ஃபாலோவ்
Rationalist
@332020744
7,963
போஸ்ட்
12,846
பின்தொடர்பவர்கள்
Rationalist
418 காட்சிகள்
ஜனநாயகன் படத்தை முடக்கிய பிஜேபியை எதிர்த்து துணிவாக நடிகர் விஜய் பேச வேண்டும். #🎥Trending வீடியோஸ்📺 #🎙️அரசியல் தர்பார் #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம் #விஜய்
Rationalist
559 காட்சிகள்
நீங்கள் அதிகரித்து வரும் நெகிழி பிரச்சனைகள் குறித்து கவலை கொள்பவரா? நெகிழி மாசற்ற நலமான சமுதாயத்தை உருவாக்குதில் ஆர்வம் உள்ளவரா? எனில் நெகிழி குறித்த உங்கள் கருத்துக்களை உங்களது படைப்பாற்றல் மூலமாக வெளிப்படுத்தி, பாதுகாப்பான உலகத்திற்கான உங்கள் அக்கறையை பகிருங்கள். போட்டிக்கு தகுதிபெறும் அனைத்து படைப்புகளுக்கும் மின்-சான்றிதழ் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு: பள்ளி மாணவர்கள் இரண்டாம் பிரிவு: கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தலைப்பு : ‘நெகிழி மாசற்றத் தமிழ்நாடு’ இந்த தலைப்பின் கீழ் உங்கள் படைப்புகள் நெகிழி தொடர்பாக எதுவாகவும் இருக்கலாம். உதாரணமாக நெகிழியால் ஏற்படும் பிரச்சனைகள், நெகிழிக்கான சரியான மற்றும் போலியான தீர்வுகள், சர்வதேச கழிவில்லாமைக்கான மாதம் (International Zero Waste Month), நெகிழி மாசுக்கு எதிரான வெற்றி கதைகள், குப்பைகள், நெகிழியற்ற பண்டிகைகள், மாற்று வழிகள் அல்லது வேறு எந்த வகையிலேனும் நெகிழி சார்ந்ததாக இருக்க வேண்டும். நெகிழி தொடர்பான உங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் உங்களது ஏதேனும் ஒரு படைப்பாற்றல் வழியாக வெளிப்படுத்துங்கள். உதாரணமாக, உங்கள் படைப்புகள் கதை, கட்டுரை, கடிதம், கவிதை, ஓவியம், புகைப்படம், கோலம், பாடல்கள், சிறு குறு காணொளிகள், பேட்டிகள் (பள்ளி மாணவர்களின் சிறு குறு காணொளிகள் ஏற்கப்படாது), போன்றவையாகவோ அல்லது வேறு எந்த வகையிலாகவோ இருக்கலாம். மொழி : தமிழ் அல்லது ஆங்கிலம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ptpc.poovulagu@gmail.com கூடுதல் விபரங்களுக்கு: +91 90036 92117 இறுதி நாள்: 31 சனவரி 2026 குறிப்பு: நிச்சயமாக இந்த போட்டியில் செயற்கை நுண்ணறிவை(AI) பயன்படுத்தக்கூடாது. #internationalzerowastemonth #plasticfreetn #பூவுலகின் நண்பர்கள் #📺வைரல் தகவல்🤩 #போட்டி #சுற்றுச்சூழல் #🚨கற்றது அரசியல் ✌️
Rationalist
491 காட்சிகள்
பெங்குவின்களா நாம்? ”பெங்குவினுக்கு மனநிலை பிறழுமா,” என ஆவணப்பட இயக்குநர் கேட்க, "எனக்கு தெரிந்து அப்படியேதும் கேள்விப்பட்டதில்லை!" என்கிறார் பதிலளிக்கும் நபர். கடந்த சில தினங்களாக Encounters at the end of the world ஆவணப்பட காட்சி ஒன்று பரவலாக சமூகதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அண்டார்டிகாவில் உணவு தேடி ஒரு பெங்குவின் கூட்டம், கடலை நோக்கி செல்ல, கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு பெங்குவின் விலகி, உள்ளே இருக்கும் மலைப்பரப்பை நோக்கி செல்கிறது. விடுவிடுவென விலகி நடந்து கொஞ்சம் நின்று திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி மலையை நோக்கி அந்த பெங்குவின் நடந்து செல்கிறது. வர்ணனையாளர், 'கூட்டத்திலிருந்து தனித்து செல்வதன் மூலம் மரணத்தை நோக்கிதான் அந்த பெங்குவின் செல்கிறது," எனக் குறிப்பிடுகிறார். சமூகதளவாசிகள் இந்த பெங்குவினுக்கு Nihilist Penguin எனப் பெயர் சூட்டி இருக்கிறார்கள். Nihilism என்றால் எதிலும் நம்பிக்கையற்ற தன்மை என புரிந்து கொள்ளலாம். ஊரை தள்ளிவிட்டு, தனியாக ஒரு வழியை தேர்ந்தெடுத்து செல்லுதலை முன் வைக்கும் விஷயமாகவும், உடன்படாத ஒரு விஷயத்தை ஏற்காத எதிர்ப்பின் அடையாளமாகவும், இன்னும் பல விஷயங்களாகவும் பெங்குவினின் தனிநடை அவதானிக்கப்படுகிறது. அடிப்படையில் அனைவரும் தத்தம் சிந்தனைகளை, தத்துவ சிக்கல்களை, அக குழப்பங்களை அண்டார்டிகாவின் ஒற்றை பெங்குவின் மீது சுமத்தி ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இருக்கும் சமூக சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை மீதான அவநம்பிக்கையும் அவற்றை நிராகரிப்பதற்கான யத்தனிப்பும் அனைவருக்குள்ளும் இருக்கிறது என்பதுதான் இதிலிருந்து புரிந்துகொள்ளப்பட வேண்டிய உண்மை! கூட்டு வாழ்க்கை தன்மை என்பது மனிதனுக்கு ஒரே நேரத்தில் சிக்கலாகவும் ஆதாயமாகவும் இருக்கிறது. கூட்டு வாழ்வுக்குள் இருக்கும் முரண்கள், பொருளாதார தேடல், அதிகாரக் கட்டமைப்பு முதலியவை ஒரு பக்கம் மனிதனுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் தனிமை வாழ்க்கை எந்த மனிதனுக்கும் நிம்மதி அளித்ததாக சாட்சியங்களும் இல்லை. பெங்குவினுக்கு கேள்விகள் கிடையாது. முழுக்க முழுக்க தன்னுணர்வால் மட்டுமே இயங்குகிறது. மனிதன் அப்படியல்ல. தன்னுணர்வு குறைந்து சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவின் விளைவில் வாழ்பவனே மனிதன். அகம் குறித்து யோசித்தல் என்பது மனிதனுக்கு சாத்தியம். விலங்குகளுக்கு அது சாத்தியமல்ல. இருதலை கொள்ளி எறும்பு போல தன்னுணர்வுக்கும் சமூக உணர்வுக்கும் இடையில் அல்லாடுபவனே மனிதன் என்பார் சமூக உளவியலாளரான எரிக் ப்ராம். இந்த இருதலை தன்மையில் ஒன்றான தனிமையைத்தான் தனிமைவாதமாக முதலாளித்துவம் முன்னிறுத்துகிறது. அதிகாரம் களையப்பட்ட கூட்டுத்தன்மையை இடதுசாரியம் முன்னிறுத்துகிறது. ஒரு மனிதன் இயற்கைப்பூர்வமான எளிய வாழ்க்கையை வாழ முடியாமல், தனக்கே அந்நியமாகும் வாழ்க்கையை முதலாளித்துவம் அவன் மீது திணிக்கிறது என்பார் மார்க்ஸ். அப்படி அந்நியமாவது தவறில்லை என போதிப்பது முதலாளித்துவம். இதனால்தான் Individualism, Identity, Self Love போன்றவை முதலாளித்துவ கட்டமைப்பில் வரவேற்புடன் செழிப்பாக வளர முடிகிறது. ஆனால் கூட்டு வாழ்க்கைதான் மனிதனை அழிய வைக்காமல் காத்த பரிணாம திருப்பம்! நிம்மதியற்ற சமூகத்தில் மதம் போன்ற ஒரு மாயை மக்களுக்கு அபின் போல தேவைப்படுகிறது என்ற மார்க்ஸின் கூற்றையும் கொண்டு அவதானித்தால், இன்று மதத்தின் இடத்தை தொழில்நுட்பம் நிரப்பிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை! திடீரென வரும் ஒரு பெங்குவின் பின்னால் ஒரு பெரும் மக்கள்திரள் தங்களின் இருத்தலியல் சிக்கல்களை தீர்க்க முற்படுகிறது. பழங்குடி வாழ்வு அல்லது இயற்கை சார்ந்த வாழ்க்கைமுறைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் ஆசிய சமூகங்களில் முதலாளித்துவ வளர்ச்சி மூர்க்கமாக முடுக்கி விடப்படும்போது தனிமையும் தற்கொலைகளும் தனி வாழ்வுகளின் துரித மரணங்களும் கொலை குற்றங்களும் அதிகரிப்பது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய சமூக யதார்த்தம். மனித சமூகம் என்கிற தொகுப்பு வாழ்விலிருந்து மனித உயிரினம், விடுவிடுவென விலகி அழிவை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எரிக் ப்ராம் சொன்ன விஷயத்துடன் பதிவை முடிக்கிறேன்: "வாழ்வின் நோக்கம் என்ன என்கிற கேள்விக்கான பதிலை கண்டடைய வேண்டிய தேவை இருக்கும் ஒரே விலங்கு மனிதன் மட்டும்தான்!" #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #penguin #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
Rationalist
820 காட்சிகள்
இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு பெரியார் விருது வழங்கிய விழாவில் அவர் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. "..சினிமா துறையில் என்னை ஒரு ஆளாக்கியது ராம் சார் தான். அவர் என்கிட்ட அடிக்கடி சொல்ற வார்த்தை என்னானா 'அவரை விட சிறந்த இயக்குனர்னு நான் பேரு வாங்கனும். அதுதான் அவருக்கான மகிழ்ச்சி. அப்பத்தான் ராம் சரியா சொல்லி கொடுத்துருக்கானு தனக்கு திருப்தியாக இருக்கும்' சொல்லுவாரு. அதுக்கு பேரு தான் "ஆசானை மீறுதல்"னு சொல்லுவாங்க. கத்துகொடுத்தவர மீறி ஜெயிச்சு வரணும். ஆனா பெரியார் கிட்ட இருந்து தொடங்கிட்டு நாலு வரி கோர்வையாக மேடையில் பேச தெரிஞ்சதும் அவரையே திட்டி அவதூறு செஞ்சு அதுல கிடைக்குற விளம்பரத்தை வெற்றினு சொல்ல முடியாது. உண்மையிலேயே பெரியாரை நீங்க மீறிவரணும்னா அவருடைய வாழ்நாள்ல அவரு செஞ்சதை விட ஒரு படி மேல நீங்க செய்ங்க அப்புறம் பேசலாம்னு.." சீமான் கன்னத்தில் பளார்னு அடிச்சிருக்காரு நம்ம மாரி. இதை கேட்ட போது 15ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஒவ்வொரு மேடையிலும், விமர்சனம் என்ற பெயரில் பெரியாரை அவதூறு பரப்பி வரும் சங்கி சீமான் ஐயா மணியரசன் போன்றோருக்கு கொடுத்துவரும் பதிலடியை வழிமொழிந்திருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி. உண்மைகள் யார் சொன்னாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். மாரியின் இந்த பேச்சு GenZ தலைமுறையினரால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ் போன்றோர் தெளிந்த அரசியலோடு சரியான வழியில் பயணிக்கின்றனர். ஆனாலும் பாருங்க காலாவதியான இயக்குனர் சீமானுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. #🤭அரசியல் மீம்ஸ் #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #மாரி செல்வராஜ்
Rationalist
596 காட்சிகள்
#தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் ஈசன் மற்றும் ஒன்பது விவசாயிகள் பொங்கல் விழா நாளிலிருந்து திமுக அரசால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் அமைப்பினர் மீது கடுமையான நெருக்கடியை உருவாக்க காரணமென்ன. கடந்த மாதம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி திருவண்ணாமலையில் திமுக அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்த தோழர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவ்சாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் இரண்டுமுறை அருள் ஆறுமுகம் சிறைப்பட்டார். ஒருமுறை குண்டர் சட்டம் ஏவப்பட்டது. மாஞ்சோலை தோட்ட விவசாய தொழிலாளர்கள் கோரிக்கையையும் திமுக அரசு கைகழுவியது. அதிமுக காலத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி எதிர்த்து போராடியோர் மீது அதிமுக அரசு போட்ட பொய் வழக்குகளை கடமையாக திமுக அரசு நடத்தி தண்டனை பெற்றுத் தருகிறது. விவசாய சங்கத்தின் தோழர் பி.ஆர்.பாண்டியன் கடுமையான தண்டனையை சில மாதங்களுக்கு முன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. டெல்டாவில் அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக சொன்ன திமுக, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குகளை தீவிரமாக நடத்தி வருகிறது. பேரா.ஜெயராமன் உள்ளிட்ட பல திராவிடர், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தோழர்கள் இன்றளவும் வழக்குகளுக்காக வாரம் தோறும் நீதிமன்ற படியேறிக் கொண்டிருக்கின்றனர். கொங்குப் பகுதியில் பலவேறு உழவர் கோரிக்கைக்காக போராடி வருபவர் தோழர் ஈசன். உழவர்களுக்கான மின்சார கட்டணம் குறித்தான கடந்த அதிமுக காலத்தின் குழப்பமான நிலையின் பொழுது என் தந்தை திரு.காந்தி அவர்களின் ஆலோசனையில் கோரிக்கைகளை அவர் வடிவமைத்த சமயத்திலும், பின்னர் ஐ.டி.பி.எல் குழாய் பதிப்பிற்கு எதிரான போராட்டம் வழியாகவும் மே17 இயக்கத்திற்கு அறிமுகமான தோழர். கடந்த ஆண்டில் 'இந்து அறநிலையத்துறை' இனாம் நில உரிமை எனும் அடிப்படையில் வெகுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் அராஜக நிலையை எதிர்த்த போராட்டத்தை குறித்து விளக்கப்படுத்தி, இதுகுறித்து மே17 இயக்கமும் தனது குரலை உழவர்கள், சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்காக எழுப்பியது. இந்நிலையில், கொங்குப்பகுதியில் கறிக்கோழி வளர்ப்பவர்களிடத்தில் மிகக்குறைந்த விலைக்கு கோழிகளை வாங்கி பெருத்த லாபம் சேர்க்கும் நிறுவனங்களிடம் கோழிக்கான விலையை உயர்த்தக் கோரிக்கை வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது. 2013ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ6.50 எனும் நிலையிலிருந்து கிலோவிற்கு ரூ20 ஆக உயர்த்த கறிக்கோழி வளர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இரை, நில வாடகை, மின்சாரம், கூலி உயர்வு உட்பட பலவேறு செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மிக நியாயமான கோரிக்கையை முன்னெடுத்தனர். இக்கோரிக்கையை முன்னெடுத்து கறிக்கோழி நிறுவனங்கள் கொள்முதல் விலையை கூட்டித்தரக் கோரி போராட்டத்தை தோழர் ஈசன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் என்போர் சிறு விவசாயிகள், சிறுகுறு முதலீடு செய்தவர்கள். இவர்களுடைய கோரிக்கையை பெருநிறுவனங்களிடம் பேசி முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்ய திமுக அரசு முன்வந்திருக்க வேண்டும். 2022ல் ஃபோர்டு நிறுவனத்தில் தொழிலாளர்களுடைய போராட்டத்தின் பொழுது ஃபோர்டு நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சூழல் உருவானதையடுத்து திமுக அமைச்சர்கள் தலையிட்டு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்து போராட்ட வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதேபோல கோழி இறைச்சி பெருநிறுவனங்களிடம் பேசி இச்சிக்கலை தீர்த்திருக்க இயலும். ஆனால், போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. தோழர் ஈசன் உள்ளிட்ட உழவர்களை விடுதலை செய்து, வழக்குகளை திரும்பப்பெற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை திமுக அரசிற்கு உண்டு. நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் போது, கைதான தோழர்களை கடுமையான பாதுகாப்பை ஆயுதப்பிரிவு காவலர்களைக் கொண்டு தீவிரவாதிகளைப் போல ஏன் நடத்துகிறது திமுக அரசு? விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமலும், தோழர் ஈசன் உள்ளிட்டோரை விடுதலை செய்யாமலும் திமுக அரசு அடக்குமுறையை தொடருமெனில், விவசாயிகளுக்கும், போராடுகின்ற சமானிய கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவாக மே பதினேழு இயக்கம் போராட்டத்தை தொடங்கும். சனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைக்கும், தோழர் ஈசன் உள்ளிட்ட 9 பேரின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்த்தேசியம் #📰தமிழக அப்டேட்🗞️
See other profiles for amazing content