🧡ஒரு நாள் சூரி நாகம்மா,பகவானை வணங்கியப் போது நடுங்கிய குரலில் பகவானே...!நான் முக்தியடைய வழிக் காட்ட வேண்டும்,
என்றார்.
🧡கருணையே உருவான பகவான், திரும்பி,அவரை நோக்கி தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார்.
🧡பகவானின் இச்செயல் விசித்திரமானதாக இருந்தது.
🧡ஏனென்றால் இத்தகைய கேள்விக்கு
எதிர்க்கேள்வியாக,யார் முக்தியை விரும்புகிறார்❓
🧡யார் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்❓
🧡என்பதாகவோ,அல்லது மௌனமாகவேத்தான் இருக்கும் அவரது பதில்.
🧡இதுப்பற்றி நாகம்மா எச்சம்மாளிடம் கூறியப் போது,
நீ எத்தனை பாக்கியசாலி!
🧡பகவான் விரைவிலேயே உனக்கு அபயம் கொடுத்துள்ளார்,என்று எச்சம்மாள் கூறினார்.
🧡அவர் கூறியதன் பொருளென்ன❓
என்று நாகம்மா வினவியப் போது
🧡இப்போதிலிருந்து உனக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை.
🧡பகவான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டார்.
🧡உனக்கு இனி பயம் இல்லை.
அதுவே தான் உனக்கு முக்தி என்று
விளக்கிக் கூறினார்.
🧡பகவான் தன் முழு கவனத்தையும் நாகம்மா மீது செலுத்தினார்.
🧡ஒரு நல்ல மாணவியைப் போன்று
அவரும்,பகவானுடைய உபதேசமான
ஆத்ம விசாரத்தில் மூழ்கினார்.
🧡அவ்வப்போது அவரால் ஆழ்ந்த தியானத்தில் இருக்க முடிந்தது, என்றாலும்,இடையிடையே அவரை
எண்ணங்களும் திசை திருப்பின.
🧡குறிப்பாக பகவான் முன் அமர்ந்து கண்களை மூடி தியானிக்கும் போது,இந்த எண்ணங்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும்.
🧡நான் கண்களை திறந்துப் பார்த்தால்
பகவானுடைய கவனம் என் மீது பதிந்திருக்கும்,என்று கூறியதோடு எனது எண்ணங்களையெல்லாம் பகவான் விரட்டினார்,என்று தெரிவித்தார்.
🧡நாகம்மா இயற்கையாகவே சிறந்த கவியாகவும்,எழுத்தாளராகவும் இருந்தார்.
🧡பகவான் தடைகள் ஏதும் பிறப்பிக்காதப் போதும்,அந்த நாட்களில்,பெண்கள் பகவானை அணுகி சகஜமாக பேசத் தயங்குவார்கள்.
🧡கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில்,அது மேலும் கடினமாக இருக்கும்.
🧡அத்தகைய தினங்களில்,தியானம் பற்றித் தனக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி, நாகம்மா,பகவானுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பி வைப்பார்.
🧡அந்த சந்தேகங்களையெல்லாம் நீங்கள் எதற்காக கவனிக்கிறீர்கள்❓
அவ்வாறு செய்வாதால் நீங்களே அவற்றிற்க்கு சக்தி அளிக்கிறீர்கள்,பதிலாக இதயத்தில் ஆழ்ந்து மூழ்குங்கள்,என்று பகவான் அவரை கடிந்துக் கொள்வார்.
🧡ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து,என்னுடைய அக நோக்கை வலுப்படுத்தியப் போது,
சுற்றி வளைக்காமல்,நேரடியாக அதை நிலைப்படுத்தினார்.
🧡பகவான்,அது காய்ந்து போன நிலத்தில் தண்ணீர் பாய்ந்து, பூக்களை மலர்விப்பது போன்று இருந்தது.
🧡என்னுடைய ஆன்மீக வாழ்கை அத்தகையது என்று கவிதை நடையில் சூரி நாகம்மா கூறுவார். 🚩🕉🪷🙏🏻
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்