பஞ்ச பட்சி சாஸ்திரம்
8 Posts • 4K views
பஞ்ச பட்சி - பஞ்சாட்சரம் "ந ம சி வ ய" ------------------------------------------------------------------------ இந்த மாபெரும் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் யோக கலையை ஆழமாய் எனக்கு அனுபவமாக்கி கற்பித்த கொல்லிமலை சித்தர் தர்மலிங்க சுவாமிகளின் திருவடிகளை வணங்கி தற்போது whatsaap இல் கற்பிக்க தொடங்கியுள்ள திருமந்திர சிவயோக வகுப்பில் விரிவாக கற்பிக்கவுள்ள பஞ்சபட்சி பஞ்சாட்சர பிரயோகம் பற்றி அனைவரும் அறிய இந்த பதிவை பகிர்கிறேன்.... இதில், ந - மண்ணையும், ம - நீரையும், சி - நெருப்பையும், வ - காற்றையும், ய - ஆகாயத்தையும், குறிக்கும்...... நமசிவய என்பதில், ந - வல்லூறு ம - ஆந்தை சி - காகம் வ - கோழி ய - மயில் நமசிவய பஞ்சாட்சர தொழில், வல்லூறு - ஊண் ஆந்தை - நடை காகம் - அரசு கோழி - துயில் மயில் - சாவு இங்கே அதிகார பட்சியான வல்லூறு ஆந்தை எனும் நீரை உண்ணும், காகம் சமம், கோழி மற்றும் மயிலை வெற்றிபெறும் இங்கே கோழி மயில் நட்பு. இந்த நமசிவய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உடலில் நில பூத தத்துவத்தை ஊணில் நிறுத்தி மூலாதாரம் சுவாதிஷ்டானம் இடையில் இருந்து மந்திரம் ஓத எடுத்த காரியம் உடனே வெற்றி அடையும். நமசிவய சொல்ல சொல்ல எடுத்த காரியம் தங்கு தடையின்றி முடியும். இதை நேர்முகமாக குருவிடம் தெரிந்து கொள்வதே நன்று என்பதால் இத்துடன் முடிக்கிறேன். விரிவாக பயின்று சித்திகள் பெற அனைத்து யோகமும் நம் திருமந்திர whatsaap வகுப்பில் கற்பிக்கபடுகிறது. தேவைப்படுபவர்கள் இணையவும்...... பட்சி சாஸ்திரமும், சர சாஸ்திரமும் காலம் காலமாக பதினெட்டு சித்தர்கள் வழி ரகசியமாக சிலருக்கு மட்டுமே சொல்லி கொடுக்கப்பட்டு ரகசியமாக காப்பாற்ற பட்டு வந்தது. சில குருமார்கள் அரைகுறையாக படித்து விட்டு எந்த சூட்சுமமுமே தெரியாமல் சொல்லி தருகிறேன் என்கிறார்கள். இப்படி பலவித காரணங்களால் பஞ்ச பட்சியும் சர சாஸ்திரமும் அழிந்து அல்லது வேறு வகையில் திசை மாறி கொண்டு போகிறது. எந்த நிலத்தில் விதைக்க வேண்டும் என்பதும் குருமார்களுக்கு புரிவதில்லை. போகட்டும் இவர்களை சொல்லி பிரயோஜனம் இல்லை. எந்த சாஸ்திரம் ஆனாலும் அவர்கள் விதிபலனை பொறுத்தே அவர்கள் அதை என்னதான் கற்று கொண்டாலும் அதை உபயோக படுத்துவது சாத்தியமா இல்லயா என்று அமைகிறது. அகஸ்தியர் குருநாதர் சொல்வது என்ன என்றால் மாரணம் பயன்படுத்த கூடாத விஷயம் இல்லை எவன் ஒருவன் பட்சி மாரணத்தால் உயிர் விடுவான் என்பதை அவன் விதி அறிந்தே பயன்படுத்து என்கிறார். அப்பாவி பெண்களை கற்பழித்தவனும், குரு துரோகம் செய்தவனுக்கும், சண்டாள செயல்கள் செய்தவனுக்கும் அவன் விதி அறிந்து மாரணம் பிரயோகம் செய் என்கிறார் அதில் தவறும் இல்லை என்கிறார். பட்சி சாஸ்திரம் சண்டாளர்க்கு சொல்லி கொடுக்க கூடாது என்று அவர் சொன்னாலும் பட்சி பலிப்பது அவன் விதி பலனை பொறுத்தே அமையும். இனியும் ரகசியம் ரகசியம் என்றால் பட்சியும் ஜோதிடமும் அழிந்தே விடும். தமிழகத்துக்கு எது மூல காரணமோ அதுவே சிதைக்க பட்டுவிடும். நம்பிக்கையையும் அன்பையும் பக்தியையும் உணராத சில பேர்களை கொண்டது இந்த சமுதாயம். சாதாரண மனிதர்களுக்கும் வித்தை தெரிந்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. வித்தை மறைமுகமாக பிரயோகிக்க பட வேண்டியது. எனக்கு தெரிந்தவரை வித்தை துரோகிகளுக்கும் கூட இருந்து குழி பறிக்கும் வஞ்சகர்களுக்கும் நிச்சயம் சொல்லி கொடுக்க கூடாது. எப்படி அறிந்து கொள்வது இவர்கள் இருப்பதே நண்பர்கள் என்ற போர்வையில் தான். அனைத்து நண்பர்களும் சந்தேகிக்க படவேண்டியவர்களா என்றால் ஆம் என்ற பதில் நமக்கு சாதகமாக அமையும். நண்பனுக்கு சொல்லி கொடுக்கும் வித்தை எதிரியாக என்ற கணக்கில் கொள்வதே நலம். ஏன் என்றால் காலம் எதிரியை நண்பனாக்கும் நண்பனை எதிரியாக்கும். விஷயங்களை சுயநலமாக எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நண்பனை தூரத்தில் வைப்பதே நலம். தெரிந்தவர்களாக இருந்தாலும் தெரியாதவர்களாக இருந்தலாம் நான் சுயமாக கற்று கொண்ட சில பஞ்ச பட்சி விவரங்களை வெளிப்படையாக இன்று உங்களுடன் இந்த சித்தர்களின் குரல் முக நூலில் பகிர எண்ணுகிறேன். நீங்கள் அதை ஆய்வு செய்தால் இன்னும் உயர் நிலையை அடையலாம். ந-ம-சி-வ-ய என்றால் என்? சி-வ-ய-ந-ம என்றால் என்ன? பஞ்சாட்சரம் என்றால் என்ன? பஞ்ச பூதங்களை எப்படி உடலில் கண்டறிவது? பஞ்ச பூதங்களின் ஊண் நடை அரசு துயில் சாவு இயக்கங்கள் வளர்பிறை தேய்பிறை எப்படி மாறும்? உடலில் உள்ள இயக்கம் என்ன பிரபஞ்ச இயக்கம் என்ன? ஊண் அரசு எப்படி செயல்பட வைப்பது? ஒரு காரியம் எண்ணும்பொழுது அது நடக்குமா நடக்காதா என்று உடலில் ஓடும் பூதத்தை வைத்து எப்படி அறிவது எப்படி? பஞ்சாட்சர யந்திரம் மூலம் அஷ்டகர்மம் எப்படி செய்வது? பிரபஞ்சத்தில் மண் ஊணில் இருக்கும் பொழுது எப்படி நமது உடலிலும் மண் தத்துவம் ஊணில் வர வைப்பது? ஒரு காரியம் வெற்றி அடைய அதே நேரத்தில் எப்படி நீரையும் மண்ணையும் செயல்பட வைப்பது? இது போன்ற நீங்கள் கேள்விப்படாத விஷயங்கள்.... எத்தனை பேரால் அஷ்டகர்மம் செய்ய முடியும்? முயன்று பாருங்கள். பயிற்சி நிச்சயம் வெற்றி கொடுக்கும். கோபப்படுபவர்கள் உங்கள் தலையை மண்ணில் புதைத்து கொள்ளவும்.... முட்டாள்களையும் துரோகிகளையும் கொண்டது இந்த சமுதாயம் நாம் முன்னேற வேண்டுமானால் முதல் படியை எடுத்து வைத்தே ஆக வேண்டும்... ஏன் பஞ்சாட்சரத்தில் நம சிவ ய வும் சிவயநம வும் மட்டும் இவ்வளவு சிறப்பு என்று எப்பொழுதாவது யோசித்தது உண்டா? கிணத்துல குதிச்சாலும் சாவு தான் குதிக்காமல் வெளியே நின்றாலும் ஒரு நாள் சாவு தான் ... என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடலாமே.... பஞ்ச பூத சிவ சக்தி இயக்கம் ------------------------------------------------------ சி - நெருப்பு சிவன் வ - காற்று சக்தி "சிவ" எனும் உச்சரிக்கும் போது "வ" எனும் காற்றானது சிவம் எனும் நெருப்பை வளர்க்கிறது. இங்கே சி ஊணிலும் வ நடையிலும் இருக்கும், இந்த நிலையில் நெருப்பு வளரும் பொழுது தியானம் எனும் நிலையும் தியானத்தில் த்ராடகம் எனும் அசையா நிலையும் ஏற்படும். தியானம் நிலைக்கு சரியான மந்திரம் சிவ, இதை "ஓம்~சிவசிவ~ஓம்" என்று தொடர்ந்து உச்சரிக்கும் பொழுது நல்ல மாற்றத்தை உடல் ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் உடனடி பலனை கைமேல் கொடுக்கும். இந்த சிவ சிவ எனும் மந்திர நிலையில் ருத்ரனின் நிலை அமோகமாக இருக்கும். எதிரிகள் தொல்லை எந்த காரியமும் நடக்காமல் கஷ்டப்பட்டு காரிய தடை எனும் சிக்கலில் இருப்பவர்களுக்கு இந்த "ஓம்~சிவசிவ~ஓம்" மிகுந்த பலனை கொடுக்கும். உடலிலுள்ள ஆன்மாவிலும் ருத்ர தன்மை மிகும். இந்த ருத்ரனின் உதவியால் அனைத்து காரிய தடைகளையும் தகர்த்து எரிந்து வெற்றி பெற முடியும். பணம் கடனாக கொடுத்து திருப்பி வாங்க முடியாமல் கஷ்ட படுபவர்கள் இதன் மூலம் பயன் அடைய முடியும். ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளுங்கள், இதன் பயன் அதிகபட்சமாக 3 மாதத்திற்குள் கிடைக்கும். ஏன் என்றால் பஞ்ச பட்சியை எந்த ஒரு மந்திர சித்தியும் 3இல் இருந்து 6 மாதம் ஆகும் சித்தி அடைய அதனால் பொறுமையாக சொல்லி வரவும். "ஓம்~சிவ;சிவ~ஓம்" என்பதையே கோசம் பீஜம் சேர்த்து " ஓம் சௌம் றீம் உங் சிங் எங் வங் " என்றும் உச்சரிக்கலாம். இந்த மந்திரங்கள் உச்சரிக்கும் பொழுது நெஞ்சு குழியிலும் தொண்டை குழியிலும் கவனம் வைப்பது மிக முக்கியம். இதற்கான யந்திரங்களை வரைந்து அதில் எதிரியின் பெயரை ஜெபிப்பதன் மூலமும் நாம் வெற்றி அடைய முடியும். இதில் மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இது போன்ற விஷயங்கள் செய்வதற்கு முன்பு நாம் நிலத்தில் இருந்து ஆகாயம் வரை உள்ள அனைத்து பூதங்களையும் சித்தி செய்து வைத்து கொள்வது முக்கியம். உதாரணமாக நிலம் எனும் பூதம் சித்தி அடைய "ஓம் ஐம் அங் நங்" என்று சுமார் 6 மாதம் மூலாதாரம் மற்றும் சுவாதிஷ்டானத்தில் மனதை வைத்து உச்சரித்து பயிற்சி செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நில தத்துவத்தை நாம் நமது உடலில் ஊண் நிலைக்கு கொண்டு வர முடியும். இதை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். உண்மையில் அனைத்து கலைகளையும் விட மிக சிறப்பு வாய்ந்தது பஞ்ச பட்சி சாஸ்திரம். இன்னொரு முக்கியமான விஷயம் பஞ்ச பட்சி கற்று கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் ஜோதிடம் அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஜோதிடம், பஞ்ச பட்சி, வர்மம், வைத்தியம் இவை நான்கும் மிக முக்கியம் கண்டிப்பாக ஜோதிடம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏன் என்றால் பஞ்ச பட்சியிலே மிக முக்கியமானவை சூரிய உதயம் கிழமை திதி நட்சத்திரம் யோகம் கரணம் போன்றவை. அதனால் பஞ்ச பட்சி கற்று கொள்ள விரும்புபவர்கள் மேற் கண்ட விஷயங்களை கற்று கொள்ள ஆரம்பியுங்கள்.... பஞ்ச பூதங்கள் (பஞ்ச பட்சி) வசியம் ----------------------------------------------------------------- பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்திகளை குறிப்பது. இவையே பஞ்ச பட்சி என்று வல்லூறு மயில் ஆந்தை காகம் கோழி என்று மறைமுகமாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஐந்து பூதங்களும் தான் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. இந்த ஐந்து பூதங்களும் அண்டம் பிண்டம் என்று இருவகையாக பிரிக்க படுகிறது. அதாவது பூதங்கள் ஒன்றாக இருந்தாலும் பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களின் இயக்கம் வேறு நமது உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கம் வேறு. உதாரணமாக பிரபஞ்சத்தில் ஆகாயம் ஊணில் இருக்கும் பொழுது நமது உடலில் வேறு ஒரு தத்துவம் ஊணில் இருக்கும். அண்டத்திலும் பிண்டத்திலும் ஒரே பூதத்தை ஒரே இயக்கமாக கொண்டு வர முடியும். அதுவே பஞ்ச பூதம் வசியம் எனப்படும். பஞ்ச பூத வசியம் என்பது நமது உடலில் உள்ள பூத தத்துவத்தை மாற்றி இயக்கத்தை மாற்றுவதே ஒரு சிலர் இதை தவறாக எண்ணி கொண்டு இருக்கிறார்கள். பிரபஞ்சத்துடன் நாம் தொடர்பு கொள்ள பிரபஞ்சத்தில் உள்ள இயக்கத்துடன் நமது உடல் இயக்கம் ஒத்து போக வேண்டும். நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களை மட்டுமே நம்மால் வச படுத்த இயலும். அதன் பிறகே நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். பஞ்ச பூதங்களை வச படுத்தும் முன்பு எந்த பூதங்களை என்பது நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு வெகுவாக உதவுவது சுழுமுனை எனும் சூட்சும நாடி. ஒரு பொருளை எடை போடும் முன் நாம் எடை கருவியை zero விற்கு கொண்டு வருவோம். அதே போல தான் பஞ்ச பூதங்களை வசப்படுத்தும் முன் நம் சுவாசம் சூன்யத்திற்கு மாறி இருக்க வேண்டும். இந்த சூன்யத்தை மையமாக வைத்தே positive negative செய்ய முடியும். இந்த பட்சி வசியத்தை அகஸ்தியர் தனது அகஸ்தியர் மாந்த்ரீக காவியத்தில் தெள்ள தெளிவாக விளக்குகிறார். "திண்ணமா மின்னொமொரு மார்க்கங் கூற்வேன் தீர்க்கமுள்ள புலஸ்தியனே தீரமாரா வண்ணமாம் பட்சியிலே "பட்ச" பட்சி வளமான மானுடர்க் குபதேசங்கள் கண்ணமுடன் எதிராளி பேரைக்கூறி காவலனே தானழைக்க பட்சி தானும் தன்னமுட னடவணங்கி யுறக்கங்கொண்டு தகைமையுடன் பட்சியது சோருந் தானே" "சோருமே யெந்தவகை பட்சிதானும் சொற்பெரிய பேரதனை மாறுங்காலம் வீறுவே விடாய் தீர்த்து யுறக்கங்கண்டால் வித்தகனே பொருத்த முள்ள பட்சியாகும் தீருமே பேர் மாறி பட்சிதன்னை தீர்க்கமுடன் ற்றா டைத்து மார்க்கமெல்லாம் சாருமே மானிடற்கு வமைக்குமல்லால் சாங்கமுடன் மற்றவர்க்கு வாய்க்காதன்றே " இதிலே தெளிவாக சொல்கிறார்... பஞ்ச பூதங்களை வசியம் செய்ய ஒரே வழி "வாசி யோகமும் பஞ்சாட்சரமும் மட்டுமே" வேறு வழி கிடையாது. வேறு மந்திரங்கள் கிடையாது. சுழுமுனையில் நின்று மட்டுமே வாசியை மாற்ற முடியும். இதிலே வண்ணமாம் பட்சியிலே வண்ண பட்சி பட்ச பட்சி என்கிறார். இதன் பொருள் மிக ரகசியம் இது கூட தெரியாமல் இன்று பல பேர் பட்சி வசியம் என்றும் பட்சி மாந்த்ரீகம் என்று கதை விட்டு கொண்டு திரிகின்றனர். சோருமே எந்தவகை பட்சி தானும் சொற்பெரிய பேரதனை மாறுங்காலம் பஞ்சாட்சரம் மூலம் எழுத்துமாறல் மூலமே பஞ்ச பூதங்களை இயக்க முடியும். இதற்கு வேறு மந்திரங்கள் கிடையாது. தீருமே பேர் மாறி பட்சி தன்னை தீர்க்கமுடன் ற்றாடைத்து என்கிறார்.... அதாவது நமசிவய மந்திரத்தை சிவயநம என்ற ஈரெழுத்து மூன்றெழுத்து நான்கெழுத்து ஐந்தெழுத்து எனும் எழுத்து மாறல் மூலமாகவே வசிய படுத்தவோ இயக்கத்தை மாற்றவோ முடியும். பிரபஞ்சத்தில் என்ன பட்சி என்ன இயக்கத்தில் இருக்கிறதோ அதே பட்சியை அதே இயக்கத்தில் நம் உடலில் மாற்றி கொண்டால் உலகமே வசமாகும். நான் குறிப்பிட்ட பாடலில் மிக பெரிய ரகசியத்தை மிக எளிவாக கூறி உள்ளார் குரு நாதர். எந்த பட்சியை எடுக்க வேண்டும் என்பதில் இருந்து எப்படி எழுத்து மாறல் செய்ய வேண்டும் பட்சி ஊணிலா அரசிலா நடையிலா அல்லது துயிலிலா என்பதையும் தெளிவாக கூறி உள்ளார். ஒரு முறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து பஞ்ச பூத வசியம் என்று மனதை குழப்பி கொள்ளாதீர்கள். பஞ்சாட்சரமும் வாசியுமே நமது விதியை மாற்றும் தன்மை கொண்டது. பஞ்ச பட்சியும் அஷ்டகர்ம ப்ரயோகமும் --------------------------------------------------------------------- "தானென்ற கன்னி நூல் தலைச்சன் ஆகும் சண்டாளக் கருவல்லோ இணங்க லாகும் தேனென்ற சக்கரங்கள் உடலதாகும் திறமான அட்ட சரமும் காரணமாய் முடியும் வானென்ற மூலிகையை பிடுங்கொணாது மக்களே மற்றதெல்லாம் செய்து பாராய் ஏனென்று பேசுமடா மித்துரு உன் செயலால் அங்கே என்மகனே சேர்ந்து போனால் பட்சி வித்தை பலியாதே" அஷ்ட கர்மங்களுக்குக் காப்பு கட்ட தலைச்சனாக பிறந்த கன்னி பெண் நூற்ற நூலால் தான் காப்பு கட்ட வேண்டும். கரு முதலியவற்றை தொட்டு செய்கிற அஷ்டகர்ம காரியங்கள் பிசாசு தன்மையை வளர்க்கும். ஆகையால் அவற்றை விலக்க வேண்டும். அஷ்ட கர்மத்துக்காக பட்சிகளுக்குரிய மூலிகைகளை பிடுங்கி செய்யும் காரியங்கள் விலக்க தக்கவையே. அதனால் இவற்றை செய்ய கூடாது. நமது உடலிலேயே ஆறாதார சக்கரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் பஞ்சாட்சரத்தின் மூல எழுத்து உண்டு. ஒவ்வொரு தனி சக்கரத்திற்கும் தனி பீஜாட்சரம் உண்டு. இவற்றை கூடி அங்கங்கே நினைவை நிறுத்தி சிவசக்தி தியானம் செய்து தவத்தை தொடர்ந்து பட்சியை மித்துருவாக்கி கொண்டு செய்கிற வாசி குண்டலினி யோகிக்கே பட்சி வித்தை பலிக்கும். மேலே சொன்ன தீய நெறியும் இங்கு சொன்ன தவ நெறியும் சேர்ந்து செய்தால் அழிவு வருமே அன்றி பட்சி வித்தை பலியாது. எனவே தீயதை நீக்கி குண்டலினி யோகம் கைவர பெற்றவருக்கே பட்சி வித்தை பலிக்கும். பஞ்ச பட்சி பயிற்சி செய்ய வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது "பஞ்சாட்சர பூஜை" நமசிவய மசிவயந சிவயநம வயநமசி யநமசிவ எனும் பஞ்சாட்சரத்தை பூஜை செய்ய வேண்டும். இதற்கான கால கட்டம் ஒரு பஞ்சாட்சரதிற்கு 6 மாதம். தொடர்ந்து 6 மாதம் பஞ்சாட்சர ஜெபம் செய்வதன் மூலம் அந்த பஞ்சாட்சர சித்தி பெறலாம். இது போல மீதி நான்கு பஞ்சாட்சர எழுத்துகளையும் பூஜை செய்ய வேண்டும். 5×6 மாதங்கள் = 30 மாதங்கள் அதாவது இரண்டரை வருடங்கள் பயிற்சியில் இருக்க வேண்டும். இதுவே முதல் நிலை. இதற்கு முன்பு அடிப்படை பூஜை முறைகள் உண்டு ஒரு வருடம் ஆகும் அதை முடிக்க. பூதங்களில் காகம் தவிர மீதி அனைத்துக்கும் தோஷம் உண்டு. இப்படி பூஜை செய்வதன் மூலம் தோஷம் நீங்குகிறது. பஞ்ச பூதங்களை தோஷத்துடன் நாம் செயல்படுத்தும் போது அந்த தோஷம் நம்மை மட்டும் அல்லாமல் நம் சந்ததியையும் தாக்கும். அதனால் மிக கவனமாக பயிற்சியில் இருக்க வேண்டும். இதில் ஒரு சூட்சும முறை உண்டு நான்கு பூதங்களையும் இரண்டரை வருடங்கள் சித்தி செய்வதற்கு பதிலாக சிவயநம எனும் பஞ்சாட்சர த்தை பூஜை செய்வதன் மூலமாக நாம் அனைத்து பூத தோஷங்களையும் நிவர்த்தி செய்ய முடியும். இதனையே ஒளவையார் "சிவாய நம வென சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஏதுமில்லை உபாயம் இதுவே மதியாகும்" என சிறப்பாக எடுத்துரைக்கிறார் . விரைவில் இன்னும் பல ரகசிய தகவல்களுடன்.. இதுபோன்ற சித்தர்களால் உலகுக்கு அருளப்பட்ட பல அபூர்வ மருத்துவ முறைகள், வாசி யோகமுறைகள், அபூர்வ யோக சாதனைகள், தந்திர பிரயோகங்கள் என திருமூலர் வழியில் அனைத்தையும் முழுமையாக கற்க 🚩🕉🪷🙏🏻 #அகத்தியர் சித்தர் #பஞ்ச பட்சி சாஸ்திரம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #சாஸ்திரம்
18 likes
8 shares