புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதே ஒரு சிறந்த அனுபவம்!! ஆனால், அனைத்தையும் படிக்கிறோமோ என்பது doubt தான்!! 😄 சில சமயம் வாங்கிய புத்தகத்தையே கூட நான் மீண்டும் வாங்கியிருக்கிறேன்; வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரியும்!! 😄😂 பலரும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி விடுவார்கள், ஆனால் அவற்றை முழுமையாகப் படித்து முடிப்பதில்லை. ஜப்பானிய மொழியில் இதற்கு "சுண்டோகு" (Tsundoku) என்று ஒரு வார்த்தையே உண்டு!!😄 - அதாவது படிக்கும் ஆர்வத்தில் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைப்பது, ஆனால் படிக்காமல் விடுவது. புத்தகங்களை படிப்பதை காபி குடிப்பதை போல் ஒரு தினசரி பழக்கமாக மாற்றுவது தான் இதற்கு தீர்வு. இங்கே வல்லுனர்கள் கூறும் சில டிப்ஸ்!! ************************************************ 1. தினமும் 30 நிமிட விதி (The 30-Minute Rule):
நமக்கு நேரம் இல்லை என்று சொல்வது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. தினமும் காலையிலோ அல்லது இரவிலோ வெறும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். சராசரியாக ஒரு மனிதரால் நிமிடத்திற்கு 240 வார்த்தைகள் படிக்க முடியும். தினமும் 30 நிமிடம் படித்தால், ஒரு வருடத்திற்கு சுமார் 30 முதல் 50 புத்தகங்களை நம்மால் படித்து முடிக்க முடியும். "நேரம் கிடைக்கும்போது படிப்பேன்" என்று காத்திருக்காமல், "இது படிப்பதற்கான நேரம்" என்று ஒதுக்குவதே சூட்சுமம். ********************************************** 2. எப்போதும் கையில் ஒரு புத்தகம் (Carry a Book Everywhere):
Ryan Holiday கூறுவது போல, வீட்டை விட்டு கிளம்பும்போது 'பர்ஸ், சாவி, போன்' எடுப்பது போல ஒரு புத்தகத்தையும் கையில் எடுத்துச் செல்லுங்கள். பேருந்து பயணம், மருத்துவமனை காத்திருப்பு, அல்லது நண்பருக்காக காத்திருக்கும் நேரங்களில் போனை நோண்டுவதற்கு பதில், இரண்டு பக்கங்களாவது படியுங்கள். இந்த சிறிய இடைவெளிகள் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும். ************************************************3. பிடிக்காத புத்தகத்தை பாதியிலேயே நிறுத்துங்கள்: ஒரு புத்தகம் 50 பக்கங்களுக்கு மேல் உங்களை ஈர்க்கவில்லை என்றால், அதைத் தயங்காமல் மூடி வைத்துவிடுங்கள். வாசிப்பு என்பது சுமை அல்ல, அது ஒரு இன்பம். ***********
4. அட்டை முதல் அட்டை வரை படிக்க வேண்டியதில்லை (Selectivity):
புத்தகங்கள் ஒன்றும் மருந்துச் சீட்டுகள் அல்ல, முழுமையாகக் குடிக்க. எல்லா புத்தகங்களையும் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டிய அவசியமில்லை.
முதலில் பொருளடக்கத்தைப் பாருங்கள்.
உங்களுக்கு மிகவும் ஆர்வமூட்டும் தலைப்பை மட்டும் முதலில் படியுங்கள்.
அந்த ஆர்வம் உங்களை மற்ற பக்கங்களுக்கும் அழைத்துச் செல்லும். ***********
5. சூழலை மாற்றுங்கள் (Visual Cues): புத்தகங்களை அலமாரியில் பூட்டி வைக்காமல், நீங்கள் அடிக்கடி அமரும் சோபா, சாப்பாட்டு மேசை அல்லது படுக்கைக்கு அருகில் வையுங்கள். கண்ணில் பட்டால் மட்டுமே கை தானாக எடுக்கும். ************
6. பழக்கங்களை இணையுங்கள் (Habit Stacking): ஏற்கனவே நீங்கள் செய்யும் ஒரு செயலுடன் வாசிப்பை இணையுங்கள். உதாரணமாக, "காலை காபி குடிக்கும்போது 5 பக்கங்கள் வாசிப்பேன்" என்று முடிவு செய்யுங்கள். ********
7.. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள்: உங்கள் மனநிலைக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுங்கள். பயணம் செய்யும்போது ஒரு நாவல், காலையில் ஒரு தத்துவப் புத்தகம் என மாற்றி மாற்றி வாசிப்பது சலிப்பைத் தவிர்க்கும். ************
8. பக்கங்களை இலக்காக வைக்காதீர்கள்: "இந்த வாரம் ஒரு புத்தகம் முடிக்க வேண்டும்" என்ற அழுத்தம் வேண்டாம். "இன்று 2 நிமிடங்கள் அல்லது 2 பக்கங்கள் வாசிப்பேன்" என்ற சிறிய தொடக்கம் போதும். ***********
********
9. படித்ததை மற்றவரிடம் பகிருங்கள்: நீங்கள் படித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நண்பரிடமோ அல்லது சமூக வலைதளத்திலோ பகிருங்கள். மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அந்த விஷயம் மனதில் ஆழப் பதியும். ஃபெயின்மேன் உத்தி" - கற்பிப்பதற்காக வாசியுங்கள் (The Feynman Technique):
ஒரு புத்தகத்தை சாதாரணமாக வாசிப்பதற்கும், "இதை நான் மற்றவருக்கு விளக்க வேண்டும்" என்ற எண்ணத்தோடு வாசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
*****
10. டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox): சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதில், வாசிப்பை ஒரு தியானமாகப் பாருங்கள். போனைத் தூர வைத்துவிட்டு வாசிப்பது உங்கள் கவனத் திறனை (Focus) அதிகரிக்கும். ***** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
இது உண்மையா அல்லது என் கற்பனையா தெரியவில்லை!! 😄. *********************************************** சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்கள் கூட்டம் பெரும் மகிழ்ச்சியை தருகிறது!! திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது இவ்வளவு கூட்டம் நான் பார்த்ததில்லை. நான் போகும் போதெல்லாம் ஒவ்வொரு ஸ்டாலிலும் ஓரிருவர் தான் இருப்பர்!😄. *************************************************** ஒரு முறை நான் கோவிலுக்கு சென்று விட்டு பக்தி உணர்வு மாறாமல் திருச்சி வருடாந்திர புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்துக் கொண்டே போன போது, ஒரு கம்யூனிஸ்ட் சோசியலிஸம் சம்பந்தமான புத்தகங்கள் மட்டும் உள்ள ஸ்டாலில் நுழைந்தேன். எந்த பதிப்பகம் என்று ஞாபகமில்லை. யாருமே இல்லாத டீ கடையில் டீ ஆற்றுவது போல் அங்கே இருந்தவர்கள் என்னவோ உற்சாகமாகத் தான் இருந்தனர்!! இதையெல்லாம் யார் வாங்குவார்கள் என்று எனக்கு தான் பாவமாக இருந்தது!! ஆனால் உள்ளே நுழைந்தவுடனே ஒரு different consciousnessயை உணர்ந்தேன். ஆனால் அது ஒரு நாத்திகம் கலந்த உணர்வு தான்! எனக்கு அந்த consciousness உணர்வு மிகவும் வித்யாசமாக இருந்தது. பிடித்திருந்தது. அதில் ஆன்மீகத்திற்கே உரிய உண்மை, தூய்மை, உலகத்தை நலிந்தவர்களை பற்றிய அக்கறை போன்ற எல்லாம் இருந்தது. ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லை; ஒரு வகையான நாத்திக உணர்வும் மேலோங்கி இருந்தது. இவ்வளவு அருமையான consciousness நாத்திகத்தில் ஏன் இருக்கிறது என்று தோன்றியது. ஏற்கனவே கடவுளாக இருந்த யாரோ கோபத்தில் நாத்திகராக மாறி அந்த ஸ்டாலில் இருந்திருக்க வேண்டும் என்று கூட தோன்றியது!! "ஏன் இது நாத்திகத்தில் இருக்க வேண்டும்; உண்மையான ஆன்மீகம் தெரியாத consciousness பாவம்!" என்று நினைத்தேன். அந்த consciousness என்னிடம் தொற்றிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு நான் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் போதும் அந்த consciousnessஉம் ஆன்மீகத்தில் நனைவதை உணர்ந்தேன். பிறகு அந்த consciousness முழுமையாக ஆன்மீகத்தில் நுழைந்து பின்னர் கடவுள் போஸ்ட் கூட பெற்று விட்டது என்று நினைக்கிறேன்!!😄 அது யார்; இப்போது என்ன நிலை என்றெல்லாம் தெரியவில்லை!! இது உண்மாயாக நடந்ததா அல்லது என் கற்பனையா?!! *********************************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
படத்தில் இந்தி எதிர்ப்பு; நிஜத்தில் டெல்லியில் பிஜேபி பொங்கல் விழாவா?! 😄 ஒரு வேளை காங்கிரஸ் இந்திரா காந்தி தான் இந்துத்வா, சனாதன திணிப்பு, இந்தி திணிப்பு எல்லாம் போலிருக்கிறது!! 😄😄😂
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஒவ்வொரு பிறந்த நாள் சமயத்திலும் ஒரு பிளாக் பஸ்டர் படம் வரும்; இந்த முறை பராசக்தி அரசியல் படமென்பதால், பிரபாஸின் மசாலா படம் - "ராஜா சாப்" சென்றேன். படத்திலோ பிரபாஸுக்கு மூன்று ஹீரோயின்கள்!! ரஜினி ஸ்டைலில் அசத்துகிறார்!! ************************************************* தியோசபி புத்தகங்கள் படிக்கும் போது souls related problems அருவ உலக சம்பந்தமான விஷயங்களில் மிகவும் கொடுமையானது - "நமது நிழலையே நமக்கு எதிராக ஏவி விடுவது" என்று படித்தேன். என் வாழ்க்கை பிரச்சினைகளில் அதுவும் உண்டு என்று கூறுபவர்கள் உண்டு; சமீபத்தில் "சிவனே என் நிழல்; எனக்கு எதிரி" என்ற அளவிற்கு சென்று விட்டார்கள்!! இவை உண்மை என்று நான் நம்பியதில்லை. இந்த படத்தில் அப்படி ஒரு காட்சி அதிர வைத்தது; பரவலாக அறியப்பட்ட விஷயம் தான் போலிருக்கிறது!! சிவபெருமான் நமக்கு எதிராக வரும் அளவிற்கு அவன் என்றும் முட்டாள் ஆக மாட்டான்; அவனை மேனிபுலேட் செய்யும் அளவிற்கு இங்கு உலகில் யார் தான் இருக்கிறார்கள்?! 😄. ************************************************ மற்றபடி படத்தின் ஹீரோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!! எனக்கு ஒரு ஹீரோயின் கூட இல்லை; பொறாமையாக இருக்கிறது!!😄 மேலும், படத்தில் வருவது போல் என் வில்லன் என்னுடைய தாத்தா அல்ல!!😄 (தமிழ் படத்தில் வரும் பாட்டி வில்லன் போலும் இல்லை!!). தியேட்டரில் நான் எடுத்த செல்பியை ஜெமினி ஏஐயிடம் கொடுத்து மாற்றச் சொன்னால் இப்படி மாற்றி விட்டது!! 😄😂
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து பல யூடியூப் விலாக் பார்த்தேன்!! இவ்வளவு பேர் புத்தகங்கள் வாங்கி படிக்கிறார்கள் என்பது மிக மிக சந்தோஷமாக உள்ளது. தமிழ் சமுதாயம் குறித்து ஒரு பெரிய நம்பிக்கையையே இது ஏற்படுத்தி விட்டது. ஏனென்றால் புத்தகம் வாசிப்பது ஒரு மிகச்சிறந்த பழக்கம். ஒருவருடைய முழு வாழ்க்கை படிப்பினையையும் அதற்கென்று தனியாக ஒரு பிறவி எடுக்காமல் நாம் ஒரு புத்தகம் படித்தே பெற்று விட முடியும். ஒரு சிறந்த சமுதாயம், கலாச்சாரம் உண்டென்றால் அது ஒரு மிகச்சிறந்த இலக்கிய படைப்புகளையும் உருவாக்கியதாக இருக்கும்!! இதற்கு நம் தமிழ் நாகரிகமே சாட்சி!! நாம் தமிழை கொண்டாடுவதும் தமிழ் இலக்கியங்களை கொண்டாடுவதும் ஒன்றே!! நல்ல நூல் படைப்புகளும், அதை ஆதரிக்கும் வாசகர் வட்டமுமே சிறந்த இலக்கியங்களும், உயர்ந்த கலாச்சாரம் நிலைத்து நிற்பதற்கு அடிப்படை************************************* மேலும், புத்தக வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் அகக்கண்களைத் திறக்கும் உன்னதப் பயணம். ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்குச் சமம் என்று சொல்வார்கள்; அது நம் தனிமையை இனிமையாக்கி, சிந்தனைகளைச் செழுமைப்படுத்துகிறது. வாசிப்பதன் மூலம் உலக அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் கிடைக்கிறது. சிறந்த புத்தகங்கள் ஒரு மனிதனின் ஆளுமையைச் செதுக்கி, வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைத் தருகின்றன. நாம் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லாமலேயே பல உலகங்களையும், கலாச்சாரங்களையும், மேதைகளின் சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வாசிப்பு ஒன்றே எளிய வழி. ************************************************ நான் சென்னை பயணம் செய்வதாக இருந்தேன்; அதை புத்தக கண்காட்சி முடிவதற்கு முன் செல்லலாமா என்று கூட தோன்றுகிறது!!😄. நான் பல வருடங்களுக்கு முன்பு பல புத்தகங்கள் வாங்குவேன்; பிறகு அது குறைந்து ஆன்மீகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். இப்போது படிப்பது குறைந்து விட்டது. மீண்டும் படிக்க ஆரம்பிக்க ஆசை!! ************************************************. அதற்காக ஜெயமோகன், பெருமாள் முருகன், சாரு நிவேதிதா, பிரான்ஸிஸ் கிருபா போன்ற சமகால புத்தகங்களை வாங்குவேன் என்று நினைத்து விடாதீர்கள் (ஓடியே விடுவேன்!! எஸ் ராமகிருஷ்ணன் படித்ததில்லை. எனக்கு ஜெயகாந்தனே பிடிக்காது!! சிலர் சமுதாயத்தை சீரழிக்க எழுதுவார்கள்!!) நீங்கள் சிறுகதை இலக்கியங்கள் படிக்க நினைத்தால் புகழ்பெற்ற உலக எழுத்தாளர்களின் தமிழாக்க புத்தகங்களை படியுங்கள். நமது நாட்டிலேயே கூட மற்ற மலையாளம், கன்னடம், மராட்டி, தெலுங்கு என்று அங்கு எழுதப்பெற்ற பழைய புகழ்பெற்ற இலக்கியங்களின் தமிழாக்கத்தை படியுங்கள். ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களும் வாங்குங்கள் (என்னை மாதிரி சில சமயம் வாங்கி பிறகு படிக்காமல் இருந்து விடாதீர்கள்!!). விஜயா பதிப்பகம் நல்ல சைவ சித்தாந்த புத்தகங்களை வெளியுட்டுள்ளது. இரத்தினம் செட்டியார் எழுதிய ஒரு புத்தகம் மிகச் சிறப்பாக இருந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் பன்னிரு சைவ நெறி புத்தகங்களை (சைவம் உங்கள் சமயமானால்) கண்டிப்பாக வாங்குங்கள். ராம்கிருஷ்ண மிஷினில் அத்வைதம் சம்பந்தமான புத்தகங்களை வாங்குங்கள். வெறும் திராவிடம், தமிழ் இலக்கியம் என்று மட்டும் நின்று விட வேண்டாம்!! ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்க தேவையில்லை; ஏதாவது ஒரு புத்தகம் மட்டுமாவது வாங்குங்கள்!! வாசிப்பை நேசிப்போம்; அறிவார்ந்த தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்! *************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மற்ற பண்டிகைகளிலிருந்து மாறுபட்டது - இது இறைவனை வழிபடும் பண்டிகை அல்ல! மற்ற கலாச்சாரங்கள் வேட்டையாடுவதையும், பால் கரப்பதையும், மற்றவர்களும் பொருள் ஈண்டு வாழ்வதையும் தொழிலாக கொண்ட பண்டைய காலத்திலேயே பாசன வசதி எல்லாம் அமைத்து உழவு தொழிலை உலகுக்கு அறிமுகப்படுத்திய கலாச்சாரம் தமிழர்களின் கலாச்சாரம். இதை நினைவு கூர்ந்து உழவுத் தொழிலை போற்றும் பண்டிகை. மேலும், நல்லவர்களாக வாழ்வதற்கு ஆன்மீகம் செல்ல தேவையில்லை; நல்லவர்களாக வாழ்வதே ஆன்மீகத்திற்கு வலுவான அடித்தளம்; அறத்தை சார்ந்து வாழ்வதே நமது அடிப்படை கலாச்சாரம் என்ற தமிழர் பண்பாட்டை நினைவு கூறும் நாள்! மிகப்பெரிய கஷ்டத்தில் இருக்கும் போது இறைவன் வந்து காப்பாற்றுவான் என்பதை விட நாம் செய்யும் அறமே நம்மை காப்பாற்றும் - இதையே முயற்சி திருவினையாக்கும்; தர்மமே தலை காக்கும் என்றெல்லாம் கூறினர்!! இத்தகைய பண்பாட்டு கூறுகளை நினைவு கூறும் நாளாக இந்த பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்; அனைவரும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
இன்றைக்கு எனக்கு வித்யாசமான பர்த்டே விஷஸ்!! பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன குட்டீஸ்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
சென்ற முறை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்ற போது வழக்கம் போல் அங்குள்ள அரசமரத்தடியில் நின்று சிவபெருமான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே மிக உயரத்தில் பூமி மீது நான் மட்டும் நின்று கொண்டு சர்வே செய்வது போல் பாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு பாவனை ஏற்படும்!!😄😂. அன்றைக்கு ஒரு கான்க்ரீட் கல் ஒன்றை கட்டை விரலால் மிதித்துக் கொண்டிருந்ததை கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கல் கரைந்தே போனது! அப்போது எனக்குத் தோன்றியது: இது போல் எனக்கெதிரான ஆணவமும் கரைந்து விட்டதோ?! நான் உடனே கூறினேன் - "ஆணவத்தை காலில் மிதிக்கும் அளவுக்கு நான் சிவன் இல்லை; அதை நீயே செய்!!" அப்போது இந்த பாடல்/ கதை ஞாபகத்திற்கு வந்தது!!
*****************************************""""""********* ஜெயதேவர் அஷ்டபதி "நிந்ததி சந்தனம்" மனதை அப்படியே உருக்கும் ஒரு பாடல். நான் சமீபத்தில் கேட்ட போது கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் கூட வந்து விட்டது!! இந்த பாடல் பிரேமை என்ற மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையை சார்ந்தது. இது இறைவனை அடைய பாடும் திருப்பாவை போன்றதல்ல!! இறைவனை அடைந்த பிறகு வரும் பிரிவாற்றாமையால் பாடுவது!! இதைப் பற்றி பிறகு பார்ப்போம். இந்த பாடல் ஏன் இவ்வளவு உருக்கத்தை தருகிறது?! இந்த பாடலின் ராகம் ஒரு வேளை அத்தகையதோ? என்று பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த "தர்பாரி கனடா" என்ற ஹிந்துஸ்தானி ராகம் (என்னிடம் இருக்கும் மிகப் பிடித்த பாடல்கள் அனைத்தும் இந்த ராகமே!!). உடனே, மற்ற வேறு ஏதாவது பேமஸான பாடல் இருக்கிறதா என்று பார்த்த போது, இந்த பாடல் மற்றும் படம் பற்றி தெரிய வந்தது!! -----"O Duniya Ke Rakhavale" (Baiju Bawra)
---- ஓ துனியா கே ராகாவாலே என்று தொடங்கும் ஒரு அற்புதமான பாடல்!! படம் பைஜு பாவ்ரா. கண்டிப்பாக இந்த பாடலை கேளுங்கள்: https://youtu.be/WQ7SalrDbos?si=nwRx0apx-l8nCUIm
*************************************************இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் அதை விட சுவாரசியம். அற்புதமான படம். இதை இப்போது சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் பிரம்மாண்டமான படமாக எடுக்கவிருக்கிறார் என்று தெரிகிறது!! **************************************************. படத்தின் கதைக்கு முன்பாக ஏன் இதை எழுதுகிறேன் என்று சில விஷயங்கள். நான் கோவிலுக்கு சென்றாலே ஒரே பிராப்ளமாக இருக்கிறது. கோவிலில் தேவாரம் பாட்டு பாடினால் கூட இங்கே பாடக்கூடாது என்று ஆணவம்!! கோவிலுக்கு செல்வது இது போல் பல காரணங்களால் போர்க்களம் செல்வது போல் ஆகி விட்டது!! இதற்கு என்னுடைய முக்கிய சில கொள்கைகள் கூட காரணம். அவற்றை மாற்றிக் கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை: ************* 1. யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியாது (மனிதர்கள் கடவுளாக முடியாது என்பது சைவ சித்தாந்த சமயத்தின் முக்கிய கொள்கை). 2. "ஆன்மீக வாழ்வில் ஒரு கட்டத்தை அடைந்த பிறகு கோவிலுக்கு செல்வது தேவையில்லை" என்ற சனாதன கொள்கையை, ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்கை கடுமையாக எதிர்க்கிறேன். சைவத்தில் முக்தியில் கூட ஐக்கியம் கிடையாது; அப்போதும் நாம் சிவபெருமானின் அடியவர்களே. 3. கோவிலுக்கு சென்று பாடல் பாடி இறைவனை அடைய முடியாது என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது (ஏன் ஸ்ரீராமகிருஷ்ணர் இறைவனை அடைய வில்லையா?!😄). இது போன்ற பல விஷயங்கள். முக்கியமாக கோவிலில் அர்த்த மண்டபம் முன்பாக பாட்டு பாட கூடாது என்பது ஆணவத்தின் உச்சகட்டம்; Reflection of an Evil Power. இந்த ஆணவத்தை தான் அழிக்க கரைக்க வேண்டும்!! அது சரி, படத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?! ஏன் இந்த பாடல் காலில் கல் கரையும் போது தோன்றியது?! ஏனென்றால் இந்த படத்தின் கதையே இது தான்!! 😄😄😂. ************************************************* இந்த படத்தில் மேற்கண்ட பாடல் வரும் கட்டத்தை பார்ப்போம். பைஜு என்று ஒரு சாதாரண பாடகர். தான்சேன் என்பவர் அக்பர் அரசவையில் உள்ள புகழ்பெற்ற பாடகர். தான்சேன் தான் தான் பெரிய பாடகர் என்ற மிக்க ஆணவம் கொண்டவர். ஆக்ரா தெருக்களில் கூட யாரும் பாடல் பாடக் கூடாது; பாடினால் பாடல் புனிதம் கெட்டு விடும்; அரசவையில் நான் பாடுவதை கேட்டுக் கொள்ளுங்கள் என்று, யாராவது ஆக்ரா தெருக்களில் பாடினால் கூட தண்டனை என்று அறிவிக்கிறார்!! 😄 பைஜுவின் தந்தை இறப்பதற்கும் தான்சேன் காரணமாக, அதற்கு பழிவாங்க பைஜு துடிக்கிறார். இசையில் தான்சேனை தோற்கடிப்பதன் மூலம் பழிவாங்கலாம் என்று முடிவு செய்கிறார். "என் மீதுள்ள அதீத காதலால் பழிவாங்கும் முயற்சி தடைபடுகிறது; ஆகையால் நான் பிரிகிறேன்" என்று காதலி பிரிந்து சென்று விடுகிறாள். ஒரு கட்டத்தில் காட்டுக்கு சென்று அலைகிறார்; காதலியையும் இழந்து, பழிவாங்கவும் முடியாமல் சிவபெருமானை பார்த்து பாடுவது தான் தர்பாரி கனடா ராகத்தில் அமைந்த இந்த பாடல். பாடல் வரிகள்: "உலகத்தை காக்கும் இறைவா, என் நிலையையும் சற்று நினைத்துப் பார்; எனக்காக நீ சிறிது கண்ணீர் சிந்து!! .... உன்னுடைய கோவில் இடிந்து விட்டால் கூட மீண்டும் கட்டிக் கொள்ளலாம். என் இதயம் உடைந்தால் உன்னால் மீட்க முடியுமா?!"😄 என்றெல்லாம் பாடல் போகிறது!! இந்த பாடலை பாடியவுடன் சிவபெருமானின் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது!! இதைக் கண்டு பரவசநிலையை அடைந்த பைஜு இந்த பாடலை மெய்மறந்து பாடிக்கொண்டே ஆக்ரா வீதிகளில் வருகிறார். வீதிகளில் பாடல் பாடியதால் கைது செய்து அக்பரிடம் அழைத்து செல்கின்றனர். அங்கு "தான்சேன் யார் நான் பாடக்கூடாது என்று சொல்வதற்கு?!" என்று தான்சேனை இசைப் போருக்கு பைஜு அழைக்கிறார். ஒரு கல்லை வைத்து யார் பாடினால் இந்த கல் கரைகிறதோ அவர் தான் வெற்றி பெற்றவர் என்று அக்பர் முடிவு செய்கிறார். கடைசியில் பைஜு பாடிய பாடலில் கல் கரைந்து போகிறது!! 1952ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த பாடல் சட்டென்று அன்றைக்கு நினைவுக்கு வந்தது!! சிவபெருமானால் எனக்கு எதிரான அனைத்து ஆணவங்களும் அழிக்கப் படும் என்பதில் எனக்கு ஐயமில்லை!! 😄😂 இந்த ஆணவங்களால் என் ஆன்மீகத்தை எதுவும் செய்ய முடியாது!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருத்தவத்துறை மேவிய சப்தரிஷீஸ்வரா போற்றி!! அனைவருக்கும் திருவாதிரை திருநாள் ஆருத்ரா தரிசனம் வாழ்த்துக்கள்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
என் இனிய நண்பர்களே,
உனக்குத் தான் இந்த புத்தகம். படி, மனப்பாடம் செய். நீ ஒரு கணமும் துக்கப்படமாட்டாய். உனது பிரச்சனைகளுக்கு இதில் தீர்வு உண்டு. இது எந்த மதத்துக்கும் உரியது அல்ல. இது மனித சமுதாயத்துக்கானது.
கீதை காந்திக்கு தாய். காந்தி தனது பிரச்சினைகளுக்கு இதிலிருந்து தீர்வு பெற்றார். நீயும் அவரை பின்பற்றி, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழலாம்.
என் உயிர் நண்பனே நீ உடல் அல்ல ஆத்மா. உன் கஷ்டங்கள் உடலுடன் சம்பந்தப்பட்டது. நீ ஆத்மா என்று புரியும்போது எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும்.
புறப்படு இந்த உலகை வெல்ல. பணம் பதவி பெரும் புகழ் எல்லாவற்றையும் அடைவாய்.... ஒரு நாள் இவை எல்லாம் தேவை இல்லையென விடுபடத் தயாராகு.
ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய்.
ஒவ்வொரு நாளும் இந்த புத்தகத்தின் சில பக்கங்களை படி - கொலை கொள்ளை போன்ற செய்திகளை படித்து நிம்மதி இழக்காதே. உன் மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் புத்தகம் இது.
நீ எந்தவித கவலையும் இல்லாமல் நூறு வருடம் ஆரோக்கியமாகவும் அமைதியோடும் வாழ். நீ இந்த உலகை மேலும் சிறந்த இடமாக மாற்று. உன்னுடைய தாய் தந்தை உறவினர் எல்லாம் உன்னால் பெருமை கொள்ளட்டும். உன்னை முன்உதாரணமாக்கி வாழட்டும்.
பேரன்புடன், பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ்
†**†***††*********************************** எவ்வளவு அருமையான அற்புதமான முன்னுரை!! பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ் - கேள்விப்பட்டது கூட இல்லை!! சனாதனத்தில் இப்படிப்பட்ட மகான்கள் மகாத்மாக்களும் இருக்கிறார்கள்!! - - "ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய்."!! ******************** ஸ்ரீரங்கம் கோவிலில் க்யூவில் இருக்கிறேன் - இந்த பாக்கெட் கீதை புத்தகம் இலவசமாக ஒருவர் கொடுத்தார்!! இதற்காகவே கூட இங்கே வரலாம்!! ************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம




![ஆன்மீக வாழ்க்கை - TSUNDOKU L ] ೩೫ನ ಊಳನ | "ಟ- 7 Lryg " , Iaaly ALa % tpihar wth ur ஈபபவு ! TSUNDOKU L ] ೩೫ನ ಊಳನ | "ಟ- 7 Lryg " , Iaaly ALa % tpihar wth ur ஈபபவு ! - ShareChat ஆன்மீக வாழ்க்கை - TSUNDOKU L ] ೩೫ನ ಊಳನ | "ಟ- 7 Lryg " , Iaaly ALa % tpihar wth ur ஈபபவு ! TSUNDOKU L ] ೩೫ನ ಊಳನ | "ಟ- 7 Lryg " , Iaaly ALa % tpihar wth ur ஈபபவு ! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_139839_1d9b8145_1768994103457_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=457_sc.jpg)

![ஆன்மீக வாழ்க்கை - | PARASAKTHI TEAM FACES BACKLASH FOR ATTENDING PONGAL CELEBRATIONS IN DELHI Sudha Kongara is facing backlash over her comments on Parasakthi's censorship delay;| accusing the team of pondering to with netizens the BJP. The criticism follows viral Pongal| celebration photos with Prime Minister Narendra Modi According to netizens attending the celebrations at a Union minister's residence] contradicts the film'$ core theme opposing] Hindi imposition especially after Modi did not mention Pongal in his speech:| | PARASAKTHI TEAM FACES BACKLASH FOR ATTENDING PONGAL CELEBRATIONS IN DELHI Sudha Kongara is facing backlash over her comments on Parasakthi's censorship delay;| accusing the team of pondering to with netizens the BJP. The criticism follows viral Pongal| celebration photos with Prime Minister Narendra Modi According to netizens attending the celebrations at a Union minister's residence] contradicts the film'$ core theme opposing] Hindi imposition especially after Modi did not mention Pongal in his speech:| - ShareChat ஆன்மீக வாழ்க்கை - | PARASAKTHI TEAM FACES BACKLASH FOR ATTENDING PONGAL CELEBRATIONS IN DELHI Sudha Kongara is facing backlash over her comments on Parasakthi's censorship delay;| accusing the team of pondering to with netizens the BJP. The criticism follows viral Pongal| celebration photos with Prime Minister Narendra Modi According to netizens attending the celebrations at a Union minister's residence] contradicts the film'$ core theme opposing] Hindi imposition especially after Modi did not mention Pongal in his speech:| | PARASAKTHI TEAM FACES BACKLASH FOR ATTENDING PONGAL CELEBRATIONS IN DELHI Sudha Kongara is facing backlash over her comments on Parasakthi's censorship delay;| accusing the team of pondering to with netizens the BJP. The criticism follows viral Pongal| celebration photos with Prime Minister Narendra Modi According to netizens attending the celebrations at a Union minister's residence] contradicts the film'$ core theme opposing] Hindi imposition especially after Modi did not mention Pongal in his speech:| - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_820233_83bfc8e_1768798818667_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=667_sc.jpg)



![ஆன்மீக வாழ்க்கை - BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] - ShareChat ஆன்மீக வாழ்க்கை - BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_436385_a55cd79_1768088430434_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=434_sc.jpg)
