#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 கருப்பு கயிறு கட்டுபவரா ... உங்களுக்கே தெரியாத உண்மை, என்ன என்று தெரிந்து கொள்வோம்* ...
தற்காலத்திய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது புதிய பேஷனாகி வருகிறது. வெறும் கருப்பு கயிறு மட்டுமல்ல, அதனுடன் கிறிஸ்டைன், யானை, இதயம், முத்து போன்ற சிறிய லாக்கெட்டுகளையும் சேர்த்து அணிவதால், இது ஒரு ஸ்டைலிஷ் அணிகலனாக மாறியுள்ளது. ஆனால், இந்த பழக்கம் எப்போதும் புதியது அல்ல; இது நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.
பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது திருஷ்டிக்கான ரீதியில் செய்கிறார்கள். திருஷ்டியைத் தவிர்க்கும் பழக்கம், சுத்தி போடுவது போன்ற மரபு முறைகளை போலவே, முன்னோர்கள் கடைபிடித்திருந்தனர். இதில் ஆண்கள் பொதுவாக வலது காலில், பெண்கள் இடது காலில் கருப்பு கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இதற்கான ஆன்மிக காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன.
பாரம்பரிய நம்பிக்கைகள்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவதால் சனி தோஷம் நீங்கும், ராகு-கேது பாதிப்புகள் வராது என்று கூறப்படுகிறது. முன்பு, வீட்டில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையிலிருந்து வந்தால் அல்லது விபத்துகள் ஏற்பட்டால், பாட்டிகள் காலில் கருப்பு கயிறைக் கட்டி அவர்களை காக்க முனைந்திருப்பார்கள். குறிப்பாக, யானையின் முடி கொண்டு மோதிரம் போல் வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்து கைகளில் அணிவிப்பார்கள். இதன் நோக்கம் கண் திருஷ்டியைத் தவிர்க்கும் என்பதாகும். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமையான பழமொழி இதனை ஒட்டி வருகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் பார்வை சக்தி அதிகம் கொண்டதாகும். இதனால் கண் படாமல் இருக்க குழந்தைகளாக இருந்தால், கன்னத்தில் கருப்பு மை வைத்து புள்ளி வைப்பதும், காலில் கருப்பு கயிறு கட்டுவதும் பின்பற்றப்படுகிறது. இடுப்பில் அணியக்கூடிய அரைஞாண் கயிறும் கண் திருஷ்டியை நீங்கவும், நோய் நொடி இல்லாமல் இருக்கவும் பயன்படுகிறது.
கருப்பு கயிறு உடலில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கதிர்களை உடலுக்கு உறிஞ்சும் தன்மை அதற்கு உண்டு. இதன் மூலம் உடல்நலக்கோடு, மனநிலை சீராகவும், எண்ணங்கள் அமைதியாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கணுக்கால் பகுதியில் கருப்பு கயிறு கட்டினால் நாடியின் இயக்கமும், மனச்செயல்பாடுகளும் சீராகும் என்பது நம்பிக்கை.
ஜோதிடர்களின் கருத்துப்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவது நிதி நிலையை பலப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களைத் துறவார். எனவே, கருப்பு கயிறு கட்டும் முன் சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறை ஒன்பது முடிச்சுகள் வைத்து அணிவதால் பண வரவு அதிகரிக்கும் என்றும், ஆபத்துகள் இல்லாமல் பாதுகாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
கடைசியாக, பெண்கள் காலில் கருப்பு கயிறை பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நிலை, பாரம்பரிய நம்பிக்கைகளையும், நவீன ட்ரெண்டையும் ஒருங்கிணைக்கிறது.
😯😟😯😟😯
#🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯