அன்பை விட புரிதல் தான் கெட்டி
நம்மில் பலபேர் நினைக்கிறோம், ஒரு உறவு அது காதலா இருந்தாலும் சரி, நட்பா இருந்தாலும் சரி நீடிச்சு நிக்கணும்னா அங்க அளவு கடந்த அன்பு, இருக்கணும்னு. ஆனா நிஜம் என்ன தெரியுமா?
ஆழமான அன்பை விட சரியான புரிதல் தான் ஒரு உறவை ரொம்ப காலத்துக்கு வாழ வைக்கும். ஏன் அப்படி சொல்றேன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்...
அன்பு மட்டும் போதுமா
அன்புங்கிறது ஒரு ஆரம்ப புள்ளி மாதிரி. ஒருத்தர் மேல நமக்கு ரொம்ப பாசம் இருக்கலாம், அவங்களுக்காக என்ன வேணா செய்யலாம்னு தோணலாம். ஆனா, அந்த அன்பு மட்டும் இருந்தா போதாது. ஏன்னா, அன்பு சில நேரத்துல நம்ம கண்ணை மறைக்கும். நான் உன் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கேன், அப்போ நான் சொல்றதை நீ ஏன் கேட்க மாட்டேங்கிற? அப்படிங்கிற ஒரு சின்ன அதிகாரம் அங்க வந்துடும்.
ஆனா புரிதல் அப்படி கிடையாது. புரிதல் இருந்தா அங்க ஈகோ (Ego) இருக்காது.
அவங்க ஏன் இன்னைக்கு கோவமா இருக்காங்க?
அவங்க ஒரு விஷயத்தை ஏன் இப்படி செய்றாங்க?
அவங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது? இந்த மாதிரி விஷயங்களை நாம மனசார புரிஞ்சுக்கிட்டா, அங்க சண்டையே வந்தாலும் அது சீக்கிரம் முடிஞ்சுடும்.
நீண்ட கால உறவின் ரகசியம்
பெரிய பெரிய சண்டைகள் வர்றதுக்கு காரணமே "நீ என்னை புரிஞ்சுக்கவே இல்ல, அப்படிங்கிற அந்த ஒரு வரி தான். நம்மளை ஒருத்தர் அப்படியே ஏத்துக்கிறாங்க, நம்ம குறைகளையும் சேர்த்து நேசிக்கிறாங்கன்னு தெரிஞ்சா, அந்த இடத்துல நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி தான் ஒரு உறவை பல வருஷங்களுக்கு கொண்டு போகும்.
அன்புங்கிறது ஒரு செடிக்கு ஊத்துற தண்ணி மாதிரி. ஆனா புரிதல்ங்கிறது அந்த செடி வளர்றதுக்கு ஏத்த மண் மாதிரி. மண் சரியா இருந்தா தான், செடி எவ்வளவு காத்து அடிச்சாலும் சாயாம நிக்கும்.
முக்கியமான விஷயம் என்னதுனா அதிகமா நேசிக்கிறதை விட, சரியா புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க... #💝இதயத்தின் துடிப்பு நீ ✍️