ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
686 views • 1 months ago
தமிழகம் முழுவதும் மழை: இந்த புயல் வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 330 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயலின் தாக்கம் காரணமாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று இரவு வரை மழைக்கான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை: மேலும், தலைநகர் சென்னைக்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் சென்னையில் மழையின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரிப்பு. மேலும், இரவு 8 மணிக்கு நீர் திறப்பை 3000 கன அடியாக அதிகரிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பூண்டி ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்: திட்வா புயல் நாளைய தமிழக கடலோர மாவட்டங்களில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும் கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மத்தியம் முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் புயல் வலுவிழக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ம் தேதிக்குப்பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢
6 likes
17 shares