Failed to fetch language order
உலக அதிசயம் கடல் கன்னி மைசூர் அருகே ரங்கபட்டினத்தில்
9 Posts • 4K views
மிக உயரமான யானை 🤔 *உலகிலேயே மிக உயரமான யானை என்று பெயர்* எடுத்த யானை... நமது தமிழ் நாட்டில் உள்ள *திருச்சியில் இருந்து வந்தது "செங்கலூர் ரெங்கநாதன்"* என்ற பெயர் கேரள மக்களின் மத்தியில் இன்றளவும் பிரபலம். 1907 முதல் கேரளத்தில் நடக்கும் திருவிழாக்களில் கம்பீரமாக உயர்ந்து நின்ற யானை தான் *"செங்கலூர் ரெங்கநாதன்"11'4 (345 cm) அடி உயரம் கொண்ட ரெங்கநாதன் 1906 முதல் 1914 வரை, கேரள மாநிலத்தின் ஆராட்டுபுழா பூரத்தில்* தவறாமல் இடம் பெறும். வரிசையில் நிற்கும் மற்ற யானைகளை விட உயரமாக காட்சி தரும். முதலில் ரெங்கநாதன் இருந்த இடம் *திருச்சி யில் உள்ள "இரங்கநாதர் கோயிலில்"* தான். அதனால் தான் ரெங்கநாதன் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி நதியில் இருந்து நீர் எடுத்து வருவது தான் அதன் வேலை, அதற்காக இரு புறமும் பாத்திரங்கள் கட்டப்பட்டு இருக்கும். அபிசேகம் உட்பட அனைத்து நீர் தேவைக்கும் ரெங்கநாதன் தான் காவிரியில் இருந்து எடுத்து வரும். நாட்கள் செல்ல யானையின் வளர்ச்சி சாதாரண அளவுக்கு மேல் சென்றது, இதனால் கோவில் நுழைவுவாயிலில் நுழைந்து வருவது கடினம் ஆனது, அதிகமான காயங்களும் ஏற்பட்டது. அந்த காலத்தில் யானையை திருவிழாக்களில் பயன்படுத்த தமிழகத்தில் தடை இருந்த நேரம், அதனால் ரெங்கநாதனை பராமரிப்பது மிகவும் கடினம் ஆகியது. இறுதியில் யானையை விற்க முடிவு செய்து "இந்து நாளிதழில்" விளம்பரம் செய்தார்கள். இதனை கவனித்த *கேரளத்தைச் சேர்ந்த "செங்கலூர் பரமேசுவரன் நம்பூதிரி" யானை வாங்க முடிவு செய்தார். 1905ல், ரூபாய் 1500 கட்டி திருச்சூரில் உள்ள செங்கலூர்மன்னா* என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றபின் நல்ல முறையில் கவனித்து, 1906ல் நடைபெற்ற ஆராட்டுபுழா பூரத்தில் கலந்து கொள்ள செய்தனர். அதுவரை யாரும் பார்க்காத உயரம்,அங்கு நின்ற மற்ற யானைகளை குட்டிகள் போல ஆக்கிவிட்டான் ரெங்கநாதன். 1906-1914 வரை அனைத்து பூரத்தில் கம்பீரமாக நின்றான். அப்படி 1914 ஆண்டு நடந்த பூரம் துயரமான ஒன்றாக அமைந்தது, அருகில் நின்ற "கோவிந்தன்" என்ற யானை தாக்கியதில் ரெங்கநாதன் க்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. மூன்று வருடங்கள் நீடித்த சிகிச்சை பலனின்றி *1917ம் ஆண்டு உயிரிழந்தான் "ரெங்கநாதன்"* இப்படி உயரமான யானையை இழக்க விரும்பாத பிரிட்டிசு அரசு, ரெங்கநாதனின் "எலும்புக்கூடு" எடுத்து இலண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்தனர். அதற்காக ரெங்கநாதன் இறந்ததும் அதன் உடலில் இரசாயனம் தடவி புதைத்தனர். ஆறு மாத காலம் சென்றதும் எலும்புகள் மட்டும் எடுத்து அதனை பத படுத்தினர். திருச்சூரில் உள்ள அருங்காட்சியகத்தின் முயற்சியில் இலண்டன் எடுத்து செல்ல பட இருந்த ரெங்கநாதனின் எலும்புகளை, திருச்சூரில் உள்ள அருங்காட்சியகத்திலே வைக்க அனுமதி வழங்கப்பட்டது... அன்று முதல் இன்று வரை 100 ஆண்டுகள் கடந்தும் திருச்சூர் அருங்காட்சியகத்தில் கம்பீரமாக நிற்கின்றது "ரெங்கநாதன்". 1900களில் புகைப்படம் என்பது அரிதான ஒன்றாகும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #உலக அதிசயம் கடல் கன்னி மைசூர் அருகே ரங்கபட்டினத்தில் #சாதனை #👶குழந்தைகள் உலகம் #🤩இன்றைய காமெடி🤣
9 likes
7 shares