✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம்
1K Posts • 11M views
#திங்ககிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ... #good morning #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு ஸ்பெஷல் 24* புண்ணியம் நிறைந்த புரட்டாசி_மாதம் !! 🌟 புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். 🌟 பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். 🌟 புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதத்தில் இருக்கும் சிறப்புகள் என்னென்ன? புரட்டாசி சனி : 🌟 புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். 🌟 புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும். 🌟 புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும். புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? 🌟 புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். 🌟 இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. 🌟 இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். 🌟 அதனால் தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். புரட்டாசி அமாவாசை : 🌟 மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம். 🌟 மஹாளய பட்சம், புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி : 🌟 மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். கோவிந்தா ஹரி கோவிந்தா 🙏
19 likes
28 shares