கள்ளச்சாராய குடியின் எதிரொலி;குவைத் விமான நிலைய ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது:
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் சில நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) இது தொடர்பான அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளதாக தினசரி செய்தித்தாள் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்கிய உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த சோதனை பொருந்தும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் மது, போதைப்பொருள் மற்றும் பிற வகையான போதைப்பொருட்களை உட்கொண்டுள்ளனரா என்பது தொடர்பான விரிவான சோதனையும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நடத்தப்படும். இந்த மாதம் முதல் இந்த மருத்துவ பரிசோதனை நடைமுறைக்கு கொண்டுவரப்படும். போக்குவரத்து துறையால் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களையோ செப்டம்பர் 4 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு DGCA நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், சில நிறுவனங்கள் DGCA வழங்கிய தொழில்நுட்ப உரிமங்களை வைத்திருக்கும் தங்கள் ஊழியர்களை திங்கள்கிழமை முதல் பரிசோதனைகளுக்கு உட்ப்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளன, மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களில் யாராவது தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள மறுத்தால், முடிவு நேர்மறையாகக்(Positive) கருதப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
. BREAKING_NEWS
👇Follow_chennal👇
. 24/7 Hot News
https://whatsapp.com/channel/0029Vawh4kjGk1FsCyYWzP45
#sivakarthikeyan sk-2 remix -தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வறுத்தக் கூலி தரும்
👇
https://t.me/Naaddu