ஃபாலோவ்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
6,286
போஸ்ட்
2,952
பின்தொடர்பவர்கள்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.1K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
நடராஜப் பெருமானின் காலடியில் இருக்கும் முயலகன் யார் தெரியுமா நடராஜப் பெருமான் தனது வலது காலில் ஒரு அரக்கனை மிதித்தபடி காட்சி தருவார். அந்த அரக்கனின் பெயர் முயலகன். முயலகன் எப்படி தோன்றினான். அவனை ஏன் நடராஜப்பெருமான் தனது காலடியில் மிதித்தபடி காட்சி தருகிறார்? அது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். நடராஜப் பெருமானின் வலது காலின் கீழ் முயலகனைக் காணலாம். முயலகன் வளைந்தும் நெளிந்தும் படுத்திருப்பதைக் காணலாம். இதனால் முயலகனை அபஸ்மாரன் என்று அழைப்பது வழக்கம். அபஸ்மாரம் என்றால் வளைந்து நெளிதல் என்று பொருள். ஒரு சமயம் திருப்பராய்த்துறையில் தாருகாவனத்தில் நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகள் வேள்விகள் பல செய்து பல சக்திகளைப் பெற்று தங்கள் பத்தினியரோடு வாழ்ந்து வந்தனர். தாங்கள் பிறரை விட அதிக சக்தி மிக்கவர்கள் என்ற எண்ணத்தின் காரணமாக இவர்களுக்கு ஆவணம் மிகுந்திருந்தது. இதை உணர்ந்த ஈசன் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்கி ஆட்கொள்ள திருவுளம் கொண்டார். ஈசன் பிட்சாடனர் வேடம் தாங்கி ரிஷிகளின் இடத்திற்கு வந்தார். மகாவிஷ்ணு மோகினி வடிவம் தாங்கி அவருடன் சென்றார். ரிஷிகளும் அவர்களுடைய பத்தினிகளும் இருவரையும் கண்டனர். ரிஷிகள் மோகினியை தொடர, அவர்தம் பத்தினிகள் பிட்சாடனரை தொடர்ந்தார்கள். சற்று நேரத்தில் ரிஷிகள் இருவரின் உண்மை உருவங்களைக் காண்கிறார்கள். பிட்சாடனரை அழிக்க ரிஷிகள் அபிசார வேள்வியைத் தொடங்கினர். இந்த வேள்வி எதிரிகளை அழிப்பதற்கும் நினைத்த காரியத்தை நிறைவேற்றவும் செய்யப்படும் ஒரு வேள்வியாகும். வேள்வியிலிருந்து தோன்றிய புலியை அவர்கள் சிவபெருமான் மீது ஏவ, அவர் புலியைக் கொன்று அதன் தோலை தனது ஆடையாக உடுத்திக் கொண்டார். தொடர்ந்து மானையும் பாம்புகளையும் ஏவினர். சிவபெருமான் மானை அடக்கி அதைத் தனது இடது கரத்தில் ஏந்திக் கொண்டார். பாம்பை தனது அணிகலனாக அணிந்து கொண்டார். மேலும், ரிஷிகள் பூதகணங்களை ஏவ அவற்றை அடக்கி தனது படையில் சேர்த்துக் கொண்டார். ரிஷிகள் ஒரு பிரம்மாண்டமான யானையினை ஏவ, சிவபெருமான் அதன் தோலை உரித்து தன் மீது போர்த்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சி தந்தார். தங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ, அதனால் சினம் கொண்ட ரிஷிகள் மந்திரத்தை ஜபிக்க வேள்வியிலிருந்து முயலகன் என்ற அரக்கன் தோன்றினான். ரிஷிகள் ஈசனைக் கொல்ல முயலகனை ஏவுகின்றனர். முயலகன் ஈசனுடன் போர் செய்தான். ஒரு கட்டத்தில் ஈசன் முயலகனை தனது காலில் மிதித்து அவனை அடக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடினார். இதன் பின்னரே ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. அவர்கள் ஈசனே இறைவன் என்றும் அவரது ஆற்றலே பெரியது என்பதையும் புரிந்து கொண்டனர். இதன் பின்னர் ஈசன் அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராகக் காட்சி தந்து ரிஷிகளை தடுத்தாட்கொண்டார். ஆணவம் தோல்வியைத் தரும் என்பதும் ஆணவம் உடையவர்களால் இறைவனை அடைய முடியாது என்பதை உணர்த்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு திருவிளையாடலே இந்த நிகழ்வாகும். கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளைப் பற்றியிருந்த ‘முயலகன்’ என்னும் ஒரு வகையான இழுப்பு நோயை நீக்கிய தலம் திருப்பாச்சிலாச்சிரமம் திருத்தலமாகும். இந்த நோயினை முசல்வலிப்பு என்றும் கூறுவர். கொல்லிமழவனுக்கு நீண்ட நாட்கள் மக்கட்பேறு வாய்க்காமல் இருந்து ஈசனின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயலகன் என்ற இழுப்பு நோய் இருப்பதை அறிந்த கொல்லிமழவன் உடைந்து போனார். கோயிலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு வந்து ஈசனிடம் தனது குழந்தையின் முயலகன் நோயை நீக்கியருளுமாறு வேண்டிக் கொண்டார். அப்போது அங்கே வந்திருந்த திருஞானசம்பந்தர் குழந்தையின் நிலை கண்டு இரங்கி ஈசனைத் துதித்து ஒரு பதிகம் பாடியருளினார். அக்கணமே குழந்தையின் முயலகன் இழுப்பு நோய் நீங்கியது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் ‘எனையடைந்த குட்டம் வினைமிகுந்த’ என்று தொடங்கும் பதிகத்திலும் ‘இருமலு ரோக முயலகன் பாதமெரி குணநாசி’ எனும் பதிகத்திலும் முயலகன் நோயைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #தெரிந்து கொள்வோம் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
449 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
🌺 *சிவ_தாண்டவங்கள்* சிவபெருமான் ஏழு வகையான தாண்டவங்களைப் புரிபவர். ஆடல் வல்லானான சிவனார், ஆடிய தாண்டவங்களும், அதற்குரிய செயலும், நடைபெற்ற திருத்தலங்களும்__ *1.காளிகா* *தாண்டவம்_* _படைத்தல் செயல்கள்__ திருவாலங்காடு_ இரத்தின சபையில். *2.கௌரி* *தாண்டவம்__* காத்தலுக்குரியது__திருப்பத்தூர்__ சித்சபையில். *3. சுந்தரத்* *தாண்டவம்__* காத்தல் செயல்கள்__திரு ஆலவாய்(மதுரை) __வெள்ளியம்பலத்தில் .இதைச் ஸந்த்யா தாண்டவம் எனவும் கூறுவர். *4. சம்கார* *தாண்டவம்__* அழித்தலுக்குரியது__ திருநெல்வேலி__ தாமிர சபையில். *5. திரிபுர* *தாண்டவம்* __மறைத்தலுக்குரியது__ குற்றாலம்__ சித்ர சபையில். *6.ஊர்த்துவ* *தாண்டவம்__* அருளலுக்குரியது__ தில்லையில்(சிதம்பரம்) காளியை வென்ற நடனம். *7. ஆனந்தத்* *தாண்டவம்__* ஐந்தொழிலுக்குரியது___ __சிதம்பரம்__பொன்னம்பலத்தில். பேரூர் கோலமும் இதுவே. *ஓம்_நமசிவாய* 🙏 🙏🪷🙏 #god #தெரிந்து கொள்வோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
696 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
நாய்களையும் பன்றிகளையும் போல இருக்காதீர்கள்... பகவான் ரிஷபதேவர் தனது மகன்களிடம் கூறினார். எனது அருமை மகன்களே இந்த உலகில் உடலை ஏற்றுள்ள உயிர்களாகிய நாம்... மனித பிறவியின்​ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்... மலத்தை உண்ணும் பன்னிகளுக்கு கூட ஏன் நாய்களுக்கும் கூட கிடைக்கக்கூடிய புலன் இன்பத்திற்காக அல்லும் பகலும் கடினமாக உழைக்கக்கூடாது... பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்கு தவங்களை செய்வதில் ஈடுபட வேண்டும்.... இத்தகைய செயல்களில் இதயம் தூய்மை அடைகிறது.... ஒருவர் இந்நிலையை அடையும்போது நித்தியமான ஆனந்தத்தின் வாழ்வினை அடைகிறார்.... அந்த வாழ்க்கை உலக இன்பத்திற்கு அப்பாற்பட்டதும்.. என்றென்றும் நிலைத்து இருப்பது ஆகும் . இது ஸ்ரீமத் பாகவதம்5:5:1 இந்த சுலோகத்தில் பகவான் ரிஷபதேவர் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தனது மகன்களிடம் எடுத்துரைக்கிறார்.. மனித உடலைப் பெற்ற உயிர்வழி விலங்குகளிடம் இருந்து மாறுபட்ட விதத்தில் செயல்படவேண்டும்... பன்றிகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகள் மலத்தை உண்டு புலன் இன்பத்தை அனுபவிக்கின்றன.. மனிதர்கள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர். பின்னர் இரவு நேரத்தில் உண்ணுதல் குடித்தல் உடலுறவு கொள்ளுதல் என்று இன்பம் அடைய முயற்சிக்கிறார்கள்... அதே சமயம் தங்களை முறையாக பாதுகாக்கவும் கொள்கிறார்கள் .. இது மனித நாகரிகம் அல்ல .. ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான துன்பத்தை தன்னிச்சையாக பயிற்சி செய்வதாகும். தபஸ்ய அல்லது தவம் என்றால் ஆன்மீக குரு மற்றும் சாதுக்கள் வழங்கப்படும் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு உங்களின் வாழ்வை வடிவமைப்பதற்கு நீங்களே முன்வந்து ஒப்புக் கொள்வதாகவும்... ரிஷபதேவர் தனது மகன்களிடம் . எனது அருமை மகன்களே பூனைகள் நாய்கள் மற்றும் பன்றிகள் போல வாழ்ந்து உங்களை வாழ்வை வீணாக்காதீர்கள்.. மதிப்புமிக்க வாழ்வினை தவங்களை ஏற்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றுங்கள் என்று அறிவுறுத்துகிறார்... நான் ஏன்விலங்குகளைப் போல வாழக்கூடாது... நான் ஏன்குரு சாது சாஸ்திரம் சட்ட திட்டங்களின் கீழ் ஏன் வாழவேண்டும் ஒரு கேள்வி.. ரிஷபதேவர் பதிலளிக்கிறார்.. தவத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் உங்களின் வாழ்வு தூய்மை அடையும்... தற்பொழுது ஜட இயற்கையின் குணங்களால். . குறிப்பாக கோப குணமும் மட்டமான குணத்தாலும் ரஜோ தமோ ஆகியவற்றில் களங்கப் பட்டுள்ளோம்.. ஆகையால் சாஸ்திரங்கள் மற்றும் இதர வழிகாட்டுதலின் படி வாழ்ந்தால் உலக இயற்கையின் தாழ்ந்த குணத்தில் இருந்து தூய்மை அடைய முடியும் என்று ரிஷபதேவர் தங்கள் மகனுக்கு அறிவுறுத்துகிறார்... ஹரே கிருஷ்ண பிரபு பாத் கீஜெய்🙏 #தெரிந்து கொள்வோம் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
2.4K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
ஏகாதசி கிராமம் !!! ?? எத்தனை எத்தனையோ ஊர்களில் எவ்வளவோ கிராமங்கள் வித்தியாசமான பெயர்களோடு இருக்கின்றன. ஆனால், மிக வித்தியாசமாக, திதிகளில் ஒன்றான ஏகாதசியின் பெயரால் அழைக்கப்படும் ஒரு கிராமம் இருக்கிறது என்பது ஆச்சர்யம் அல்லவா! அதைவிட மேலும் ஓர் அபூர்வமும் உண்டு அங்கே. அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான். அந்த அற்புதத்தை அறிந்த கொள்ள வேண்டாமா? இதோ அந்த அதிசயக் கோயில்! ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஊர், வடுவூர். ஓர் ஏகாதசி தினத்தன்று இந்த ஊர் தானமளிக்கப்பட்டதால், ஏகாதசி கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில், ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது. தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள். அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த அண்ணல் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசிக்கலானார். அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே விக்ரகமாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார். மறுநாள், ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பிரானையும், பிராட்டியையும் வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர். அப்போது அந்த சீலர்களை நோக்கி ராமர், "உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?' எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர். புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார். வெகுகாலம் கழித்து, கானகத்தில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர். பின்னர் ஒரு கல்ப காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர். காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார். திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார். தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அர்ச்சா பிம்பங்களை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென விண்ணப்பித்து வடுவூரிலேயே ஏற்கனவே இருந்த ருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் கோயிலில் பிரதான மூர்த்தியாக ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென மன்றாடி நின்றனர். முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் ஊர்மக்கள் அனைவரும் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்விட்டு பிராணதியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், ராமபக்திக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார். அது முதல் கோபாலன் கோயிலின் பிரதான மூர்த்தியாக ராமர் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மூலவர் சன்னதியில் உற்சவர் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது. பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பென் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைத்தனர். ஜெகன்மோகனரான மூலவர் கோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர், அனுமன் சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் கருவரையில் காட்சி தருகிறார். நாச்சியாரான சீதா பிராட்டிக்குத் தனி சந்நதி இல்லை. இத்தலத்து ஆதி பெருமாள் ருக்மணி - சத்யபாமா சமேத கோபாலன், மகா மண்டபத்தின் வடப்புறம் திருப்பள்ளி அறையில் தினசரி பூஜை கண்டருளுகிறார். தலவிருட்சம், மகிழமரம். ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் வில்வம் ஒன்றும் உள்ளது. திருக்குடந்தை பெருமாள் ஆராவமுதன் எழுந்தருளி இரு தினங்கள் இருந்து பெருமாள் சடாரி பிரதிஷ்டை செய்து உகந்தருளிய தலம் இது. ஸ்ரீமத் அகோபில மடம் 43-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் இத்தலத்தில் எழுந்தருளி "கற்பார் ராமபிரானை அல்லால்' எனும் திருவாய்மொழி 7-5-1 பாசுரத்தையும், "மன்னு புகழ் கௌசலை தன்' எனும் குலசேகர ஆழ்வாரின் திருமொழி 8-1 பாசுரத்தையும் சமர்ப்பித்தார். ஆசார்யர்களால் போற்றப்பட்ட பிரார்த்தனைத் தலமான வடுவூர் கோதண்டராமரை நாமும் வணங்கி வளம் பெறுவோம்! ஸ்ரீ ராம சீதா ஜெயம் !!! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !🌹 #god #தெரிந்து கொள்வோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.5K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ! சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் வழிபட்டு மகிழ்வோம் சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் சூரியனாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது. சனீஸ்வரர் தவமிருந்து வழிபட்டதால், பொங்கு சனீஸ்வரர் எனும் பெருமை பெற்ற திருத்தலமும் இதுதான்! பொங்கு சனியை நினைத்து எள் தீபம் ஏற்றுங்கள். வெப்பத் தகிப்பை யாரால்தான் தாங்கிக் கொள்ளமுடியும். சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை. இதனால் பாவம்... சூரியனார் நொந்துபோனார். என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனாருக்கு வரமளித்தார். அதன்படி சூரியனார் - உஷா தம்பதிக்கு எமதருமர், சூரியனார் - சாயா தம்பதிக்கு சனீஸ்வரர் மகனாக அவதரித்தார்கள் என்கிறது புராணம். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இடம்பிடித்தார் சனீஸ்வரர். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம்... தன்னைக் கண்டு எல்லோரும் நடுநடுங்கிப் போகிறார்களே என்று! தந்தை காட்டிய வழியாக, திருக்கொள்ளிக்காடு திருத்தலத்துக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார். இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார். வெப்பத் தகிப்பு கொண்ட சூரியனார் வணங்கி வழிபட்ட திருத்தலம் என்பதால் சிவனாருக்கு அக்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள். அக்னிப் பிழம்பென சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருளியதால் இந்தப் பெயர் அமைந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே சிவனாரின் திருநாமம் - அக்னீஸ்வரர். முக்கியமாக, பொங்கு சனி பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார் இங்கே! கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம்பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார். இன்னொரு சிறப்பு... சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமகாலட்சுமித் தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும். ஐஸ்வர்ய கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள். சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க… சனிபகவான் பாதிப்பில் இருந்து தப்பிக்க… பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும். பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு…. தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். இன்னும் இதுபோன்ற பரிகாரம் மனமுருகி வழிபட்டு செய்தால் சனிபகவானின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடலாம்…………… திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நினைத்து விளக்கேற்றுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. பிறகொரு நாளில், திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும் பொங்கு சனீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்!🌹 #god #தெரிந்து கொள்வோம்
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
617 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
விக்ரக ரூபத்தை விடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது!!! மஹாபாரதத்தில் ஒரு நாள் கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களோடு யுத்தம் புரிகிறார் அஸ்வத்தாமன்;அவரை வெல்வது எளிதல்ல;அவரிடம் உள்ள அஸ்திரங்களில் அக்னி அஸ்திரம் ஒன்று போதும்;மொத்த உலகத்தையே சாம்பலாக்கிவிடமுடியும்;இது பாண்டவர்களுக்கும் தெரியும்! குறிப்பாக கிருஷ்ண பரமாத்மா நன்கறிவார். அன்றைய யுத்தத்தில், அஸ்வத்தாமா அந்த அஸ்திரத்தை இறுதியாகப் பிரயோகித்தார்; மொத்த பாண்டவ சைதன்யமும் சாம்பலாகப்போகிறது என்றே எல்லோரும் நினைக்க,க்ருஷ்ண பரமாத்மா பதிலுக்கு பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும்படி அர்ஜீனனைப் பணித்தார்; சிவனாரைக் குறித்து தவமிருந்து அர்ஜீனன் பெற்றதே பாசுபதாஸ்திரம். அது, அக்னியாஸ்திரத்தை அடக்கிவிடுகிறது. அஸ்வத்தாமனிடம் திகைப்பு!!! அக்னியாஸ்திரத்தை மிஞ்சும் ஓர் அஸ்திரம் இருக்கமுடியுமா? என்று!!! பின்னர்,அவர் வியாசரிடம் இது தொடர்பாக கேட்க,அவர் பதில் கூறத் தொடங்கினார்: “அஸ்வத்தாமா! நீயும் அர்ஜீனன் போன்று மிகச் சிறந்த வீரனாக இருந்தபோதிலும்,அவன் ஈஸ்வரனின் லிங்க ரூபத்தை தியானித்து தவம் செய்து,பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். நீயோ அந்தப்பெருமானை விக்கிரக ஆராதனை புரிந்தாய்.லிங்க ரூபத்தில் சக்தியும் பீடகதியில் கிடக்கிறாள்; ஸ்தூபம் நாதமாக விளங்குகிறது; எனவே,சிவபெருமான் லிங்க ரூபத்தில் வழிபாடு உடையவர்களை, வரம் பெற்றவர்களை முந்தி ஆட்கொள்கிறான். அதனாலேயே அர்ஜீனனை உனது அஸ்திரத்தால் வெல்ல முடியவில்லை”என்றாராம். மஹாபாரதத்தில் கிடைக்கும் இந்தச் செய்திப்படி லிங்க வடிவமே வழிபாட்டுக்கு உரியது என்பது புலனாகிறது; இதன்படி லிங்கம் என்பது மணியாகும்; மந்திரம் என்பது ‘ஓம்நமச்சிவாய’ எனும் பஞ்சாட்சரமாகும். விபூதியே மருந்தான ஓளஷதமாகும்; இதையே ‘மணிமந்திர ஓளஷதம்’ என்பார்கள்; சித்த புருஷர்களும் மிக எளிதாக,மணி மந்திர ஒளஷதமாக லிங்கத்தை பஞ்சாட்சரத்தை விபூதியைக்கொண்டார்கள். 🌹 #தெரிந்து கொள்வோம் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
656 காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
பெருமாள் மீசை 'வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே!' என்பார்கள். திருமால் குடிகொண்டிருக்கும் வைகுண்டத்துக்குச் சென்று, அவன் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விரும்பாத மனிதர்கள் இருக்கிறார்களா, என்ன? கோயிலுக்குச் சென்று, பெருமாளின் திவ்விய ரூபத்தை சேவித்துப் பிரார்த்தித்து, அவனுடைய அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் ஆனந்தப்படுகிற பக்தர்கள், 'என்னை வைகுண்டத்துக்கு அழைச்சுக்கோ பகவானே’ என்று ஒருகட்டத்தில் பிரார்த்திக்கின்றனர். 'பதம் அநுத்தமம்’ என்றொரு சொல் உண்டு. பதம் என்றால் இடம்; அநுத்தமம் என்றால், அதை விட வேறில்லை என்று அர்த்தம். அதாவது, நாம் அடைக்கலம் அடைவதற்கு பரந்தாமன் குடிகொண்டிருக்கிற வைகுண்டத்தைவிட ஆகச் சிறந்த இடம் வேறில்லை என்று பொருள்! நிறைவில் இறைவனிடம் அப்படித்தான் வேண்டுகிறோம். ஆனால், ஆரம்பத்தில்... பகவானின் திருமேனியில் சிலிர்த்துப் போகிறோம்; அப்பேர்ப்பட்ட பொன்னான திருமேனி உடையவன் ஸ்ரீபகவான். அதனால்தான் அவனுக்கு 'ஸ்வர்ண வர்ணஹா’ எனும் திருநாமம் அமைந்தது. 'என்ன இது குழப்பம்! கண்ணபிரான் நீலமேக சியாமளன் ஆயிற்றே... அவனுடைய நிறம் கறுப்பும் நீலமும் கலந்தது அல்லவா! அப்படியிருக்க, ஸ்வர்ண வர்ணம் என்று சொல்லி அதைக் கொண்டே திருநாமம் சூட்டியிருக்கிறார்களே..?!' என்று குழப்பம் அடைகிறீர்களா? ஸ்வர்ணம் என்றால் பொன்; ஸ்வர்ண வர்ணம் என்றால் பொன்னின் நிறம் என்று அர்த்தம். ஆனால், கண்ணபிரான் நீல வண்ணம் கொண்டவன்தான். ஆனால், அவன் திருமேனி எந்த நிறத்தில் இருந்தால் என்ன... அவன் பொன்னின் நிறத்தைப் போல ஜொலிஜொலிக்கிறான்; தங்க நிறத்தில் தகதகக்கிறான். அதாவது, தங்க நிறத்தைப்போல் ஒளி கொண்டு திகழ்கிறான் என்று அர்த்தம். 'சரி... கண்களும் தலைமுடியும் கறுப்பு நிறத்தில்தானே இருக்கும்? அதுவுமா தங்க நிறத்தில் காட்சி தந்தது?!' என்கிறீர்களா? ஆனால், கருமை நிறக் கண்ணனான பரமாத்மாவின் தலைமுடியும் கண்களும் கறுப்பு நிறமாகத்தான் தெரிந்தன. அதேநேரம், கண்ணபிரானின் மேனியெங்கும் ஒருவித ஒளி படர்ந்து, பரவியிருந்தது. கறுப்பு நிறத்தில்கூட, தங்க நிற ஒளி பிரகாசமாக ஜொலித்தபடி காட்சி தந்ததாம்! இன்னொரு விஷயம்... சாஸ்திரப்படி மீசை வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால், ஆயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் மீசை வைத்திருந்தானாம் ஸ்ரீகண்ணபிரான். 108 திவ்விய தேசங்களில், எத்தனையோ திருக்கோலங்களில் பகவான் திருக்காட்சி தந்தாலும், பெரிய மீசையுடன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாக, ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாகக் காட்சி தருவது திருவல்லிக்கேணி திருத்தலத்தில்தான்! சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதியின் திவ்வியமான மேனியைத் தரிசித்தால், அவன் ஸ்வர்ண வர்ணன் என்பதை அறிந்து சிலிர்ப்பீர்கள். 'பரஞ்ஜோதி’ அல்லவா பரம்பொருள்!🌹 #தெரிந்து கொள்வோம் #god
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
1.9K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
"மகாபாரதத்தை எழுதிய முனிவர் வேத வியாசரால் உருவாக்கப்பட்ட கோயில்!' என்ற சிறப்பைப் பெற்றுள்ளது தெலங்கானா மாநிலம், பஸôரில், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ஞானசரஸ்வதி ஆலயம். கல்விக்கு சரஸ்வதி தேவியும், செல்வத்துக்கு மகா லட்சுமியும், வீரத்துக்கு பார்வதிதேவியும் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட நிலையிலும், அங்கும் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏராளமானவை உள்ளன. அவ்வரிசையில் பஸாரில் உள்ள ஞானசரஸ்வதி கோயிலும் ஒன்றாக விளங்குகிறது. 1. காஷ்மீரில் உள்ள சரஸ்வதி கோயில் காஷ்மீர், நீலம் பள்ளத்தாக்கில் சாரதா பீடம் எனப்படும் சரஸ்வதி கோயில் உள்ளது. கி.பி. 6 }ஆம் நூற்றாண்டு முதல் 12}ஆம் நூற்றாண்டு வரை மிகவும் பிரசித்தி பெற்ற அறிவுக் கோயிலாகத் திகழ்ந்தது. இந்திய } பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே 6 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோயில் 18 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்ட இக்கோயில், போதிய பராமரிப்பில்லாததால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. 2. தெலங்கானாவில் உள்ள சரஸ்வதி கோயில் மகாராஷ்டிர மாநில எல்லையை ஒட்டியுள்ள தெலங்கானா நிர்மல் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் கரையில், சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதியோடு, மகாலட்சுமி, காளியும் எழுந்தருளி உள்ளனர். வேத வியாசரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் குருஷேத்திரத்தில் மகாபாரதப் போர் முடிந்தவுடன், அமைதியான இடத்தை நாடி முனிவர் வேதவியாசர் மற்றும் அவரது சீடர்கள் தண்டகாரண்ய பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இறுதியாக கோதாவரி நதிக்கரையில் நிலவிய அமைதியான சூழலைக் கண்டு அங்கே தங்கினர். நாள்தோறும் கோதாவரியில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டார் வியாச முனிவர். அப்போது ஆற்றில் இருந்து மணலை சேகரித்து சிறு சிறு உருவங்களாக, தனது சக்தியால் சரஸ்வதி, காளி, லட்சுமியின் வடிவங்களை உருவாக்கி, வழிபட்டு வந்தார். "வியாசர்' உள்ளூர் மொழியில் "பஸார்' என அழைக்கப்பட்டதால், அந்த இடமும் "பஸார்' என்றானது. பஸாரில் தற்போதுள்ள கோயிலை கர்நாடக மன்னர் பிஜ்ஜலடு என்பவர் கட்டினார். உற்சவங்கள்: ஞானசரஸ்வதி கோயிலில் மகா சிவராத்திரி (பிப்ரவரி } மார்ச்), தசரா நவராத்திரி (செப்டம்பர் } அக்டோபர்), வஸந்த பஞ்சமி (வியாச பூர்ணிமா உற்சவங்கள்) ஆகிய விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அப்போது தெலங்கானா, ஆந்திரம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவர். வஸந்த காலத்தின் தொடக்கமே வஸந்த பஞ்சமி உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி கற்றோருக்கும், குழந்தைகளுக்கும் ஊக்க சக்தியாகத் திகழ்கிறாள். வித்யாரம்பம்: சிறு குழந்தைகளுக்கு முதன்முறையாக எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் என்கிற அட்சர அபியாசம் நிகழ்ச்சி இக்கோயிலில் மிகவும் பிரசித்தம். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்து வந்து, வணங்கச் செய்து, சரஸ்வதி தேவியிடம் அருள் பெற்றுச் செல்கின்றனர். நாள்தோறும் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், மலர்கள், புத்தகம், பேனா, சிலேட்டு, பலப்பம், அரிசி, தேங்காய், மஞ்சள், குங்குமம் போன்றவை கொண்டு செல்ல வேண்டும். இத்தலத்துக்கு அருகிலேயே மகாகாளி கோயில், தத்தாத்ரேயா கோயில், வியாச மகரிஷி குகை, சிவன் கோயில்களும் உள்ளன. அமைவிடம்: ஹைதராபாத், நிஜாமாபாதில் இருந்து 34 கி.மீ. தூரத்தில் உள்ளது பஸôர் சரஸ்வதி கோயில். இத்திருத்தலத்திற்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.🌹 #god #தெரிந்து கொள்வோம்
See other profiles for amazing content