#நல்லவர்கள் வாழ்வது அரிது
இன்றும் இந்நாட்டில் தன்னலமற்ற சேவை புரியும் சில மருத்துவர்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்கிறார் டாக்டர் கோபி மற்றும் அவரது மனைவி டாக்டர் ஹேமப்பிரியா. மதுரையை மையமாகக் கொண்டு, இந்த தம்பதிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர் Little Moppet Heart Foundation. இதன் மூலம், பிறவி இதயநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு முழுமையான இலவச இருதய அறுவை சிகிச்சை அளிக்கிறார்கள்.
சேலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோபி, அரசாங்க உதவியுடன் மருத்துவம் முடித்தவர். தனது கல்லூரிப் படிப்பில் ஹேமாவை சந்தித்துப் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து நல்ல வருமானம் சம்பாதித்தாலும், சதீஷ்கர் மாநிலத்தில் ஒரு ஆறு வயது சிறுமியைச் சந்தித்ததும் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. அந்தச் சிறுமி, பிறந்த ஆறாம் மாதத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற முடியாமல் இறக்கப்போகும் நிலையைப் பார்த்தார் கோபி.
இந்த சம்பவம் கோபிக்கும் ஹேமாவுக்கும் பெரிய உள்வெளிப்பாடு அளித்தது. “இதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்” என இருவரும் முடிவு செய்தனர். இந்த நோயால் ஆண்டு தோறும் பல ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்த சிக்கலை சமாளிக்க, அவர்கள் Little Moppet Heart Foundation அமைத்தனர்.
மதுரையைச் சேவையின் மையமாக தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், இதயம் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும், வசதிகளும் இல்லாத கிராமப்புற மக்கள். மருத்துவ முகாம்கள் மூலம், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏராளமான குழந்தைகள் கண்டறியப்பட்டனர். தேவதாஸ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்பட்டனர்.
"எல்லாமே இலவசமாக செய்ய, குடும்ப செலவுகள் எப்படி?" என்ற கேள்விக்கு ஹேமா பதிலளிக்கிறார்: பணமுள்ளவர்களுக்கு மருத்துவ சேவை அளித்து ஃபீஸ் வாங்குகிறார் கோபி. ஹேமா ஆன்லைனில் குழந்தைகளுக்கான பேபி ஃபுட் தயாரித்து விற்பனை செய்கிறார். இது அவர்களது குடும்பத்துக்கு போதுமானது.
“நாம் பெரிய நகரங்களில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இந்த சேவையில் கிடைக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது,” என்கிறார் ஹேமா. இந்த சேவையின் பின்னணியில் இருந்தது அந்தச் சிறுமியின் துயரமான அனுபவம். அவளது புகைப்படம் கிடைக்கவில்லை என்றாலும், மனதில் தேவதையாக அந்தச் சிறுமியை நினைவுகூர்கிறார்கள்.
இந்த நன்னெஞ்சுடைய தம்பதிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
#motivation #doctors