ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
860 views
1 months ago
சில ஆண்டுகளுக்கு முன்பு, சந்தனக்குமாரின் உறவினரான ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரைச் சேர்ந்த காளிமுத்து (29), வேலைக்காக திருப்பூர் வந்தார். உறவினர் என்பதால், சந்தனக்குமார் அவரை தன் வீட்டில் தங்க அனுமதித்தார். இதன் காரணமாக, காளிமுத்துவுக்கும் ஜெயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விவரத்தை அறிந்த சந்தனக்குமார், இருவரையும் கண்டித்திருந்தார். ஆனால், அவர்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலால், சந்தனக்குமார் நான்கு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும், காளிமுத்து அந்த வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததுடன், இருவரின் உறவும் தொடர்ந்ததாக தெரிகிறது. இந்த கள்ளக்காதல் குறித்து காளிமுத்துவின் குடும்பத்தினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, ஜெயலட்சுமி மற்றும் காளிமுத்து நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் வந்தனர். பின்னர் அரங்கநாதபுரம் அருகிலுள்ள ரெயில் தண்டவாளத்தில், கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற ரெயிலின் முன் பாய்ந்து உயிரிழந்தனர். இருவரின் உடலும் பல துண்டுகளாக சிதைந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து, பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢

More like this