🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
9.7K views
1 days ago
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (24.01.2026)* ………………………………………………............................ *"காலமும்...! நேரமும்...!!"* ........................................................ "காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே...! வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள்... அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்... காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது... "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது... உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் தன்நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள். உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்...!* 🔴 *எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்...!!* ⚫ *நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்...!!!* 🔘 _*"நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம். மறுநாள் வேலைக்கு முதல்நாளே திட்டம் போடுங்கள், எந்த செயலையும் செய்ய ஒருமுறைக்கு, இருமுறை ஆலோசித்து முடிவெடுங்கள். எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் உறுதியாய் இருங்கள். இனி என்ன?, நாளை உங்களுடையது தான்...!"*_ *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம் #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪