ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
699 views
1 months ago
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி இப்ராகிம்.. இவரது மனைவி பெயர் கோகிலா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன.. இது காதல் திருமணமாகும்.. தற்போது இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். வேலூர் காட்பாடி வாடகை வீடு இவர்கள் காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.. இதே காட்பாடியில் சுனில் என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார்.. இவர் சென்னையில் ஒரு செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கோகிலாவுக்கும், சுனிலுக்கும் நட்பு ஏற்பட்டு இதுவே தகாத உறவாக வளர்ந்துள்ளது.. இந்த விஷயம் இப்ராஹிமுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட கோகிலா தயாராக இல்லை.. எனவே, கோகிலாவை பிரிந்து, குழந்தைகளின் நன்மை கருதி, அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு மன்னார்குடிக்கே சென்று விட்டார். கோகிலாவின் ஆண் நண்பர்கள் இதனால் கோகிலா, சுனிலின் கள்ளக்காதல் வேகமாக வளர்ந்தது.. இதனிடையே, கோகிலாவுக்கு, மணி, சதீஷ் என்ற 2 ஆண் நண்பர்கள் உண்டு.. இவர்கள் 2 பேருமே கோகிலாவுடன் சிறுவயது முதலே பழகி வருபவர்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி கோகிலாவை சந்தித்து செல்வது வழக்கமாம். இவர்களுடனும் கோகிலா உறவு வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் சுனில் கோகிலாவை கண்டித்துள்ளார்.. அடிக்கடி மது அருந்திவிட்டு, கோகிலாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்த கோகிலா, சுனில் சித்ரவதை செய்வதாக, தன்னுடைய நண்பர்கள் மணி, சதீஷிடம் சொல்லி புலம்பி உள்ளார்.. கோகிலாவுக்கு கள்ளக்காதலன் டார்ச்சர் உடனே நண்பர்கள் 2 பேரும் சுனிலிடம், கோகிலாவிடம் இனிமேல் தகராறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனாலும், சுனில் 2020ம் ஆண்டு மே 8ம் தேதி மதுபோதையில் சென்று கோகிலாவிடம் தகராறு செய்துள்ளார்.. "உனக்கு குடும்பம் இல்லை, என்னுடன் மட்டும்தான் பழக வேண்டும்.. நான் சொல்வதைதான் கேட்க வேண்டும், வேறு யாருடனும் பழககூடாது " என்று சொல்லி அடித்து உதைத்தாராம். இதே தகராறு மறுநாளும் நடந்துள்ளது.. இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன கோகிலா.. தன்னை நிம்மதியாக வாழ விடாத சுனிலை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார் கோகிலா.. நைசாக பேசிய கோகிலா உடனே நண்பர்கள் மணி, சதீஷ், தன்னுடைய அப்பா முத்து ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்து, விஷயத்தை சொன்னார்.. அதற்கு 3 பேருமே ஒப்புக்கொண்டர். பிறகு சுனிலுக்கு போன் செய்து, நைசாக பேசி வீட்டுக்கு கோகிலா வரவழைத்தார். வீட்டுக்கு வந்த சுனிலை, கோகிலாவின் அப்பா முத்து, மணி, சதீஷ் என 3 பேரும் சேர்ந்து தலையில் கத்தியால் வெட்டினார்கள்.. இரும்பு கம்பி, கட்டையால் தாக்கினார்கள்.. இதில் ரத்த வெள்ளத்திலேயே சுனில் இறந்துவிட்டார்,.. பிறகு சுனில் தலையை சிதைத்து, மூளையை மட்டும் வெளியே எடுத்து அருகிலுள்ள கிணற்றில் வீசினார்கள்.. சுனிலின் சடலத்தை அங்குள்ள கீரை தோட்டத்தில் வீசிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கீரை தோட்டத்தில் மூளை இல்லாத உடல் வேலூர் முழுக்க இந்த கொலை சம்பவம் அன்று நடுநடுங்க வைத்துவிட்டது.. பிறகு, கொலையாளிகள் 4 பேரையுமே போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தலைமையில் நடந்து வந்தது.. இதில் கடந்த வருடம் கோகிலாவின் அப்பா முத்து இறந்துவிட்டார். இந்த வழக்கின் விசாரணை முழுவதுமாக முடிந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. அதன்படி, கோகிலா, மணிகண்டன் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.. வேலூரையே உறைய வைத்த கொலையின் இந்த தீர்ப்பானது, பலரது கவனத்தை பெற்று வருகிறது #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔