌷இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ.
◆விளக்கம்: தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோப த்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திரு வடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவ ராக கருதப்படும் நிலையினை அடைந்து இறு மாப்புடன் இருப்பேன்.
🌷தேடிக்கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.
◆விளக்கம்: திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
🙏🙏ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்.🙏🙏.. #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ
🌹 ஓம் சரவண பவ🌹
🌲மூவிரு முகங்கள் போற்றி
🌲முகம் பொழி கருணை போற்றி
🌲ஏவரும் துதிக்க நின்றஈராறு தோள் போற்றி
🌲காஞ்சி மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி
🌲அன்னான் சேவலும் மயிலும் போற்றி
🌲திருக்கைவேல் போற்றி போற்றி..
கந்தபுராணத்தில் வரும் இந்த சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
🌹கந்தா சரணம்... ஷண்முகா சரணம்...
🌹 #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug
an #முருகன் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉️ஓம் முருகா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *14.11.2025* 🌹
☀️ *எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை* ☀️
☀️ *சிலருக்கு படகாகவும் சிலருக்கு ஏணியாகவும் சிலருக்கு வீடாகவும் மாறுகின்றன* ☀️
☀️ *அது போலத்தான் வாழ்க்கையும்* ☀️
☀️ *பிரச்சனை என்பது புழுதிக் காற்றைப் போலத் தான்* ☀️
☀️ *காற்று அடிக்கும் போது கண்களையும், வாயையும் மூடிக்கொண்டாலே போதும் அதுவே தானாக அடங்கி விடும்* ☀️
☀️ *அது போல் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களைப் பொறுத்து அமைவதில்லை* ☀️
☀️ *நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது* ☀️
☀️ *கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது. சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது* ☀️
☀️ *ஆனால், கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது* ☀️
☀️ *படைத்தவனுக்குத் தெரியும் உன்னால் எவ்வளவு பாரம் சுமக்க முடியுமென்று* ☀️
☀️ *ஆகவே மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்🙏 👍👍👍* ☀️
🤲 முருகா இன்றைய 14-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 15-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ #வேலாயுதம் செ
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug
an #முருகன் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க 🙏
🙏முதல் திருமுறை
🙏திருஎருக்கத்தம்புலியூர்
🙏பாடல் எண் : 1 பண் : குறிஞ்சி
படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை
உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச்
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையா னடியேத்த மேவா வினைதானே.
🙏பொழிப்புரை:
படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா. #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ
🌹இனிய சிவனே என்றிருப்பது என்றால்...
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
1)மனம் அமைதியாக இருப்பது
என்று பொருள்
2)வீணான எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்று பொருள்
3)கவலையிலிருந்து விடுபட்டிருப்பது
என்று பொருள்
4)எல்லாப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்தாகிவிட்டது என்று பொருள்
5)எல்லாம் நன்மைக்கே என்று பொருள்
6)எதனாலும் குழப்பமடையாத நிலை
என்று பொருள்
7)ஆடாத,அசையாத நிச்சய புத்தி உடைய மனம் என்று பொருள்
8)மனம் லேசாகவும், முகம் மலர்ந்திருக்க வேண்டும் என்பது பொருள்
9)எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்தியாக இருப்பது என்று பொருள்
10)தன்னிடம் வருபவர்களின் மனதை அமைதி அடைய வைப்பது என்பது பொருள்
11)ஏகாந்தத்தை அனுபவிப்பது என பொருள்
12)சதாகாலம் அவரையே நினைத்திருப்பது என்பது பொருள்
13)எந்த ஒரு சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பது என்று பொருள்
14)தன்னால் பிறரும் பிறரால் தானும் துக்கமடையாத நிலை என பொருள்...
15)உலகீய பொருட்களில் சாரமில்லை சிவமே
இன்பம் என நிலைத்திருப்பதாக பொருள்...
இப்படி பரம்பொருளான தந்தை ஈசனை என்றும் நினைத்து அவர் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது ஒன்றே சிவனே என்றிருப்பது. என பொருள்படும்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவ #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏
நமது வாழ்வில் நடக்கும் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு காரணம் உண்டு.காரணம் இல்லாமல் இங்கு காரியங்கள் எதுவும் நடப்பதில்லை!
ஒன்று கிடைப்பதற்கும் ஒன்று கிடைக்காமல் தள்ளி போவதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
பலரை சந்திப்பதற்கும் சிலரை விட்டு விலகுவதற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்.
காரணமின்றி எதுவும் இங்கு நடப்பதில்லை. காரணத்தை அறிய முயற்சிக்காமல் இறைவனை நம்பி நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்!
எல்லாம் நன்மைக்கே. என்றும் அவனருளாலே அவன் தாள் பணிந்திருங்கள்!.. #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #sivan #சிவன் #சிவ
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடல் விழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே
காத்தருள் கந்தகுரு அரசே #🕉️ஓம் முருகா #murugan #thiruchentur murug
an #முருகன் #முருக பெருமான் 🙏🙏🙏🙏


