Failed to fetch language order
🎬 புதுப்பட தகவல்
12 Posts • 3K views
தியேட்டரில் காத்துவாங்குதா?: இந்நிலையில் பராசக்தி படத்தை பார்க்க பெரிய அளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். அது உண்மை என்பது போல, படத்தை எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக AGS cinema கடலூர் மக்களுக்கு புதிய ஆபரை கொடுத்துள்ளது. அதாவது, ரூ 50 ரூபாய் ஸ்நாக்ஸ் ஆபரை கொடுத்துள்ளது. அதே போல, தஞ்சாவூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் அணிந்து வந்த பலருக்கு, காவல்துறையினர் 'பராசக்தி' படத்திற்கான இலவச சினிமா டிக்கெட்டுகளையும் பரிசாக வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் டிரெண்டாக நிலையில் இணைவாசிகள், பராசக்தி தியேட்டரில் காத்துவாங்குதா, இத்தனை ஆஃபரை எதற்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். #🎬 புதுப்பட தகவல் #🎬 சினிமா செய்திகள் 🎥
8 likes
9 shares