#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #🙏 ஓம் நமசிவாய பாகவதத்தை* *கேட்பதற்காக* *நைமிசாரண்யத்திற்கு* *பகவான் சிவன் வருதல்*🌹
கெளர பாகவதத்தை கேட்பதற்காக நைமிசாரண்யத்திற்கு பகவான் சிவன் வருதல்
🔆🔆🔆🔆🔆🔆
நவத்வீப-தாம-மஹாத்மியத்தின் பரிக்கிரமா காண்டத்தில் பகவான் நித்தியானந்தர் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமிக்கு கூறியது:
மத்திய த்வீபத்தின் தென்திசையில் கோமதி நதி உள்ளது. இந்த நதியின் கரையோரமாக நைமிசாரண்யம் அமைந்துள்ளது. கலியுகத்தின் ஆதிக்கத்திலிருந்து ஜீவன்களை பாதுகாக்க சௌனக ரிஷி தலைமையிலான பலரும் சூத கோஸ்வாமியின் திருவாயிலிருந்து கெளர பாகவதத்தை கேட்பதற்காக அங்கே கூடியிருந்தனர்.
கார்த்திகை (தாமோதர) மாதத்தின் போது எவரொருவர் இங்கு அமர்ந்து புராணங்களை படிக்கிறாரோ அவர் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு கௌரங்கருக்கு சேவை செய்வதன் மூலம் வ்ரஜ தாமத்தை சுலபமாக அடைந்து விடும் வாய்ப்பை பெறலாம்.
ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் கௌரங்கரின் புகழைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்து அதனைக் கேட்க வேண்டுமென்று பகவான் சிவன் விருப்பம் கொண்டார். தன்னுடைய வாகனமான காளையின் மீது அமர்ந்து கயிலாயத்திலிருந்து இந்த இடத்திற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் சென்று கௌர கதையை கேட்க தான் இன்னும் வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே பிரம்மாவுடைய வாகனமான அன்னப் பறவையில் சென்றால் விரைவாக சென்று சேரலாம் என்றெண்ணி அதனை உபயோகப் படுத்துவதற்காக அனுமதி கோரினார். மிக அற்புதமான கெளர லீலையை கேட்பதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தில் நைமிசாரண்யத்தில் வெகு விரைவாக அன்னப்பறவை வாகனத்தில் வந்து சேர்ந்தார். புராணங்களிலிருந்து பகவான் கௌரங்கரைப் பற்றியும் அவருடைய சஹாக்களைப் பற்றிய புகழை பகவான் சிவன் கேட்டார்.
பகவான் சிவனை பின்பற்றும் அனைவரும், காசி நகர வாசிகளும், கௌரங்கரின் புனித நாமத்தை பஞ்சானனனை (ஐந்து முகம் கொண்ட பகவான் சிவன்) சுற்றியவாரு ஜபம் செய்து கொண்டும் நடனமாடிக் கொண்டும், பெரும் ஆனந்தத்தில் பூக்களை வீசிக் கொண்டும்
இருந்தனர்.நித்தியானந்த பிரபுவிடமிருந்து ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி இந்த வர்ணனையை கேட்டபோது பெரும் ஆனந்தத்தில் தாமத்தின்(புனித ஸ்தானத்தின்) சுவையை அனுபவித்த அவர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தரையில் விழுந்து உருண்டார்.
பகவான் நித்தியானந்தருடன் எல்லா பக்தர்களும் நைமிசாரண்யத்தில் தங்கினார். ஸ்ரீ புஷ்கரத்தை தரிசனம் செய்வதற்காக மறுநாள் அனைவரும் புறப்பட்டனர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁