#🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️மார்கழி மாத ஜோதிடம் மாதம் 23ம் நாள், 07-ஜனவரி-26, பஞ்சமி திதி, கூடிய புதன்கிழமை நாளில்
மாதேவி வாராஹி அன்னையை வாழ்வில் சுகபோகம், கீர்த்தி, செல்வாக்கு, நோயற்ற வாழ்வு, அருளிட
மாசில்லா பக்தி சிந்தனையுடன் போற்றி, பாடி, பூஜித்து வணங்கிடுவோம் வாரீர்
வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்., வாராஹி சரணம், வார்த்தாளி சரணம்,
ஓம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம், தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம்
நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே, பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே
மஹா வாராஹியே சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம். தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம்
மஹா மேருவில் வீற்றிருக்கும் மஹா வாராஹி தாயே, திருமாலின் அவதார அம்சமாய் வராஹ முகம் கொண்டவளே
சிம்ஹா ரூடா வாராஹியே, மகிஷா ரூடா வாராஹியே, அஷ்வா ரூடா வாராஹியே உந்தன் மலரடியே சரணம் சரணம்
செவ்வரளி மலர் அர்ச்சனையில் அள்ளிவளம் பொழிந்தருள்வாள், செண்பக மலர் பூஜை ஏற்று கண் மலர்ந்தே காத்தருள்வாள், ஞாலம் போற்றும் கீர்த்தி செல்வாக்கும் அருள்வாள் வாராஹி தாயே உந்தன் மலரடி சரணம் சரணம்
தேங்காயில் நெய்தீபம் ஏற்ற தீங்கினை தகர்த்தெரிவாள், வாராஹி மாலை பாடிட மகிழ்ந்து வாழ்வில் வெற்றிகளை தந்தருள்வாள் உயர்வுகளை தந்து அவள் சுகபோக வாழ்வளிப்பாள், வாராஹி தாயே உந்தன் மலரடி சரணம் சரணம்
தீராத கடன் தொல்லை தீர்த்திடுவாள், மாறாத பிணிகள் யாவும் மறைந்தோட செய்வாள் கரும வினைகள் யாவும் களைந்திடுவாள், வாழ்வை வளமை ஆக்கிடுவாள், வாராஹி தாயே உந்தன் மலரடி சரணம் சரணம் அம்மா
ஸர்வ ஜனனீ போற்றி, ஸர்வானந்தமயி போற்றி, ஸர்வ காரணி போற்றி, ஸர்வரோக நாசினி போற்றி எங்கும் எதிலும் நிறைந்தாய் போற்றி, சர்வமும் எனக்கு நீயே போற்றி, எங்களை காப்பாய் வாராஹி தாயே போற்றி போற்றி
🌹🌹🌹