Failed to fetch language order
உற்சாக பானம்
7K Posts • 1M views
முடிவில் உங்களது சாதனைகளையும் வேதனைகளையும் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்காதீர்கள் பலருக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே சாதனை ஏதேனும் வேலைக்காக காத்துக் கிடக்கும் தொழிலாளர்கள் ஏராளம் அவர்களுக்கு தினசரி ஒரு வேலை கிடைப்பதே சாதனை வாழ்க்கையில் சாதனை செய்யாத மனிதர்களே இல்லை சாதனை புரிவதற்கு முன், சவாலாகத் தோன்றியவை வெற்றி பெற்ற பிறகு சாதாரணமான ஒன்றாகிவிடுவதே இயற்கை மற்றவர் சாதனைகளையும் நம்முடைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மிஞ்சுவது வேதனையே சாதனைகள் உலகத்திற்காக அல்ல நமது மகிழ்ச்சிக்காக நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள உங்களது வாழ்க்கையை மேம்படுத்த உங்களது தொடர் முயற்சியே அத்தியாவசியம் *வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்* 🟢🔴 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
8 likes
8 shares
நீயே பலவீனமாக்காதே... உன்னுள் உள்ள உயிர் ஆற்றலை இயக்கு... உன்னுள் புதைந்திருக்கும் திறமையைச் செயலாக்கு... இது வெல்பவர்களின் உலகம்... இது வெல்பவர்களுக்கான உலகம்... இங்கே தோற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை.இங்கே புலம்புவர்களை யாரும் மதிப்பதில்லை.இங்கே அழுபவர்களை ஆறுதல்படுத்துவதில்லை... உங்களுக்கு உதவிட எவரும் வரப்போவதில்லை... மனிதர்களை நம்பி நேரத்தை வீணாக்காதே... நீயே விழுந்தாய்... நீயே எழுந்திரு... நீயே தோற்றாய்... நீயே வெல்... நீயே அவமானப்பட்டாய்... நீயே மரியாதை அடை...! இங்கே வாழ்க்கையை வாழக் சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதுமில்லை... அவர்கள் வாழ்வதற்கே வழி தேடி அலைகிறார்கள்... நீ திடம் கொள்... தீர்க்கமாய் இரு... உனக்குள் இருக்கும் உன்னையே அறிந்து தெளிந்து செயலாக்கு... "வாழ்க்கை" உன் வசம்..! ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.... முயற்யில்லாத ஆசையாலும் பயனில்லை...!!! #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
12 likes
10 shares
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (01.11.2025) .................................................................*வயது என்பது...!* ....................................... வயது என்பது மனதைப் பொறுத்தது. நாம் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலே போதும். வயது முதிர்ந்தவர்கள் 23 - வயது இளைஞனைப் போல இன்னும் உற்சாகத்துடன் பல சாதனைகளை செய்து கொண்டு இருப்பதை நாம் காண்கின்றோம்... நமக்கு பிடித்தமானவற்றை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாராலும் நம்மிடமிருந்து பறித்து விட முடியாது. கனவுகளை அடைவதற்கு தேவை முயற்சி மட்டுமே...! நாம் விரும்பும் வாழ்க்கையையும், வானத்தையும் வசப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தருவது மன உறுதி தான்... நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்து விட்டு மறைகிறோமா...? அல்லது, பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச் செல்கிறோமா...? என்பதைப் பொறுத்து தான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? என்பதை முடிவு செய்கிறது... நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால், மக்கள் தொகையில் ஒரு புள்ளி விவரமாகவே இருந்து விட்டு மறைகிறோம்... சிலர் தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதிய பாதைகளை அமைத்து, புதிய பயணங்களை மேற்கொண்டு வெற்றி பெறுகிறார்கள்... எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. உலகம் மாற மாற சாதனையாளர்களின் வயது வரம்பும் மாறிக் கொண்டே வருகிறது... ஒரு காலத்தில், 50 வயதில் சாதித்த நபர்கள் இருக்க, தற்போது 15 வயதிலேயே பல புதிய சாதனைகளை எளிதாக சிலர் செய்து விடுகிறார்கள்... மிக இளம் வயதிலேயே, ஒரு நிறுவனத்தின் தலைவராக, அல்லது உலகைச் சுற்றிய நபராக, அல்லது மென்பொருள் கண்டுபிடிப்பாளராக எனப் பல விதங்களில் சாதனையாளர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்... ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்... பில்கேட்ஸ் தனது 30 வயதிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார், ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்... ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை... ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மையாகிறார்... ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல துன்பங்களை அனுபவித்து 50 வது வயதில் செல்வந்தராகிறார்... எடுத்துக்காட்டாக., சர்ச்சில் தனது 82 வது வயதில் ''History of English Speaking People'' என்ற புத்தகத்தை எழுதினார்... பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் ''Pertouched Pepler'' என்ற நாவலை எழுதினார்... டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் ''I Cannot Be Silent'' என்றார்... வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதைத் தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்... *ஆம் நண்பர்களே...!* 🟡 வயதாகி விட்டதே இனி நம்மால் எதுவும் சாதிக்க முடியாதா எனக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கென இதுவரை எந்தக் குறிக்கோள்களும் இல்லாவிட்டால் பரவாயில்லை...! 🔴 இனி இருக்கும் நாட்களில் பயன்பாடுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனத் தீர்மானியுங்கள். வயது எத்தனை ஆனாலும், மனதின் தன்னம்பிக்கையை உடைக்க முடியாது...!! 🟠 இனி வருகின்ற காலங்களில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம். ஒருமுறை தவறினாலும், தொடர்ந்து நாம் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக ஒருநாள் வெற்றி பெறும்...!!! ⚫அதற்கான மன உறுதியோடு, நாம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்வோம். எந்த சாதனைகளுக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும், முதுமையும் உடலுக்குத் தானே தவிர, மனதுக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
13 likes
14 shares