காலை வணக்கம் ❤️❤️❤️
870 Posts • 539K views
ஆர். சிவா
3K views 27 days ago
#இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும் பொங்கல் மாதிரி குழைவா பேசனும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசனும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும் இனிய நற்காலைவணக்கம் அன்பான நண்பர்களே 🙏❤️ #காலை வணக்கம் ❤️❤️❤️
61 likes
50 shares
ஆர். சிவா
607 views 3 days ago
உயர்ந்த தர்மம் பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன், சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே, நான் என் நண்பன் துரியோதனனுக்கு, செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக, துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர், என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார். இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான், கர்ணா, கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே நீ ஒரு தவறு செய்து விட்டாய். : செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் மற்றும் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதைக் காப்பாற்ற வேண்டும் என்று வருகையில், உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய தர்மத்தைக் காப்பாற்ற எண்ணி, உயர்ந்த தர்மத்தைக் கைவிட்டாய், அதனால் தான் அழிந்தாய். மற்ற உயிர்கள் அனைத்துக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே உயர்ந்த தர்மம்.. #காலை வணக்கம் ❤️❤️❤️
7 likes
21 shares