கானும் பொங்கல் வாழ்த்துக்கள்
37 Posts • 12K views
நடேசன் S
922 views 3 days ago
#காணும்_பொங்கல் 17-01-2026 பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது காணும் பொங்கல். இதை காணும் பொங்கல், கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்று அழைப்பார்கள். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள். இன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. கிராமங்களில் வயது முதிர்ந்த பெரியவர்கள் , பெற்றோர்களின் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுவதும், அவர்களுக்கு பெரியவர்கள் வாழ்த்தி கையில் பணமோ , பரிசுப் பொருள்களோ வழங்குவது வழக்கம். #இனிய கானும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் #கானும் பொங்கல் வாழ்த்துக்கள்
11 likes
1 comment 11 shares