அருள், பக்தி, மற்றும் ஆனந்தத்தில் தோய்ந்த ஒரு குரு பௌர்ணமி
குரு பௌர்ணமி 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 6,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் நேரலையில் பல லட்சக்கணக்கானோரும் சத்குருவின் அருளில் திளைத்திடும் அரிய பாக்கியத்தை அனுபவித்தனர்.
பிரம்மாண்டமான ஊர்வலத்துடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, சத்குருவிற்கு பாத பூஜையும், அனைத்து உன்னத குருமார்களுக்கு குரு பூஜையும் நடைபெற்றது. அதன்பின், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் உற்சாகமான இசை அர்ப்பணமும், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
#gurupurnima #sadhguru #sadhgurutamil