#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி விஜய் செய்த பிழைகள்!
--------------------
1) விஜய் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாக சித்தரித்தார் விஜய்.
2) அரசு பழிவாங்குகிறது என்ற கருத்து விஜய் கட்சித் தொண்டர்களிடம் விதைக்கப்பட்டதால், காவல்துறை கட்டுப்பாடுகளை அவர்கள் சிறிதும் மதிக்கவில்லை.
3) மின்சாரம் தாக்கி யாரும் இறந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதையும் அரசியலாக்கினார் விஜய். இன்னும் ஒருபடி மேலே சென்று, நாகப்பட்டினத்தில் மின்சாரத்தை துண்டிக்க தவெக மாவட்டச் செயலாளரை வைத்தே கடிதம் கொடுத்துவிட்டு, பின்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு அரசை குறை கூறினார் விஜய்.
4) அதிகம் மக்கள் கூடும் பிரச்சாரக் கூட்டங்களை வழக்கமாக அரசியல் கட்சிகள், நகருக்கு வெளியே உள்ள பெரிய மைதானங்களில் தான் நடத்தும். ஆனால், விஜய் அனுமதி கேட்ட இடங்கள் அனைத்துமே நகரங்களின் முக்கியப் பகுதிகள், மக்கள் இயல்வாகவே அதிகம் கூடும் இடங்களாகும். குறிப்பாக நெரிசல் மிக்க குறுகலான சாலைகளாகும். அங்கு அனுமதி மறுத்தால் அதையும் ஏற்கவில்லை விஜய்.
5) விஜய் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களுக்கு வந்து இறந்த தொண்டர்களுக்கு உடனடியாக இரங்கல் சொல்லும் வழக்கம் விஜய்யிடம் இல்லை. பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்தி உள்ளார்.
6) தடுப்பு வேலிகளை உடைப்பது, மரங்களில் கூரைகளில் ஏறுவது என்று தன் தொண்டர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கூடுவது தெரிந்த பிறகும், பிரம்மாண்ட பேனர்கள் வைப்பதை ஊக்குவித்தார் விஜய். அவை சரிந்து விழுந்தால் ஏற்படும் ஆபத்து பற்றி விஜய் கவலைப்படவில்லை.
7) எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் அங்கு வரும் தொண்டர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி உள்ளிட்ட உணவு ஏற்பாட்டை கட்சிகளே செய்வது வழக்கம். அதை எல்லாம் பிரியாணி கொடுத்து கூட்டி வரும் கூட்டமென்று கொச்சைப் படுத்தியது தவெக. ஆனால், விஜய் கூட்டத்தில் தண்ணீர் உணவு இன்றி கடும் வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்த மக்கள் மயக்கம் அடைந்தபோது, தண்ணீர் உணவு ஏற்பாட்டை ஏன் அரசு செய்யவில்லை என்று கேட்கிறது தவெக.
8) எந்தக் கூட்டத்திற்கும் விஜய் குறித்த நேரத்திற்கு வரவில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொன்ன பிறகு, பல மணி நேரம் கடந்து விஜய் வருவதால் தொண்டர்கள் சோர்வு அடைந்து மயக்கமாகும் நிலை ஏற்படுகிறது.
9) விஜய் கூட்டத்தில் கர்ப்பினி பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக் கூடாது என்றும், மீறி வந்தால் விஜய் தான் பொறுப்பு என்றும் கறாராகச் சொன்னது நீதிமன்றம். இப்போது கரூரில் குழந்தைகள் வந்ததற்கு விஜய் தான் பொறுப்பு.
10) கரூரில் இவ்வளவு துயரம் நடந்த பிறகும், களத்திற்கு செல்லாமல், திருச்சியில் கூட தங்கி இருந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஏற்கெனவே திட்டமிட்டபடி விமானத்தில் சென்னை சென்றுவிட்டார் விஜய். பிரதமர், முதலமைச்சர் என்று முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த பிறகும் உடனடியாக விஜய் ஒரு வார்த்தை இரங்கல் கூறவில்லை. ஆனால், முதலமைச்சரோ கரூர் விரைகிறார். அமைச்சர்கள் மருத்துவமனையில் மீட்பு பணியில் உள்ளனர். மக்கள் தலைவர்களுக்கும், கள அரசியல் தெரியாத சினிமா நாயகனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #விஜய்