என்னவள்.... 😊
முதல் முதலாக
ஒரு முத்தம் கொடுத்த பொழுது,
அவள் சொன்னாள் #சீ அசிங்கம் என்று....
கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னாள்
எப்ப பார்த்தாலும் இது தானா என்று...
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத பொழுது அவள் கழுத்துக்குக் கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னாள்
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றாள்...
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகளுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள்
சொன்னாள்...
வயசு ஆயிருச்சு இன்னும் அதே நெனப்புதானா
என்றாள் அவள்...
கடைசியாக அவளை என் வீட்டு
[#முத்தத்தில்] முற்றத்தில்
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி
படுக்கையில் கிடந்தவளை முத்தமிட்டேன்,
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தாள்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்...
இறுதிவரை நேசியுங்கள் 💝💝
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல 💝💝
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்.
தோன்றிய பகிர்கிறேன் 😊😘
#life is short ##short #love #trending #kathal