#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள் #📜கவிதையின் காதலர்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💖நீயே என் சந்தோசம்🥰
#நாம் தமிழர் #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏என் தேசப்பற்று
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்
வெல்க தமிழ்
தமிழன்னையே போற்றி
ஆரிய திராவிடத்தால்
தமிழர் வீழ்ந்தோம்
நம்முடைய கண்முன்
தமிழினம் அழிந்தது
நவீன உலகில்
புறநானூற்று மாவீரன்
தமிழினத் தலைவன்
பிரபாகரனை இழந்தோம்
தமிழகத்திலும் உரிமையை
இழந்து பரிதவிக்கிறோம்
தமிழ்க்குடிகள் அனைவரும்
தமிழால் இணைவோம்
ஆதித்தமிழ்க் குடிகளே
ஒன்றிணைவோம் வாருங்கள்
தமிழ்பேசுவோர் எல்லாம்
தமிழர் இல்லை
தமிழால் இணைந்து
தமிழ்மொழி காப்போம்
தமிழர் பண்பாடு
உரிமையும் மீட்போம்
ஆரியதிராவிட மாயையில்
இருந்து விழிப்போம்
ஆதிக்குடி தமிழ்க்குடி
அறத்தில் கட்டமைப்போம்
தமிழே நம்முயிர்
விழித்திடு தமிழா
ஆரியமும் திராவிடமும்
தமிழர்களுக்கு பேராபத்து
தாய்மொழி தமிழ்மொழி
தமிழர்நாவில் தவழட்டும்
கலப்பின்றி பேசும்
பழக்கம் மலரட்டும்
தொடக்கக்கல்வி முதல்
ஆராய்ச்சி படிப்புவரை
எங்கும் தமிழே
இருக்க வேண்டும்
ஆட்சிமொழியாக தமிழே
மலர்ந்திட வேண்டும்
ஆதித்தமிழனே அதிகாரம்
அறத்தமிழில் ஆளட்டும்
தமிழர்கள் நீதிநெறியை
உலகம் அறியட்டும்
தமிழன்னை அருளும்
வேண்டி வணங்குவோம்
✍️தமிழ் தாசன்
#💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💌 என் காதல் கடிதம் #💑என் முதல் காதல்😊 #💝இதயத்தின் துடிப்பு நீ
மாது-அறியப்படாத ஆளுமை
*********************************
மாதவள் மரபுக்கவிதையில்
உலாவரும் பைந்தமிழச்சி
மாங்கனி நகரில்
புதுக்கவியில் மிளிர்கிறாள்
இலக்கியத்தில் ஊடுருவி
தித்திக்கும் தேன்துளியவள்
இலக்கணத்தில் படர்ந்து
உணர்வோடு இனிக்கிறாள்
வார்த்தைகளில் பிறந்து
சிறகுகளில் பறக்கிறாள்
வானளாவிய உயர்ந்து
கனவுகளை விதைக்கிறாள்
சிந்தையின் எண்ணமதை
எழுதும் விரல்களே
சிறந்ததொரு காவியம்
நிலைத்து நிற்கும்
எதுகை மோனையில்
நித்தமும் வருவாள்
எங்கும் புன்னகையில்
வீசியே நகர்வாள்
வலியும் தாங்கி
அழாமல் பயணிப்பாள்
வலிமை பெற்று
சுடரொளி வீசுவாள்
ஆசைகளும் கனவுகளும்
நிறைந்து ஓடுபவள்
ஆனந்தமாய் வாழ்ந்திட
ஆதங்கத்தில் சுழலுகிறாள்
சட்டங்கள் படித்து
நாட்டையும் ஆளுவாள்
சரித்திரம் படைத்திட
சாதனையும் புரிவாள்
✍️ஆதி தமிழன்
#📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #💚I Love தமிழ்நாடு
வணக்கம்
சிறுகதை: உழவும் உணர்வும்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்”
கல்லும் மண்ணும் நீரும் நெருப்பும் உருவாகி காலத்தில் இருந்து உழவும் உணர்வும் தமிழர் வாழ்வில் அங்கம் வகிக்கிறது ஆதிகாலம் முதல் இன்று வரையில் தமிழர்களின் அடையாளமாக விளங்குவது உழவுத்தொழில் ஆகும்.
நாகரிகம் தொடக்கம் நதிக்கரையிலும் ஆற்றங்கரையிலும் அண்டி தனது குடியிருப்புக்களை அமைத்தான். ஆதி தமிழர் பண்பாடு உணர்வோடு வாழ்வாதாரமாக உழவுத்தொழில் விளங்கியது.
நெல்மணி கம்பு கேழ்வரகு சோளம், அவரை தொவரை கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் பூண்டு முதலில் தன் சொந்த குடும்பத்திற்கும் பிறகு உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.
மக்கள் சிறு சிறு குன்றுகளும் காடுகளும் செழிப்பான முறையில் உழவு தொழில் உணர்வோடு செய்து வாழ்ந்து வந்தனர். தொழில்களிலே மேன்மையான தொழில் உழவுத்தொழிலே ஆகும். உழவு இல்லையேல் இவ்வுலகில் வாழ்வோரிற்கு உணவு இல்லை. அதனால் தான் உழவுத்தொழிலை நாம்போற்றி வணங்குகிறோம்.தை முதல் நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். மண்ணை உழுது அதிலிருந்து வேளாண்மை செய்து இந்த உலகத்திற்கு உணவை அளிக்கின்றோம். சீரும் சிறப்புமாக தமிழன் வாழ்வதற்கு உழவு தொழில் மட்டுமே காரணமாகும். உழவுத் தொழிலை திருவள்ளுவர் ஒளவையார் தொல்காப்பியர் மற்றும் கபிலர் போன்ற சான்றோர்கள் உழவு தொழில் மேன்மையை உணர்வோடு குறிப்பிட்டு உள்ளார்கள். உழவுத்தொழிலை போற்றிப் பாதுகாப்பது தமிழரின் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாகும்.உழவுத் தொழிலை உணர்வுடன் போற்றி சிறப்புடன் பாதுகாத்து வாழ்வோம்.
நன்றி 🙏
✍️ஆதி தமிழன்
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #📝 பழமொழிகள் #👉வாழ்க்கை பாடங்கள் #📝என் இதய உணர்வுகள்
#👉வாழ்க்கை பாடங்கள் #📝என் இதய உணர்வுகள் #📝 பழமொழிகள் #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
#✍️தமிழ் மன்றம் #📝என் இதய உணர்வுகள் #🙏நமது கலாச்சாரம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு
#📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #📜கவிதையின் காதலர்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
மாது - ரகசியம் நிறைந்தவள்
*********************************
மங்கை ஒருத்தி
மனம் கவர்ந்தாள்
மயக்கம் கொண்டு
நேசத்தை பொழிந்தேன்
கவிநயம் காற்றினிலே
எழிலாக வந்திடுவாள்
கனிந்து விரிந்து
கரைந்தோடி இனிக்கும்
ஆசையும் காதலும்
தவித்திடும் உள்ளத்திலே
ஆழ்கடலின் முத்துகளில்
பேரன்பும் துளிர்க்கட்டும்
காற்றின் மொழியில்
அலையாய் எழும்பிடும்
காலமெல்லாம் அனலாய்
தீப்பொறி பறக்கும்
சித்திரத்தில் கலையாய்
நித்தமும் மிளிர்ந்திடும்
சிலையின் கலைநயம்
கனவிலும் தழுவிடும்
மாதுளமாய் மாதவள்
ஓவியமாய் நிலைத்திடுவாள்
மாஞ்சோலை கனிந்து
கண்ணெதிரே அசைந்தாடுதே
ஈர்ப்புகளும் மனதில்
எல்லைக்குள் சுழலும்
ஈரெழு உலகில்
அறியப்படாத ரகசியம்
நிறைவேறா ஆசைகள்
நாள்தோறும் எழும்பிடும்
நிழலாய் நீண்டுக்கொண்டே
மரணம்வரை தொடரும்
✍️ஆதி தமிழன்
#👉வாழ்க்கை பாடங்கள் #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள் #✍️கவிதை📜 #🚹உளவியல் சிந்தனை