வராகி அம்மன் துணை 🙏🙏🙏
323 Posts • 1M views
VR
777 views
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று காசி மற்றொன்று தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படைத்தளபதி ஆவாள். ராஜராஜ சோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை ராஜராஜ சோழனின் "வெற்றித்தெய்வம்" என்று வர்ணிப்பர். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராகி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். ஓம் ஸ்ரீ வராகி அம்மனே போற்றி!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #வராகி அம்மன் துணை 🙏🙏🙏 #அம்மன் #பக்தி
7 likes
15 shares