
டைம்ஸ் ஆப் கஜா டிவி
@636114710
1Tamil News Media Network
Jeyasree Advertisers
77வது இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் குமரி மாவட்டம் மற்றும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 25-1-26 ஞாயிற்றுக்கிழமை காலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில்
மாவட்ட பொருளாளர் ஹனீபா, துணைச் செயலாளர்கள்
ஜாஹிர், மஹ்லரி
மற்றும் அனைத்து
கிளை நிர்வாகிகள்
முன்னிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியில் வைத்து
நடைபெற்ற.முகாமை
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் லியோ டேவிட் துவக்கி வைத்தார்.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் இரத்தத்தை தானமாக கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார்.
இந்த இரத்த தான முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
டைம்ஸ் ஆப் கஜா டிவி
செய்தி விளம்பர தொடர்புக்கு 9659520537
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
SDTU தொழிற்சங்கத்தின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு
இளங்கடை புனித அந்தோனியார் சமூக நல கூடத்தில் 25-1-2026 அன்று SDTU மாநில செயற்குழு
உறுப்பினரும் நெல்லை மண்டலத்தலைவர் இமாம் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் ரௌஃப் நிசார் பங்கேற்று
சிறப்பித்தார். புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக பாபு உசேன்,துணைத்தலைவராக
அமானுல்லாஹ், மாவட்டச் செயலாளராக காதர் மைதீன், துணைச் செயலாளராக சையதுஅலி
மற்றும் சாதிக்அலி.பொருளாளராக ஷேக்அப்துல் காதர்,செயற்குழு உறுப்பினர்களாக ஷெரிப்
மற்றும் லியாக்கத் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிகழ்வில் தொழிலாளர் நலன்
கருதி தீர்மானமாக
1, ஒன்றிய பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
2, 13 ஆண்டுகள் மாற்றப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும்.
3, ஓலா ஊபர் போன்ற பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும்.
4, குமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரி செய்யப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர்
சுல்ஃபிகர் அலி. மாவட்ட பொதுச் செயலாளர் நாகூர் மீரான் முகைதீன். மாவட்டத் துணைத் தலைவர்
ஜாகிர் உசேன்.மாவட்டச் செயலாளர்கள் ஜாபர் அலி,மணவை சாதிக் மற்றும் நாஞ்சில் செய்யதலி,
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் சலீம், செயலாளர் சௌகத் அலி, நகரத் தலைவர் சையது
ஷாக் நகரச் செயலாளர் முகமது அலி,விவசாய அணி தலைவர் சிகாப்தின், கலை இலக்கிய அணி
தலைவர் சாகுல் ஹமீது சுபைர். ஆகியோர் கலந்து கொண்டனர், இறுதியாக SDTU மாவட்ட துணைச்
செயலாளர் சாதிக் நன்றியுரை ஆற்றினார்
டைம்ஸ் ஆப் கஜா டிவி
செய்தி விளம்பர தொடர்புக்கு 9659520537
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
கன்னியாகுமரி மாவட்ட முக்கிய செய்தி
##TimesOFGajaTv ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்
பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில்
வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்ல
ரூ. 5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய காங்கீரிட் சாலை
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்
பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில் வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்வதற்கு வசதியாக புதிய காங்கீரிட் சாலை அமைத்து தர அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று இப்பணிகளை மேற்கொள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனடிப்படையில் இக்காங்கீரிட் சாலை அமைக்கப்பட்டு இதன் திறப்புவிழா மற்றும் அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தியான மண்டபம் திறப்புவிழா நேற்று (03-01-2026) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிதாக போடப்பட்டுள்ள காங்கீரிட் சாலையினையும், அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தியான மண்டபத்தையும் திறந்து வைத்து பேசும் போது தெரிவித்ததாவது,
பொத்தையடி மருத்துவாழ் மலை அடிவாரத்தில் வைகுண்டபதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு செல்வதற்கு புதிதாக காங்கீரிட் சாலை அமைத்து தர அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கரடு, முரடான பாதையில் அய்யா வைகுண்டர் ஆன்மீக மையத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் சென்று வந்தார்கள். இன்று இக்குறை நீக்கப்பட்டு, பக்தர்கள், பொதுமக்கள் சமபாதையில் வசதியாக சென்று வருவதற்கு காங்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு செய்கின்ற தொண்டு இறைவனுக்கு செய்கின்ற தொண்டுக்கு ஒப்பாகும். சக்தி வாய்ந்த இப்பதிக்கு நாள்தோறும் மக்கள் வந்து செல்கிறார்கள். நற்செயல்களை நாம் செய்யும் போது நன்மைகள் நம்மை தேடி வரும். மனதளவும் பிறருக்கு தீங்கு விளைவிக்க எண்ண கூடாது. நன்மைகள் செய்யும் போது நம் வாழ்வில் இறைவன் நன்மைகளை கொடுப்பார். பிறருக்கு உதவுகின்ற நற்குணங்களை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும். இரக்கமும், இறை வழிபாடும், பிறருக்கு உதவும் தன்மையும் நம்மை உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும். அய்யா வைகுண்டர் பதியின் அருள் பெற்று வளம் பெறுவோம் என அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் பக்தர்தளுக்கு அன்னதானத்தையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தினேஷ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய பொருளாளர் தங்கவேல், அய்யா வைகுண்டர் ஆன்மீக மைய தலைவர் செல்வகுமார், செயலாளர் கிருஷ்ணமணி, நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டைம்ஸ் ஆப் கஜா டிவி
செய்தி விளம்பர தொடர்புக்கு
ஜெயஸ்ரீ அட்வர்டைஸ்மென்ட்
96595 20537 ##TimesOFGajaTv ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
பூரிப்புடன் பிறக்கும் புத்தாண்டு
புதுமைகள் படைக்கும் புத்தாண்டு
நன்மைகள் கிடைக்கும் புத்தாண்டு
நலமுடன் செழிக்கும் புத்தாண்டு
உழவர்கள் மகிழும் புத்தாண்டு
உறவுகள் வாழ்த்தும் புத்தாண்டு
இனியவைகள் நடக்கும் புத்தாண்டு
இன்பங்கள் தொடரும் புத்தாண்டு
வெற்றிகள் கிடைக்கும் புத்தாண்டு
வேதனைகள் மறையும் புத்தாண்டு
சாதனைகள் படைக்கும் புத்தாண்டு
சரித்திரம் படைக்கும் புத்தாண்டு
மதங்கள் அற்ற மனிதநேயம் பிறக்கட்டும்
சாதிகள் அற்ற சமுதாயம் பிறக்கட்டும்
பெண்ணையும், ஆணையும் சமமாய் போற்றும்
சரித்திர ஆண்டாய் புத்தாண்டு பிறக்கட்டும்
மகிழ்ச்சி பொங்கி வாழ்வு சிறக்கட்டும்
எட்டு திக்கும் வெற்றி கிட்டி
நமது கொடி பறக்கட்டும்
நமது ஆட்சி மலரட்டும்
பட்ட துன்பம் மறையட்டும்
கோடி இன்பம் மலரட்டும்
புதிய திட்டங்கள் கிடைக்கட்டும்
புதிய பாதை அமையட்டும்
அனைவர் வாழ்வும் சிறக்கட்டும்
அனைத்து துறைகளும் மிளிரட்டும்
கல்வியில் சிறந்து விளங்கட்டும்
காணா வளர்ச்சியை காணட்டும்
வெற்றி ஆண்டாய் அமையட்டும்
அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நன்றியுடன் என்றும் மக்கள் பணியில்
ந.தளவாய்சுந்தரம், B.Sc., B.L., MLA
கழக அமைப்புச் செயலாளர்,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர்
முன்னாள் அமைச்சர்
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் திமுக குமரி கிழக்கு மாவட்ட அயலக அணியினர்
#கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
தென் மாவட்ட முக்கிய செய்தி
##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
தென் தமிழக முக்கிய செய்தி
https://youtu.be/thixVRw-Mx4
##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்ட முக்கிய செய்தி
##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி
தான் செய்யும் தர்ம பணியில் என்றும் என்னுடன் தாடி பாலாஜி இருப்பார் P. T செல்வகுமார்
##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி




![கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி - Diqitat டைமஸ்ஆப் 683[ ٥٥٢ ٣٥٨ 0{[4 விளம்பர தொடர்புக்கு Jledia 96595 20537 NIII வர யய ~u ] 0 SDTUதொழிற்சங்கம் குமரி மாவட்ட பொதுக்குழு IDTOILL ரட IMPORTANT NEWS Diqitat டைமஸ்ஆப் 683[ ٥٥٢ ٣٥٨ 0{[4 விளம்பர தொடர்புக்கு Jledia 96595 20537 NIII வர யய ~u ] 0 SDTUதொழிற்சங்கம் குமரி மாவட்ட பொதுக்குழு IDTOILL ரட IMPORTANT NEWS - ShareChat கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி - Diqitat டைமஸ்ஆப் 683[ ٥٥٢ ٣٥٨ 0{[4 விளம்பர தொடர்புக்கு Jledia 96595 20537 NIII வர யய ~u ] 0 SDTUதொழிற்சங்கம் குமரி மாவட்ட பொதுக்குழு IDTOILL ரட IMPORTANT NEWS Diqitat டைமஸ்ஆப் 683[ ٥٥٢ ٣٥٨ 0{[4 விளம்பர தொடர்புக்கு Jledia 96595 20537 NIII வர யய ~u ] 0 SDTUதொழிற்சங்கம் குமரி மாவட்ட பொதுக்குழு IDTOILL ரட IMPORTANT NEWS - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_389038_33c75e9a_1769412387332_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=332_sc.jpg)






