லோன்
32 Posts • 159K views
-
639 views 2 months ago
*ரூ. 2 லட்சம் வரை நீங்கள் வீடு கட்ட மானியம் வாங்கலாம் ! எங்கு? எப்படி நீங்கள் பெற வேண்டும்?* கனரா பேங் லோன்: எலிவளையானாலும் அதற்கு தனிவளை வேண்டும்’ என்பார்கள். ஆம், அது போல் தான் நம் நாட்டில் சொந்தவீடு என்று ஒன்று இருந்தால் அது பிறவிபலனை அடைந்த மாதிரி தான். இந்த அவசர உலகில் நாம் நாள் முழுதும் கடுமையாக உழைத்துக் களைத்து வந்தாலும் நமக்கு நல்ல ஆறுதலைத் தருவது நம் சொந்த வீடு தானே. ஆனால், இன்றைக்கு உள்ள கடும் விலைவாசி மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் அதி உச்சபட்ச வளர்ச்சியினால் சொந்தவீடு என்பது பலருக்கும் தற்போது கானல் நீர் தான். நம் ஒட்டுமொத்த கடும் சேமிப்பையும் கொட்டி நமக்கு என்று தனி வீடோ அல்லது தனி நிலமோ வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்குத் தான் வங்கிகளும், வீட்டு நிதி நிறுவனங்களும் பல்வேறு கடன் திட்டங்களையும் தன் அகத்தே வைத்துள்ளன. அதற்கேற்றாற் போல் வீட்டுக்கடனுக்கான நமது தேவையும், மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகமாகி வருகிறது. ஆகவே, வங்கிகளும் குறிப்பாக விவசாயிகள், பெண்கள், தொழில்முனைவோர் எனப் பலதரப்பட்ட மக்களுக்காகப் பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட தனி வீட்டுக்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவித முன்பணமும் இந்த திட்டத்திற்கு நீங்கள் செல்வழிகாமமல் ரூ. 2 லட்சம் வரையில் சொந்த வீடு கட்டுவதற்கான மானியம் எப்படி பெறுவது என்று இங்கே நாம் தெரிந்துக் கொள்ளலாம். 1. முதல் தகுதி கண்டிப்பாக சொந்த வீடு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். 2. ஆண்டு வருமானம் கண்டிப்பாக குறைந்த பட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சம் 6 லட்சம் வரை இருக்க வேண்டும். 3. கடன் வாங்கிய சுமார் 15 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். 4. கண்டிப்பாக குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி பெயரில் வீடு மனை இருக்க வேண்டும். 5. தற்போது வரை இந்த வீட்டுக்கடன் முக்கியமாக பொதுத்துறை வங்கி, கூட்டறவு வங்கி, தனியார் வங்கிகளில் இந்த திட்டம் அமலில் உள்ளது. 6. முதலில் வங்கிக்கு கண்டிப்பாக நேரில் சென்று வீடு கட்டுவதற்கு லோன் வேண்டும் என நீங்கள் விசாரித்தால் இதுக் குறித்த தகவல்களை வங்கி அதிகாரிகள் உங்களிடம் தெள்ள தெளிவாக விவரிப்பார்கள். #லோன் *┈┉┅━❀••❀━┅┉┈​​​​​​​​​​*
12 likes
12 shares