#🧾வெளியானது அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை! #📢 ஜூலை 4 முக்கிய தகவல்🤗 #🥲போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 சிகரெட்டால் சூடு.. மூளையில் ரத்தக் கசிவு.. சித்ரவதையால் துடித்த அஜித்குமார் - பிரேதப் பரிசோதனை முழு அறிக்கை!
உயிரிழந்த அஜித்குமார்
மதுரை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளது. அஜித்குமார் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும் இருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதோடு, அவரது மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம்கோடில் காவலாளியாக இருந்தவர் அஜித்குமார் (27). நகை திருட்டு புகாரின் அடிப்படையில்,அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார்,அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், விசாரணையின் பாதியிலேயே அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது ஒருபுறம் இருக்க, அஜித்குமார் உடல், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அனுபவித்த சித்ரவதைகள் தெரிய வந்திருக்கின்றன.
50 இடங்களில் காயங்கள்:
அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் சுமார் 50 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான காயங்கள் ரத்தக் கட்டுகளாக உள்ளன. மேலும், இந்த காயங்கள் அனைத்தும் கடுமையான தாக்கங்களை கொண்ட காயங்களாகவும், இவற்றில் பல காயங்கள், மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதன் அடிப்படையிலும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயங்களின் தன்மை பல்வேறு இடங்களில் மாறுபடுவதால், பலர் சேர்ந்து பல ஆயுதங்களால் அஜித் குமாரை தாக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தலையில் கம்பி கொண்டு தாக்கியதால், மூளையில் ரத்த கசிவும் ஏற்பட்டுள்ளது. இதுதான், அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிகரெட்டால் சூடு:
தொடர்ந்து, வயிற்றுக்கு நடுவே கம்பியால் குத்தப்பட்ட தடயமும் உள்ளது. இதுதவிர, அஜித்குமாரின் உடலில் பல்வேறு இடங்களில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட தீக்காயங்களும் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம், பல நபர்களால் நடத்தப்பட்ட தீவிர சித்ரவதை கொடுமையாகும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் நாகரிகமான மனித சமூகத்தில், இதுபோன்ற கொடூரமான சித்ரவதை என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த செயலில் ஈடுபட்ட காவலர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.