Failed to fetch language order
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று
6 Posts • 829 views
Rationalist
748 views 6 days ago
பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளிலும், மார்க்சியப் பொது வுடைமைக் கொள்கையிலும் இளம் அகவையிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்த நிலையில் தமிழ்க் குமுகத்தின் மீதும், தமிழ்நாட்டின் மீதுமான அக்கறை அதிகமாகப் பாவலரேறுவிற்கு உருகொண்டது.. தமிழ் மொழி விடுதலைக்கு மட்டுமின்றி தமிழ் இன விடுதலைக்கு.. தமிழ்நாட்டு விடுதலைக்கு.. முன்னின்று முழங்கினார்.. 1972, 73, 75 ஆகிய பர ஆண்டுகளில் திருச்சியில், மதுரையில், சென்னையில் என்று மூன்று இடங்களிலும் தமிழக விடுதலை மாநாட்டை முன்னின்று நடத்திச் சிறைப்பட்டார் பாவலரேறு.. ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பில் பெரியாரின் கொள்கைகளோடு, தமிழையும் சமசுகிருத அதிகாரப் பிடியிலிருந்து மீட்க வேண்டும் எனும் அழுத்தம் பாவலரேறுவிடம் இருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுங்கள் ஐயா என்று பெரியாரைக் கேட்டுக் கொண்டார் பாவலரேறு. அவரும் சரி என்று ஒப்பிய நிகழ்வு பெரியாரின் இறுதிக் காலத்தில் நடந்தது. - பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடு புத்தகத்தில் இருந்து. விடுதலை வேண்டும் அது முதல் வேலை வேறந்த வேலையும் செய்யலாம் நாளை... - பாவலரேறு பெருஞ்சித்திரனார் #தமிழ்நாடு தமிழருக்கே! #தந்தை பெரியார் #பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று #தமிழ்த்தேசியம் #🚨கற்றது அரசியல் ✌️
10 likes
8 shares