🙏ஸ்ரீ கிருஷ்ணர்❣️உபதேசம்🙏
365 Posts • 4M views
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு களப்பலி கொடுக்க அமாவாசை திதியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மாற்றிய நிகழ்வு பற்றி இணையத்தில் படித்த சுவாரசியமான தகவல்! பாரத போரில் வெற்றி பெறுவதற்கு நல்ல நாளில் களப்பலி கொடுப்பதற்கான விஷயமாகத் துரியோதனனும், பீஷ்மரும் கலந்து ஆலோசனை நடத்தினர். படைத்தலைவனாகிய பீஷ்மர் துரியோதனனிடம், களப்பலி கொடுப்பதற்கு முன்னால் அதற்கான நல்ல நேரத்தை முக்கியமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சகாதேவன் போல் வல்லவன் யாருமில்லை. அவன் நமக்குப் பகைவனேயானாலும் நீ சென்று பகைமை பாராட்டாமல் தன்மையுடன் கேட்டால் நல்ல நேரத்தைக் கூறுவதற்கு அஞ்சவோ, மறுக்கவோ மாட்டான். அதனால், சகாதேவனிடம் சென்று களப்பலி கொடுப்பதற்குரிய நல்லநேரத்தைக் கேட்டு அறிந்து கொண்டு வா! என்று கூறினார். * மேலும் பீஷ்மர் துரியோதனனிடம், அரவான் என்பவன் தூய்மையும், மனவுறுதியும் மிக்க வீரன். அவனை உயிரோடு விட்டுவிட்டால் போரில் கௌரவர் படைகளைச் சூறையாடி தோற்கடிக்கச் செய்து விடுவான். அதனால் அவனை முதலில் நாம் களப்பலியாக வாங்கி விடுவது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். எனவே சகாதேவனிடம் சென்று களப்பலி கொடுப்பதற்குரிய நல்லநேரத்தைக் கேட்டு அறிந்து கொண்ட பிறகு அரவானைச் சந்தித்து அவனை களப்பலியாகக் கொடுப்பதற்கு அவன் சம்மதத்தை பெற்று வர வேண்டும் என்றும் கூறினார். அதனால் நீ சென்று சகாதேவனையும், அரவானையும் சந்தித்து இந்த இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார். துரியோதனனும், பீஷ்மர் கூறியதை ஒப்புக்கொண்டு சகாதேவனையும், அரவானையும் காண்பதற்குப் புறப்பட்டான். துரியோதனன், தன்னைத் தேடி வருவதைக் கண்ட சகாதேவன் பகைமையை மறந்து வாருங்கள் அண்ணா! என்று அழைத்து உபசரித்தான். பகைமை நிறைந்த இந்த போர் நேரத்தில் தாங்கள் வந்த காரியம் என்ன? என்று சகாதேவன் கேட்டான். *துரியோதனன், பகைமையை பாராட்டாமல் நான் கேட்கும் காரியத்தை முடித்துக் கொடுப்பாய் என்று நினைக்கிறேன். நல்ல நேரத்தை கணித்து சொல்வதில் நீ திறமைமிக்கவன். அதனால் களப்பலி கொடுப்பதற்கு ஏற்ற நல்ல நேரத்தை ஆராய்ந்து எனக்குச் சொல்ல வேண்டும் என்று போலியான பாச உணர்வுடன் நடித்து கேட்டான். இவ்வாறு துரியோதனன் கேட்டவுடன் சகாதேவன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு துரியோதனனிடம் நல்லநேரத்தை கூறுகிறேன் கேளுங்கள் என்றான். சூரியனும், சந்திரனும் செயலிழந்து ஒன்று சேருகின்ற நேரம் அமாவாசை இரவு. அந்த நேரம்தான் களப்பலிக்கு ஏற்ற நல்ல நேரம் என்று ஜோதிட வல்லுநரான சகாதேவன் கூறினான். அமாவாசை தினமே களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொண்டு துரியோதனன், அரவானை சந்திக்கச் சென்றான். துரியோதனனைக் கண்டதும் முதலில் அரவானுக்கு வெறுப்பு ஏற்பட்டது. துரியோதனன் அரவானை சந்தித்து, அரவானிடம்! உன் ஆண்மையும், வீரமும் உறுதி நிறைந்தவை. எதற்கும் அஞ்சாதவன் என்று உலகமெல்லாம் புகழ்கிறார்கள். அந்தப் புகழை நிரூபித்துக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உனக்கு நான் தருகிறேன் என்று கூறினான். ஆனால் தன்னைப் புகழ்ந்து கூறியதால் கோபத்தை தணித்துக் கொண்டு, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? அவசியம் செய்து முடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்து அரவான் தானாகவே தன் தலையை வஞ்சகத்திற்குள் நுழைத்துக் கொண்டுவிட்டான். அப்படி என்றால் போர் தொடங்குவதற்கு முன்னால் உன்னைக் களப்பலியாகக் கேட்கின்றேன் கொடு என்று துரியோதனன் கேட்டான். இதைக் கேட்டதும் அரவானுக்கு, தலையில் பேரிடிகள் ஒருகோடிமுறை விழுந்து ஓய்ந்தது போலிருந்தது. *அரவான், தான் முட்டாள் தனமாகத் துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை எண்ணி மனம் கலங்கினான். ஆனால் கொடுத்தவாக்கை திரும்பிப் பெறமுடியாததால் என்னை களப்பலியாக அமாவாசை திதி நாளில் கொடுக்க தயாராக இருக்கிறேன், எனக்கு உயிரினும் வாக்குப் பெரிது! என்று கூறி சம்மதித்தான். துரியோதனனும், வந்த காரியங்கள் இரண்டுமே தடையின்றி வெற்றியுடன் முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியோடு அஸ்தினாபுரத்திற்கு திரும்பினான். பின்பு பாண்டவர்களுக்கும், கிருஷ்ணருக்கும் துரியோதனன் சகாதேவனிடமும், அரவானிடமும் வந்து பேசி வாக்குப் பெற்றது தெரியவந்தது. கிருஷ்ணர், துரியோதனன் சூழ்ச்சியினால் செய்த இந்த ஏற்பாட்டை நாமும் சூழ்ச்சியினாலேயே முறியடிக்க வேண்டும் என்றார். *பாண்டவர்கள், கிருஷ்ணரிடம் தாங்கள்தான் அந்த சூழ்ச்சியை எங்களுக்கு கூறி உதவ வேண்டும். நாங்கள் அறத்தையும் உங்களையும் தான் நம்பி இருக்கிறோம் என்று மனம் உருக வேண்டிக் கொண்டார்கள். கிருஷ்ணர், பாண்டவர்களிடம் துரியோதனன் களப்பலி கொடுப்பதற்காக நல்ல நேரத்தையும், களப்பலிக்காக அரவானையும் தேர்ந்தெடுத்துள்ளான். ஆனால் துரியோதனனை முந்திக்கொண்டு அதே நல்ல நேரத்தில், நாம் அரவானை களப்பலி கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாண்டவர்கள் வருத்தத்துடன், அந்த வேளையில் துரியோதனனும், அவனுடைய ஆட்களும் அரவானிடம் வாக்குப் பெற்றுக் கொண்டபடி அவனைப் பலிக்கு அழைத்துக் கொண்டு சென்று விடுவார்கள். பின்னர் எவ்வாறு நாம் அரவானை களப்பலி கொடுப்பது? என்று குழப்பத்துடன் கேட்டார்கள். *கிருஷ்ணர், அனைத்தையும் நானே முன் நின்று முடித்து வைக்கப்போகிறேன்! பதினைந்தாவது திதியில் வரவேண்டிய அமாவாசையைப் பதினான்காவது திதியன்றே வரவழைத்துவிட்டால் அன்றே துரியோதனனை முந்திக்கொண்டு களப்பலியையும் கொடுத்து விடலாம் என்று கூறினார். பாண்டவர்கள், தயக்கத்துடன் பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காவது திதியாக வரவழைப்பது சாத்தியமான காரியமா? என்று கேட்டார்கள். *கிருஷ்ணர், சிறிதும் தயக்கமின்றி பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காவது திதியாக வரவழைத்து காட்டுகிறேன் என்று பாண்டவர்களிடம் கூறினார். கிருஷ்ணர் கூறியபடி பதினான்காம் திதியாகிய சதுர்த்தசியன்றே முனிவர்களும் பெரியோர்களும் அமாவாசை திதிக்குரிய ஹோமங்களை மந்திரங்களுடன் நடத்தினர். முனிவர்கள் எல்லோருமே இப்படிச் செய்வதைக் கண்டு, சூரியனுக்கும், சந்திரனுக்கும் அமாவாசை இன்றைக்கா அல்லது நாளைக்கா? என்ற சந்தேகம் எழுந்துவிட்டது. சூரியனும், சந்திரனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் சந்தித்து அமாவாசை என்றைக்கு என ஆராய்ந்தனர். அவர்கள் இருவரும் மறுநாள் அமாவாசை திதியில் சந்திக்க வேண்டியதை மறந்துவிட்டு குழப்பத்தினால் முறைதவறி அன்றைக்கே சந்தித்துவிட்டார்கள். அதனால் பதினான்காம் திதியாகிய சதுர்த்தசியன்றே அமாவாசை உண்டாகிவிட்டது. *பாண்டவர்கள் இதைக் கண்டு வியந்தனர். கிருஷ்ணர், தர்மரிடம் உங்களுக்கு வாக்களித்தபடியே அமாவாசையை ஒரு நாள் முன்பே வரவழைத்து விட்டேன். ஆனால் துரியோதனன் நாளைக்குத்தான் அமாவாசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். போர் நடப்பதற்கு முன்பு முதலில் யார் களப்பலி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் போரில் வெற்றி பெறுவார்கள். அதனால் தயங்காமல் துரியோதனனுக்கு முன் இன்றைக்கே நீங்கள் களப்பலி கொடுத்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் தர்மர் யாரை களப்பலி கொடுப்பது என்று புரியாமல் இருந்தார். அப்போது அரவானும் அருகில்தான் இருந்தான். அரவான் துரியோதனனுக்கு வாக்களித்திருந்ததால், அவன் உயிரைக் களப்பலியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்பதற்கு பாண்டவர்கள் தயங்கினார்கள். *அரவானே முன் வந்து ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவன் துரியோதனனுக்கு வாக்கு கொடுத்ததால் தயங்கி நின்றான். அரவானை வழிக்குக் கொண்டு வருவதற்காக கிருஷ்ணர் ஒரு நாடகத்தை நடத்தினார். அதனால் கிருஷ்ணரே முன்வந்து தன்னை களப்பலியாக தருகிறேன்! இந்த உடலை உங்கள் வெற்றிக்காகப் பலி கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்கவில்லை. என்னை களப்பலி கொடுங்கள் என்று கூறினார். பாண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பாண்டவர்கள் கிருஷ்ணரிடம்! உங்களைப் பலி கொடுத்து எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றால் வெற்றியை விட நாங்கள் தோல்வி அடைந்தாலும் கவலையில்லை. நீங்கள் எங்களுடன் இல்லாதபோது எங்களுக்கு போர் எதற்கு? அரசாளும் உரிமையும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் இப்போதே போர் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறோம் என்று கூறினார்கள். *கிருஷ்ணர் தனது மாய நாடகத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அவரது நாடகம் எதிர்பார்த்த பலனைத் கொடுத்தது. கிருஷ்ணர், அரவானைப் பார்த்த போது அவன் விழிகள் கண்ணீரால் நனைந்திருந்தது. அரவான், கிருஷ்ணரையும், தர்மனையும் பார்த்து, நான் இருக்கிறேன் என்னைக் களப்பலி கொடுங்கள். துரியோதனன் செய்த சூழ்ச்சியால் அமாவாசை திதியன்று களப்பலியாவதாக நேற்று அவனுக்கு வாக்குக் கொடுத்தேன். ஆனால் இன்று தான் அமாவாசை என்பது அவனுக்கு தெரியாது. இன்றைக்கு நீங்கள் களப்பலி கொடுக்காவிட்டால் எப்படியும் நாளைக்கு அவன் என்னைக் களப்பலி கொடுத்து விடுவான். நீங்கள் குறித்த நல்லநேரம் தவறிவிடக் கூடாது. அவன் பலியாக்க வேண்டிய என் உடலை நீங்கள் பலியாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினான். *ஆனால் கிருஷ்ணர் மீண்டும் பாண்டவர்களுக்காக நானே பலியாகிவிடுகிறேன். நீ துரியோதனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்று என்று அரவானிடம் கூறினார். ஆனால் அரவான்! கிருஷ்ணரிடம் நீங்கள் போருக்கு உறுதுணையாக இருந்து பாண்டவர்களுக்கு அனைத்து உதவியும் செய்து வெற்றி பெற வழிகாட்டுங்கள். நானே பாண்டவர்களுக்காக களப்பலியாகி விடுகிறேன். ஆனால் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடக்க இருக்கும் இந்தப் போரை உயிரோடு இருந்து நான் பார்க்கவேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் நான் களப்பலியாகி இறந்துவிட்டால், போர் தொடங்கும் போது, உயிர்பெற்றுச் சில காலம் போர்க்களக் காட்சிகளை காண்பதற்கு வேண்டிய வரத்தை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்று அரவான் வேண்டிக்கொண்டான். *அரவானின் வேண்டுகோளுக்கு கிருஷ்ணர் இணங்கி, அதற்கு வேண்டிய வரத்தையும் தருவதாக ஒப்புக்கொண்டார். அரவானும் மனநிறைவு பெற்று மகிழ்ச்சி அடைந்தான். சூழ்ச்சிக்கு சூழ்ச்சியே தீர்வு — "அதர்மத்தை அழிப்பதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் செய்த சூழ்ச்சி",மேலும் அமாவாசை திதியை சதுர்த்தி திதி அன்றே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி வரவழைத்தார்? என்பதற் #🙏ஸ்ரீ கிருஷ்ணர்❣️உபதேசம்🙏 #🌼ஸ்ரீ கிருஷ்ண பகவான்🌼 #🙏🏻ராதாகிருஷ்ணன்✨ #கிருஷ்ணன் பாடல் #🙏கிருஷ்ண உபதேசம்🙏 #மகாபாரதம் #மகா பாரதம் கிருஷ்ணன் கண்ணன் கு கர்ணன் திரைப்படத்திலிருந்து ஒரு சுவாரசியமான #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 காட்சி கீழே!👇🏻👇🏻🚩🕉🪷🙏🏻
12 likes
13 shares