அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலை நடத்திய அல்-கைதாவிற்கும் இராக் அதிபர் சதாம் உசேனிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இராக் வேதியியல் - உயிரியல் ஆயுதங்களை பெருமளவில் வைத்திருப்பதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை இராக் அடையலாம் என்றும், இதனால் இராக் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லி அமெரிக்காவின் புஷ் அரசாங்கம் 2003-ல் இராக்கின் மீதான போரை துவங்கியது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத்தால் இராக் மக்கள் பெருவாரியாக கொன்றொழிக்கப்பட்ட பின், ஐ.நா சபையால் இராக்கிற்கு அனுப்பப்பட்ட ஆயுத ஆய்வுக்குழு, இராக்கிடம் அணு ஆயுதமோ வேதியியல் ஆயுதங்களோ பெருவாரியாக இல்லை என்றும் அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாறான அறிக்கையை சமர்பித்து இராக்கின் மீதான அமெரிக்கப் போரை கண்டித்தது.
அமெரிக்காவின் இராக் மீதான போருக்கு உண்மையான காரணமாக இருந்தது "பொருளாதார சீர்திருத்தங்களை தாராளமயத்தை அமல்படுத்தி அப்போதைய உலகில், இரண்டாவதாக பெருமளவு எண்ணெய் வளத்தை கொண்டிருந்த இராக்கை தன் பிடிக்குள் கொண்டுவருவதே".
அதற்குப் பல பொய்கள் கட்டுக்கதைகள் இராக்கைப் பற்றி அமெரிக்காவால் பரப்பட்டது.
இப்போதும் ஈரான் மீதான போரை நியாயப்படுத்த ஈரானிடமிருக்கும் அணு ஆயுதம் அச்சுறுத்தலாக இருப்பதாக அணு ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்காவின் அடியாளான இசுரேல் என்ற Non-Proliferation treaty-ல் கையெழுத்திடாத சியோனிச பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் நாடு கூறுகிறது.
இன்று IAEA, ஈரான் அணு ஆயுதம் உருவாக்குகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருக்கிறது.
ஆனால் பொய் மீது கட்டமைக்கப்பட்ட போர் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது.
மத்திய கிழக்கில் மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளை ஒடுக்கி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை தாராள தனியார்மய சந்தைக்கு திறந்து விடுவதே அமெரிக்காவின் நோக்கம். அங்கு இசுரேல் என்ற ஆக்கிரமிப்பு அரசு உருவாக்கத்திலிருந்து துவ
#அமெரிக்கா #📺அரசியல் 360🔴 #geopolitics ங்கிய திட்டம் இது.
#இஸ்ரேல் vs ஈரான்