Makkal Mugam
ShareChat
click to see wallet page
@epaper
epaper
Makkal Mugam
@epaper
Daily Updates
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்தி.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் வேலூர் மாவட்டம் பொய்கையில் ஏ.வி.குமரன் மருத்துவமனையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி.நந்தகுமார் திறந்து வைத்தார். வேலூர், டிச 15 - வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பொய்கை சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.வி.குமரன் மருத்துவமனை புதிதாக திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பபாபு, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் குமர பாண்டியன், பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.வெங்கடேசன், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர். மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் திரு ராமமூர்த்தி - ஜெயலட்சுமி, செல்வராஜ் - மேகலா ஆகியோர் வரவேற்றனர். மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சமூக நலனோடு பயனளிக்கும் வகையில் தரமான மருத்துவம் வழங்கப்படும் என ஏற்புறையில் மருத்துவர் விஷ்ணுகுமரன் தெரிவித்தார். முடிவில் மருத்துவர் அபர்ணா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்திகள - -0 -0 - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட்  போட்டியினை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.  **** சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட்  போட்டியினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் துவங்கி வைத்து, வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கிளைச் செயலாளர் மலைராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - 3.51 pm 3.51 pm - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்ய கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கிருஷ்ணகிரி, டிச 15. கிருஷ்ணகிரிமாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்ட நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் இதில் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் P.R.பாண்டியன் அவர்கள் 2015 வாக்கில் டெல்டா மாவட்டங்களில் ONGC நிலத்தடியில் உள்ள எவ்வாயுவை எடுத்தால் விவயசாயம் பாதிக்குப்படும் என அனைத்து விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்க்கு இனங்க அவர் தலைமையில் டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்தினரர்கள் அறைய அரசு இவர் மீதும் மற்ற சில விவசாயிகள் மீது வழக்கு போட்டது இந்த வழக்கு தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம் விசாரித்து இந்த போராட்டத்தால் பெரியசேதாரம் இல்லை எனவே இந்த வழக்கை தல்லுபடி செய்யலாம் என பரிந்துரை வந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த வழக்கை அரசு மீண்டும் கையில் எடுத்து விசாரணை முடியாத நிலையில் 13 ஆண்டுகள் கூட இருந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்து சிறையில் அடைத்துள்ளனர். அன்றைய அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து எரிவாயு எடுக்க மறைமுகமாக தடை போட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகவே தண்டனை விதிக்கப்பட்ட பி ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவர் மீதும் உள்ள வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள கிருஷ்ணகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத அருள்முருகன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துக் கொண்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் அவர்களுக்கு முன்னாள் மீமாண்ட பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் டிராகோ ஆட்டோ டீடெய்லிங் ஷோரூம் திறப்பு விழா வேலூர், டிச 15 - வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ அலுவலகம் அருகில் 5வது அவென்யுவில் கிங்ஸ்மென் குருப்பின் அங்கமான டிராகோ ஆட்டோ டீடெய்லிங் ஷோரூம் திறக்கப்பட்டது. விழாவில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, பள்ளிகொண்டா பேரூர் திமுக செயலாளர் டி.எம்.ஜாகிர் உசேன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் ஷோரூம் உரிமையாளர்கள் சி.கிஷோர் பாபு. ஜா.ஜாபர் அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
செய்திகள் - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள் ராமநாதபுரத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சேதுபதி அரசு கலைக்கல்லூரி செய்தம்மாள் பொறியியல் கல்லூரி நல்லாங்குடி உத்தரகோசமங்கை நல்லிருக்கை ஆகிய பகுதிகளுக்கு மகளிர் விடியல் பயண பேருந்தை தி.மு.க மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ச முத்துராமலிங்கம் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.பஸ்ஸில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள - 00 00 00 00 - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள்
செய்திகள - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள்
செய்திகள - ShareChat
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் #செய்திகள
செய்திகள் - ShareChat