நாம் அனைவருமே வெற்றி, மகிழ்ச்சி ஆகிய இரண்டு விஷயங்களைத்தான் விரும்புகிறோம்.
நாம் அனைவரும்
ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
வெற்றி குறித்த உங்களது என்னுடைய கருத்திலிருந்து வேறுபட்டிருக்கக்கூடும்.
ஆனால் நாம் வெற்றிகரமாகவோ,
மகிழ்ச்சியாகவோ இருக்க விரும்பினால்,
நாம் அனைவரும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் உள்ளது.
நீங்கள் ஒரு வழக்கறிஞராக
இருந்தாலும் சரி, அல்லது மருத்துவராக, தொழிலதிபராக, விற்பனையாளராக, பெற்றோராக , குடும்பத் தலைவியாக, அல்லது
வேறு யாராக இருந்தாலும் சரி,
அந்த முக்கியமான அம்சம் அனைவருக்கும்
பொதுவான ஒன்றுதான்.
அனைத்து
வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான
ஒரு பொதுக் காரணி
பிற மனிதர்கள்தான்.....
மற்றவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால்,
எந்தவொரு வியாபாரத்திலும், வேலையிலும் வெற்றிக்கான பாதையில் நீங்கள் 85% சதவீத தூரம் பயணித்திருப்பீர்கள்.
தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பாதையில் 99% சதவீத தூரம் பயணித்திருப்பீர்கள் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
உங்கள் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான திறவுகோல்? ......
ஞாபகங்களை கையாளும்.....
வெறுமனே மற்றவர்களோடு ஒத்துப்போவது பலனளிப்பதில்லை.
வெறுமனே மற்றவர்களோடு எவ்வாறு ஒத்துப்போவது என்பதைக் கற்றுக்கொள்வது வெற்றி அல்லது மகிழ்ச்சிக்கான உத்திரவாதத்தை அளிக்காது.
பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்களோடு
ஒத்துப் போவதற்கான இரண்டு வழிகளை மக்கள் கையாள்கின்றனர்.
பயந்த சுபாவம் கொண்ட ,
மிதியடி போல் நடந்து கொள்கின்ற வகையைச் சேர்ந்த மக்கள் வெறுமனே மற்றவர்கள் தங்கள்மீது ஏறிச் செல்லும்படி விட்டு விடுகின்றனர்.
இது முதலாவது வழிமுறை.
அதே சமயத்தில்,
ஓர் சர்வாதிகார மனப்பான்மையக் கொண்ட மக்கள்,
தன்னை எதிர்ப்பவர்களை
அடக்கி ஒடுக்கி அவர்களை மிதியடி போல் நடத்தி,
அவர்கள் மீது ஏறிச் செல்கின்றனர்.
இது இரண்டாவது வழிமுறை.
மக்களுடன் எவ்வாறு ஒத்துப் போவது என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்வதற்கு நமக்கு எந்தப் புத்தகமும் தேவையில்லை.
ஏனெனில் , நாம் ஒவ்வொருவரும் நமக்கென்று ஒரு வழியை ஏற்கனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
மற்றவர்களை கையாள்வதற்கான
ஒரு வழியைக் கண்டுபிடிப்பதுதான் இங்கு முக்கியம்.
அது நமக்குத் தனிப்பட்டத் திருப்தியைக் கொடுக்கும்.
அதே சமயத்தில், நாம் எதிர்கொண்டுள்ள நபர்களின் தன்மானத்திற்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது.
மனித உறவுகள் என்பது,
மற்றவர்களுடைய தன்மானமும்,
நம்முடைய தன்மானமும் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் விதத்தில் மக்களைக் கையாள்கின்ற அறிவியலாகும்.
மக்களுடன் ஒத்துப் போவதில் உண்மையான வெற்றியை அல்லது உண்மையான திருப்தியைக் கொண்டு வரக்கூடிய ஒரே வழிமுறை இதுதான். 😊😊😊
#உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு