💞 அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்! யாஅல்லாஹ்!யாஅல்லாஹ்!
உன்னுடைய திருப்தியான கண் கொண்டு எங்களைப் பார்ப்பாயாக!
அப்பார்வையினால் எங்களின் பாவங்கள் அழிக்கப்படவேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் பரிசுத்தமடைய வேண்டும்!
அப்பார்வையினால் நரகநெருப்பிலிருந்து எங்கள் கழுத்துகள் விடுவிக்கப்பட வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் உள்ளங்கள் விரிவடைய வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் முகங்களில் ஒளி வீச வேண்டும்!
அப்பார்வையினால் எங்களின் நோய்கள் குணமாக வேண்டும்!
அப்பார்வையினால்் எங்களின் பலவீனங்கள் வெற்றிகொள்ளப்பட வேண்டும்!
அப்பார்வையினால் உடைபட்டவைகள் ஒன்றிணைய வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் கவலைகள் நீங்கவேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் இம்மை, மறுமைக்கான தேவைகள் நிறைவேற வேண்டும்.!
அப்பார்வையினால் எங்கள்
வணக்க வழிபாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்!
அப்பார்வையினால் எங்கள் காரியங்கள் அனைத்தும் இனிதே முடியவேண்டும்!
அப்பார்வையினால்
உள்ளிருந்தும் வெளியே இருந்தும் வரும் ஆபத்துகள் நீங்க வேண்டும்!
அப்பார்வையினால்
இம்மை மறுமைக்கான அனைத்து நலன்களும் எங்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும்!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #🤲துஆக்கள்🕋
💞யா அல்லாஹ்!
யா அவ்வலில் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வத்தில் மத்தின்
யா ராஹிமல் மஸாக்கீன
யா அர்ஹமர்ராஹிமீன்..!
யா பத்தாஹ் ...!!
வெற்றி அளிப்பவனே
உன்னை அடைவதில் எங்களுக்கு வெற்றியை தருவாயாக..!!
யா ரஹ்மானே..!!
நீ மன்னிக்கக் கூடியவன் மன்னிப்பை விரும்பக் கூடியவன் எங்கள் அனைவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்...!
நற்செயல்கள் நல்ல அமல்கள் செய்யக்கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் துஆக்களை கபூல் செய்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீரை எம்பெருமானார் கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் தந்து ,,அருந்தக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே...!!
யா அல்லாஹ்...!!
எங்கள் அஃமால் நாமா என்னும் பட்டோலையை எங்கள் வலது கரத்தில் தந்தருள் ரஹ்மானே..!
யா அல்லாஹ்...!!
எங்களை ஜஹன்னம் என்ற கொடிய நரகத்தில் இருந்து தூரமாக்கி வைத்தருள் ரஹ்மானே..!!
யா அல்லாஹ்...!
எங்களை ஜன்னத்துல் ஃபிர்தோஸ் என்ற சொர்க்கத்தில் நுழைய செய்தருள் யா ஹைய்யூ யா கைய்யூமே...!!
யா அல்லாஹ்..!
நாங்கள் ரய்யான் என்ற சிறப்பு நுழைவுவாயிலாக சொர்க்கம் செல்ல துணை செய் யா ரஹீமே...!!
யா அல்லாஹ்...!
எங்களுக்கு தவ்பா கேட்க தெரியவில்லை ரஹ்மானே !
உன்னிடம் கை ஏந்தி நிற்கிறோம் ரஹ்மானே!
யா அல்லாஹ்...!!
எங்களை பொருந்திக் கொள் ரஹ்மானே!
உன்னிடம் மிஸ்கினாக பிச்சை கேட்கிறோம் ரஹ்மானே !
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களின் காரணமாக எங்களை நரகத்தில் தள்ளிவிடாதே ரஹ்மானே !
யா அல்லாஹ்...!
உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே...!
யா அல்லாஹ்...!!
உன்னிடம் அழுது கேட்கிறோம் ரஹ்மானே எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு யா ஜப்பாரே !
யா அல்லாஹ்...!!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவத்தையும் மன்னித்தருள்,,
யா அர்ஹமர்ராஹிமீன்
யா ரஹ்மானே...!!
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🤲துஆக்கள்🕋
💞நபிமொழி!
வாழ்வாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த அழகிய துஆ!
அல்லாஹீம் மஃபிர்லீ தன்பீ
வவஸ்ஸிஉ லீ பீ தாரீ வபாரிக் லீ பீ ரிஸ்கீ
யா அல்லாஹ்!
என் பாவங்களை மன்னிப்பாயாக!
என் வீட்டில் விசாலதன்மையை ஏற்படுத்துவாயாக!
இறைவா என்னுடைய வாழ்வாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக! #🕌இஸ்லாம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ்
💞அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுத் தந்த துஆ!
அல்லாஹ்வே! நான் நல்வழி பெற்றோரின் தவ்பீக்-நல்லுதவியை,
,ஈமான் உறுதியுடையோரின் நல்லமல்களை,
தவ்பா செய்தோரின் தூய எண்ணத்தை,
பொறுமையாளரின் அசையாத உறுதியை,
அச்சம்கொண்டோரின் முயற்சியை,
ஆசைகொண்டோரின் தேடலை,
பேணி நடப்போரின் வணக்கத்தை,
கல்வியாளரின் ஆத்ம ஞானத்தை,
உன்னை நான் சந்திக்கும் வரை
பெற்றிருக்க உன்னிடம் கேட்கிறேன்.
எங்கள் அல்லாஹ்வே!
உனக்கு மாறு செய்வதை என்னை வெறுக்கச்செய்யும் அச்சத்தை என்னுள் உருவாக்க உன்னிடம் கேட்கிறேன்.
அந்த அச்சம் உன் திருப்பொருத்தத்தை பெற என்னைத் தகுதி பெறச்செய்யும் நல்லமல்களை, நான் செய்ய என்னைத் தூண்டும் அளவு வேண்டும்.
அந்த அச்சம ,உனக்கு பயந்து தூய்மையான தவ்பா செய்யும் அளவு வேண்டும்
அந்த அச்சம் உனக்காக வெட்கமடைந்து மனத்தூய்மையை உனக்காகவே ஆக்கும் அளவு வேண்டும்
எல்லா காரியங்களிலும் உன் மீதே நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற
உன் மீதே நல்லெண்ணம் ஏற்படுத்துகின்ற
உனக்கு மாறு செய்வதைத்
தடுக்கின்ற இறை அச்சத்தைக் கேட்கிறேன்,
------(தப்ரானி)
رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ
ரப்பிஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்ஸுக்னீ, வர்ஃபஃனீ
யா அல்லாஹ் !என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு ரிஜ்க்களிப்பாயாக ! எனக்கு உயர்வை அளிப்பாயாக!
யா அல்லாஹ்!
وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”
(அல்குர்ஆன் : 7:156)
ஆமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
💞 நபிமொழி!
வளமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை பாத்திமா (ரலி)அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ!
يا أول الأولين ويا آخر الآخرين
ويا ذا القوَّةِ المَتين
ويا راحِم المساكين و يا أرحَم الرَّاحِمين #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்
💞கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆ!
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
இறைவா!
உன்னை நினைப்பதற்கும்!
உனக்கு நன்றி செலுத்துவதற்கும்! உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!
என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டுவிடாதே’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301,
அஹ்மத் 21109 #📗குர்ஆன் பொன்மொழிகள்
💞தாயின் அன்பு !
மகனிடம் ஒரு தாய் சொன்னாள்!
மகனே!
இவ்வுலகில் உன்னை ஆயிரம் பேர் நேசித்தால் அதில் முதலாவதாக நான் இருப்பேன்!
உன்னை ஒரே ஒருவர் மட்டும் தான் நேசிக்கிறார் எனச் சொல்லப்பட்டால் அந்த ஒருத்தி நானாகத்தான் இருப்பேன்!
உன்னை நேசிக்க ஒருவருமே இல்லை எனச் சொல்லப்பட்டால் நான் மரணமடைந்துவிட்டேன் என்று பொருள்!
இஸ்லாம் கூறுகிறது!
தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🤲துஆக்கள்🕋