ஃபாலோவ்
Sivasakthi
@arthanareeswarar
246
போஸ்ட்
590
பின்தொடர்பவர்கள்
Sivasakthi
384 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
மீண்டும் ஒரு உண்மை கனா திரைப்படம்💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳👏👏💪💪🫡🫡👏👏👌👌👌👸👸🥹🥹 #👏Inspirational videos
Sivasakthi
2.6K காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
ஒரு பெண் மிகவும் மோசமாக மனதளவில் காயம்பட்ட பிறகு மீண்டும் எழுந்தால் மிகவும் ஆபத்தானவளாக இருப்பாள்.. நீங்கள் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் காயப்படுத்தலாம்... நீங்கள் அவளுடைய இதயத்தை உடைக்கலாம்... அவளுடைய மன அமைதியைக் கெடுக்கலாம்... அவளுடைய மனதை கூட அழ வைக்கலாம்... உடைந்த இதயம் மற்றும் சேதமடைந்த ஆத்மாவுடன் ஒரு பெண்ணை நீங்கள் வெளியேற்றி விடலாம்.., ஆனால் அவள் திரும்பி வரும்போது மிக மிக ஆபத்தான பெண்ணாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.. ஏறக்குறைய அவளது தனித்தன்மையை... திறமையை.. அவளுக்கான வாய்ப்பை... அங்கீகாரத்தை பறிக்கும் போரில் இருந்து அவள் தப்பிய பிறகு, அவள் வேறு ஒரு பக்குவமடைந்த பெண்ணாக முற்றிலும் மாறியிருப்பாள்.... ஒரு பெண்ணை நீங்கள் மிகவும் மோசமாக நடத்தலாம்.. காயப்படுத்தலாம்... ஆனால் அவள் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டால், நீங்கள் தவறான ஒரு நபரை காயப்படுத்தி விட்டீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டிய காலம் வரும். ஒரு பெண் பாதிக்கப்படக்கூடியவளாக இருக்கலாம்... ஆனால் அவள் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியும்... அனைத்தையும் கடந்து வர முடியும்.... அவள் மிகவும் மன்னிக்கக்கூடியவள், ஆனால் மறக்க கூடியவள் அல்ல... வாழ்க்கையில் மோசமான விஷயங்களைச் சந்தித்த பிறகு அவளால் இரக்கப்பட முடியாது. எனவே நீங்கள் காயப்படுத்தப் போகும் பெண்ணிடம் கவனமாக இருங்கள்... ஏனென்றால், நீங்களே உங்களை அறியாமல் ஒரு ஆபத்தான பெண்ணை உருவாக்க கூடும். அவள் நடந்துகொள்ளும் விதமெல்லாம் அவள் எப்படி நடத்தப்படுகிறாள் என்பதன் பிரதிபலிப்பே.... #👉வாழ்க்கை பாடங்கள்
Sivasakthi
393 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
https://youtube.com/watch?v=g8j-lwOqR54&si=9-fB4F2aPH4elaUKவாழ்த்துக்கள் தங்கமே...! 💐💐💐வருங்காலத்தில்... மென்மேலும் வெற்றிகளை குவித்து அனைவருக்கும் முன்னுதாரணமாக நீ இருப்பாய்...இந்த உயரத்தை...நீ அடைய எவ்வளவு கஷ்டங்களை தாங்கி கடந்து வந்திருப்பாய்...! என்னால் அதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்...விடா முயற்சி... கடின உழைப்பு... கபடி மேல் தீராக் காதல்... உன்னை இந்த அளவு உயர்த்திருக்கிறது... பெற்றோருக்கும்...பிறந்த நாட்டிற்கும்...பெருமை சேர்த்துள்ளாய்! என் மகள் வென்றது போன்ற உணர்வு.. 🥹🥹 மென்மேலும் உயர வாழ்த்துக்கள் மகளே!💐💐👏👏🇮🇳🇮🇳🇮🇳👸👸🥇🥇🥇🏆🏆🫡🫡👌💪💪 #👏Inspirational videos
Sivasakthi
641 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இழந்த ஒரு சில விசயங்கள் மீண்டும் அனைவருக்கும் கிடைப்பதில்லை... கிடைக்கும் போதே பொக்கிஷமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்... ஏனென்றால்..இரண்டாவது வாய்ப்பு யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை.. கிடைத்தாலும்...அது சரியாக அமைவதில்லை... இழந்தவர்களின் வலி இழந்தவர்களுக்கே தெரியும்! #👉வாழ்க்கை பாடங்கள்
Sivasakthi
584 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கரூர் துயர சம்பவம் அரசியல் மாற்றம்...ஆட்சி மாற்றம் வேண்டுமென்றால்...அதை வாக்கு செலுத்துவதில் காட்ட வேண்டும்...இந்த துயரச் சம்பவத்தில் எல்லோர் மீதும் தவறு இருக்கிறது... உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்...என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்...😔😔😔 1) 9 குழந்தைகள் இறந்ததற்கு முழு முதற் காரணம் 100% அந்தக் குழந்தைகளின் பெற்றோர் தான்... இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை... 2) பிரச்சாரக் கூட்டம் நடந்த இடம் குறுகலான பாதை என்பது உள்ளூர்காரர்களுக்கு மட்டும் நன்றாக தெரியும்... வெளியூர்காரர்களுக்கு தெரியாது...அப்போ... உள்ளூர்காரர்கள்.. மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம்... வெளியூர்காரர்கள்...அந்தக் கூட்டத்திற்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்...அவர் தான் ஒவ்வொரு ஊராக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாரே...அப்போது அவரை பார்த்திருக்கலாம்... ஊர் விட்டு ஊர் சென்று ஏன்? பார்க்க வேண்டும்...அதை தவிர்த்திருக்கலாம்... 3) 39 பேருடைய மரணத்துக்கு மூலக் காரணம்...அது யாராக இருந்தாலும்... நிச்சயம் இறைவன் நீதி மன்றத்தில் மட்டுமல்ல... மக்கள் நீதி மன்றத்திலும் தண்டனை உண்டு....குழந்தைகள் எதுக்கு இறக்குறோம்னு...தெரியாமயே இறந்துட்டாங்க....அவுங்க மரணத்துக்கு... காரணமானவங்களுக்கு மன்னிப்பே கிடையாது! 4) சினிமா அரசியல் வேற....நிஜ அரசியல் வேற... சினிமாவில் பார்த்தது 10%...தான்...ஆனால் நிஜத்தில் 100%...இப்படித்தான் நடக்குது... முதல்வன் படத்துல காட்டுனது கொஞ்சம்... 5) பலிகடா பொது மக்கள் மட்டும் தான்... 6) மற்றவர்களுக்கு இது ஒரு செய்தி... ஆனால், இழந்தவர்களுக்கு தான் தெரியும்....வலியும்... வேதனையும்... 7) பொதுமக்கள் கொஞ்சம் சிந்திக்கணும்...அன்றாடம் நாம வேலைக்கு போனா தான் சாப்பாடு என்ற நிலையில்... சரியானவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்... காசு...பணம்...இருக்கிறவுங்க கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்...அவர்களுக்கு என்ன கவலை? வந்தால் மலை...போனால்...மடு.... அவ்வளவு தான்...ஆனால்... பாமரர்களுக்கு...? ஜனநாயகக் கடமையை ஆற்றுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது! ஒரு கட்சித் தலைவர்...இல்லைன்னா இன்னொரு கட்சித் தலைவர்.. ஆனா....நம்ம குடும்பத்துக்கு....நாம் தான்... இருக்கோம்...இதை ஒவ்வொருவரும்... உணர்ந்து சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்... #🚹உளவியல் சிந்தனை
See other profiles for amazing content